என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food distribution program"

    • ஊட்டி நகர பா.ஜ.க சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
    • அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.

    ஊட்டி

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாைள முன்னிட்டு ஊட்டி நகர பா.ஜ.க சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி ஊட்டி ஏ.டி.சி. சுதந்திர திடல் முன்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கி அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை மண்டல் தலைவர் பிரவீன் செய்திருந்தார். இதில் பொது செயலாளர் பரமேஸ்வரன், செயலாளர்கள் வெங்கடேஷ், அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பிரேமா யோகன், ஊட்டி நகர நிர்வாகிகள் துணைத்தலைவர்கள் ஹரி கிருஷ்ணன், சுதாகர், ஸ்ரீதேவி, நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார், கார்த்திக், ராஜேந்திரன், செயலாளர்கள் பரமசிவம், பிலோமினா, அபிராமி, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அனிதா கிருஷ்ணன், மாவட்ட தரவு மேலாண்மை தலைவர் உமா மகேஸ்வரி, செயலாளர் சம்பத் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் பாபு, எஸ்.டி.பிரிவு மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,

    ×