என் மலர்
நீலகிரி
- உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது.
- பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்
கோத்தகிரி
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள் ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனூர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.
வருடந்தோறும் கோடை விழாவையொட்டி மே மாதத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இரண்டு நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். காய்கறி கண்காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.
இது மட்டுமின்றி உள்ளூர் பொது மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக சிறுவர் விளையாட்டுப் பூங்கா விளங்கி வருகிறது. சமன்படுத்தும் பணி கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பூங்காவில் உள்ள புல் தரைகளில் புற்கள் அதிக அளவு வளர்ந்து இருந்தன. மேலும் பூங்காவில் உள்ள மலர்செடிகளில் பூத்திருந்த மலர்கள் அழுகத் தொடங்கின.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. எனவே பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். புல் தரைகளில் அதிகப்படியாக வளர்ந்த புற்களை எந்திரம் மூலம் வெட்டி சமப்படுத்தும் பணி, அழுகிய மலர் செடிகளை அகற்றி புதிய நாற்றுக்கள் நடும் பணி, களைச்செடிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
- தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.
ஊட்டி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது குன்னூரில் அமைந்துள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைளை கேட்டறிந்தார். அப்ேபாது டேன்டீ கழகத்தை லாபம் ஈட்டக்கூடியதாகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் பணிக்கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான 29.38 கோடி ரூபாயை விடுவிக்க கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்பட்டது.
இத்தொகையினை வழங்குவதன் மூலம் 1066 ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் 101 ஓய்வு பெற்ற ஊழியர்களும் பயன்பெறுவர். மேலும், தற்போது பணிபுரிந்து வரும் 3800 நிரந்தர தொழிலாளர்களும் மற்றும் 212 ஊழியர்களும் பயன்பெறுவர்.
அதன்படி அரசிடமிருந்து ரூ.29.38 கோடி நிதி பெறப்பட்டது. அதனை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், குன்னூர் பதிவு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக நிர்வாக இயக்குநர் மஞ்சுநாதா, ஐஎப்எஸ். பொதுமேலாளர் ஜெயராஜ். ஐஎப்எஸ் மற்றும் இதர டேன்டீ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- சக்கரை போன்ற நோய்க்கு மருந்து வழங்கப்பட்டது.
- படுகர் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மக்கள் மேம்பாடு மற்றும் காத்துப்பேணுதல் அறக்கட்டளை தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் பொருளாதாரம், உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்வி வசதி போன்ற பல்வேறு திட்டங்களை மாநில அரசுடன் ஒன்று இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டிஅருகே உள்ள இத்தலார் சமுதாயக் கூடத்தில் மலை கிராமங்களில் வசிக்கும் படுகர் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைவர் ஆதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் இருதய நோய், கண் சிகிச்சை, பொது அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை, சக்கரை போன்ற நோய்க்கு மருந்து வழங்கப்பட்டது.
- வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.
- முடிவில் நகர துணை செயலாளர் நன்றி கூறினார்
ஊட்டி,
ஊட்டி நகர திமுக சார்பில் தி.மு.க முப்பெரும் விழா பொதுக்கூட்டம் ஊட்டி ஏ.டி.சி.சுதந்திர திடலில் நடைபெற்றது. ஊட்டி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் சிறப்புரையாற்றினர்.இதில் மாவட்ட அவைத்தலைவர் பில்லன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர். இளங்கோவன், கே.எம்.ராஜூ, கே.ஏமுஸ்தபா, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன் குமார், சதக்கத்துல்லா, நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் நந்திரவி, ஒன்றிய செயலாளர்கள் காமராஜ், லாரன்ஸ்,பரமசிவம், நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மா வட்ட இளை ஞர் அணி அமை ப்பாளர் இமயம் சசிகுமார், மா வட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருகினை ப்பாளர் மணிகண்டன், பேச்சாளர் ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேஷ், கார்த்திகேயன், தம்பி இஸ்மாயில், நகர அவைத் தலைவர்ஜெயகோபி, நகர பொருளாளர் அணில் குமார், ஜெயராமன், நகர மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், ரவி, ரமேஷ், விஷ்ணு பிரபு, ரகுபதி, கஜேந்திரன், கீதா, நாகமணி, வனித்தா, மேரி பிளோரினா, பிரியா, பிளோரினா புஷ்பராஜ், திவ்யா, மீனா, கழக நிர்வாகிகள் மஞ்சுகுமார், விஜய குமார், புஷ்பராஜ், ஹென்றி, சுரேஷ், காந்தள் சம்பத், தியாகு, ஸ்டீபன், ஸ்டேன்லி, ரஞ்சித், ஜெயவேலு, வரதன், ராஜ்குமார், ஸ்டேன்லி, தேவா, குழந்தை நாதன், ஒன்றிய கழக நிர்வாகிகள் கெந்தொரை மகேஷ், பசவன், தொரை, லூயிசா, பிரேமா, பியூலா ஜெனட், சைலஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- தி.மு.க சார்பில் கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா நடந்தது.
- நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிார்.
ஊட்டி
குன்னூர் நகர தி.மு.க சார்பில் குன்னூர் வி.பி.தெரு கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமை தாங்கினார்.விழாவில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிார்.
இதில் மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, வெங்கடேஷ், செல்வம், குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகீர் உசேன், ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ் துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன் வினோத் நகர பொருளாளர் ஜெகநாத் ராவ் இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் துணை அமைப்பாளர்கள் சாதிக் பாட்ஷா சையத் மன்சூர் செல்லின் நகர மன்ற உறுப்பினர்கள் நாகராஜ் ஜெகநாதன் ராபர்ட் குமரேசன் சுசிலா பாக்கியவதி செல்வி உமா வண்டிச்சோலை செல்வி சமீனா காவேரி சித்ரா சுப்பிரமணி மற்றும் அனைத்து சார்பு அணிகள் நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஊட்டி நகர பா.ஜ.க சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
- அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாைள முன்னிட்டு ஊட்டி நகர பா.ஜ.க சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கி அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார். இதில் பொது செயலாளர் பரமேஸ்வரன், செயலாளர்கள் வெங்கடேஷ், அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரேமா யோகன், ஊட்டி நகர நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் ஹரி கிருஷ்ணன், சுதாகர், ஸ்ரீதேவி, நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், கார்த்திக், ராஜேந்திரன், செயலாளர்கள் பரமசிவம், பிலோமினா, அபிராமி, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன், மாவட்ட தரவு மேலாண்மை தலைவர் உமா மகேஸ்வரி, செயலாளர் சம்பத் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் பாபு, எஸ்.டி.பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
- ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
- புருக்கோலி கிலோ, 310 முதல் 350 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது
ஊட்டி
நீலகிரி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.வரத்து குறைவால் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக புருக்கோலி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஊட்டி மார்க்கெட்டுக்கு புருக்கோலி ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் வருகிறது. ஊட்டி மார்க்கெட் மண்டிகளில் விற்பனைக்கு வந்த காய்கறி வகைகளில், புருக்கோலி கிலோ, 310 முதல் 350 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது
கடந்த ஒரு வாரமாக, 200 முதல் 250 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த புருக்கோலி, கிலோவுக்கு, 310 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மலை காய்கறி விவசாயம் கடுமையாக தினமும், 10 டன் அளவுக்கு புருக்கோலி விற்பனைக்கு வரும். பருவ மழைக்கு பின், 2 டன் கூட வருவதில்லை. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.
- புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தப்பட்டது.
- ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர்.
அரவேணு
கோத்தகிரியில் பழைய உழவர் சந்தைக்கு மாற்றாக புதிய உழவர் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோத்தர் பழங்குடியின மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியானது கோத்தகிரியில் இருந்து புறப்பட்டு, பாண்டியன்பார்க், கிருஷ்ணாபுதூர், கம்பாய் கடை, மார்க்கெட், ராம்சண்ட் என முக்கிய சாலைகள் வழியாக தாசில்தார் அலுவலகம் சென்று மனுவை வழங்கினார்.
பின்னர் ஊர்வலமாக சென்று தங்களது குலதெய்வ கோவிலில் சென்று அமைதி பேரணியை முடித்தனர். அமைதி பேரணியில் பங்கேற்ற மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, கருப்பு கொடியுடன் தங்களது பாரம்பரிய இசையை முழங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து பேரணியை தலைமை ஏற்று நடத்திய கம்டே சுப்பிரமணிய கூறுகையில், நாங்கள் உழவர் சந்தைக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் பழங்குடியின மக்களின் கோவில் அமைந்துள்ளதால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டுப் போய்விடும் என்பதால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்தே எங்களது கோரிக்கை என்றார்.
- வியாபாரிகள் கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- இந்து முன்னணி போராட்டம் காரணமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி:
தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்.பியுமாக இருப்பவர் ஆ.ராசா.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து அவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.
