என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கப்பதொரை கிராம மக்கள்"

    • நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாததால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
    • அடிப்படை தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட கப்பத்தொரை கிராமத்தின் ஒரு பகுதி கம்ளிகார் லைன் பகுதியாகும். இப்பகுதியில் சுமார் 40 குடும்பத்தினர், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி நஞ்சநாடு மற்றும் இத்தலார், அவலாஞ்சி சந்திக்கும் பகுதி உள்ளது. இங்கு நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பருவ மழை காரணமாக இப்பணிகள் தொய்வு ஏற்பட்டது.

    ஆனால் நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற பெயரில் புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனால், இப்பகுதியில் அடிப்படை தேவையான குடிநீர் இணைப்புகளை துண்டித்து மாதக்கணக்கில் குடிக்க நீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்தாலும் சரியான முறையில் பதில் அளிக்ககூட முன்வருவதில்லை.

    எனவே, மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×