இது தொடர்பாக நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் இந்து அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, வியாபாரிகளிடம் நோட்டீசு வினியோகம் செய்தனர். அதேசமயம் இந்து முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் வழக்கம்போல் கடைகளை திறக்க வேண்டும் என தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரும் துண்டுபிரசுரம் வழங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இந்தநிலையில் இன்று இந்து முன்னணி அறிவிப்பின் படி நீலகிரி தொகுதியில் பல இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.
கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பஜாரில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 4 கடைகள் மட்டுமே திறந்திருந்தது. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
கோத்தகிரி நகர பகுதிகளிலும் ஏராளமான கடைகள் மூடப்பட்டே கிடந்தன.
கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் 150க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இன்று காலை வியாபாரிகள் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக கடைக்கு வந்தனர். போலீசாரும் கடைகள் திறந்து கொள்ளுங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என தெரிவித்து சென்றனர். ஆனாலும் வியாபாரிகள் கடையை திறப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே உள்ளனர். இதனால் இதுவரை கோத்தகிரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறக்காமல் மூடப்பட்டு இருக்கிறது.
குன்னூர் மார்க்கெட், மேல் குன்னூர், சிம்ஸ்பூங்கா, வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, எலநள்ளி, சேலாஸ், தூதூர்மட்டம் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குன்னூரில் தனியார் மினி பஸ்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதாலும், தனியார் பஸ்கள் இயங்காததாலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமம் அடைந்தனர்.
ஊட்டியில் 50 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன. கூடலூர் பஸ் நிலையம், ஊட்டி சாலை, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தது. பந்தலூர், சேரம்பாடி என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகள் கோவை மாவட்டத்தில் வருகின்றன. அந்த பகுதியிலும் இன்று கடை அடைப்பு முழு அளவில் நடந்தது.
மேட்டுப்பாளையத்தில் இன்று காலை முதலே டீக்கடை, செல்போன் கடைகள், ஜவுளி கடைகள், உணவகங்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மார்க்கெட்டுகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்ததால் வெளியூரில் இருந்து பஸ்சில் மேட்டுப்பாளையத்திற்கு வந்தவர்கள், ரெயிலில் வந்தவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு உணவகங்கள் இல்லாததால் சிரமம் அடைந்தனர்.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் நகரமே கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி கிடந்தது. இதேபோன்று காரமடை, சிறுமுகை பகுதிகளிலும் 100 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
அன்னூர், எஸ்.எஸ்.குளம் பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அன்னூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் முன்னணி செயலாளர் திவாகர், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்து முன்னணி போராட்டம் காரணமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.
- 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஊட்டி
தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூரை நோக்கி வந்த சுற்றுலா வேனை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது வேனில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனுக்குள் சோதனை நடத்திய போது, சில மூட்டைகள் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 199 பண்டல்களில் 2,985 தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.23,880 ஆகும். மேலும் கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது பின்னர் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குட்காவை கடத்த முயன்ற கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்த சாணபாட்ஷா (வயது 51), பஷுர் அகமது (40), குண்டல்பெட்டை சேர்ந்த கோவிந்தசாமி (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து குட்கா பாக்கெட்டுகள் கூடலூரில் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து போலீசார் கூறும்போது, சுற்றுலா பயணிகள் போர்வையில் கடத்தல் பேர்வழிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது..
- வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்கவும், போலீசாரின் கண்காணிப்பு பணிக்கும், குற்ற செயல்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக உள்ளது. கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸ் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதையடுத்து கோத்தகிரி பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரிகள் கேமராக்களை பொருத்தினர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி காந்தி மைதானத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இதில் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தேடி அலைந்தனர். மைதானம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தவிர, அப்பகுதியில் வேறு எங்கும் கேமராக்கள் இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து குஞ்சப்பனை சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதையடுத்து கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வெளியே சாலைகள் தெரியுமாறு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறையினருக்கு உதவுமாறு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெரும்பாலான இடங்களில் சாலைகள் தெரியும் வகையில் கேமராக்கள் பொருத்துவதால் போலீசாரின் கண்காணிப்பு பணிக்கு உதவியாக இருப்பதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவில் கைது செய்ய முடியும். இதனால் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.
- பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நேரு பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி 400 அடி நீளம் உயரம் 10 அடி 20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கட்ட ஆரம்பித்து 6 மாதம் ஆகிறது.
வேலை பாதியளவு கூடமுடியவில்லை. ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதாகவும், வேகமாக பணிகளை முடிக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.






