என் மலர்
நீலகிரி
- குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
- இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் குன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், புதிய சாலை அமைக்கும் பணி, சமுதாய கூடம் அமைத்தல் போன்ற பணிகளை டெண்டர் எடுத்து பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஊராட்சி பள்ளிகளுக்கு பராமரிப்பு மற்றும் வண்ணங்கள் பூசும் பணிகளுக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு தராமல் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கண்டித்து திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இது தொடர்பாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களை அழைத்து நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் இனி வரும் காலங்களில் உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை வழங்குவது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ரெயில் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
- பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ெரயில் பாதையில் யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக ெரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறை மற்றும் ெரயில்வே துறையினா், அந்த காட்டெருமையை மீட்டனா். பின்னர் காட்டெருமைக்கு கால்நடை டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதையடுத்து காட்டெருமையை வனத் துறையினா் அங்கேயே குழி தோண்டி புதைத்தனா்.
இந்தச் சம்பவத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ெரயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ெரயில் அரை மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தது.
- சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
- இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(31). இவர் சம்பவத்தன்று கோவில்மட்டம் பகுதிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு உறவினை சந்தித்து பேசி விட்டு மீண்டும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
ஒன்னட்டி-கோவில்மட்டம் செல்லும் சாலையில் வந்த போது, அங்கு சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- கொடநாடு வழக்கு தொடர்பாக தற்போது 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டது. தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சம்சீர் அலி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- இதில் 2022-23 ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
- முகாமில் யூடியூப் செயலி மூலம் மின்னொலி திரையில் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
நீலகிரி
கோத்தகிரி கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளை உருவாக்குதல் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. முகாமில் யூடியூப் செயலி மூலம் மின்னொலி திரையில் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இதில் 2022-23 ஆண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 2 நாள் பயிற்சி முகாமில் மூன்றடுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளான ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் உள்பட வருவாய்த்துறையினர், வட்ட வழங்கல் அலுவலர், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதார துறை, மின்சார துறை, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது.
- 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
நீலகிரி
கூடலூர் வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி தேயிலை தோட்டங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நுழைந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலைத் தோட்டத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிற்சாலை அருகே மலைப்பாம்பு ஒன்று வந்தது. இதைக் கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து தேயிலை தோட்ட கழக அலுவலர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நாடுகாணி வனச்சரகர் வீரமணி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தொழிற்சாலை அருகே தேயிலை செடிகளுக்கு அடியில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து அடர்ந்த வனத்தில் கொண்டு மலைப் பாம்பு விடப்பட்டது. அதன் பின்னர் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
- நன்றி சொல்லும் வகையில் துதிக்கையை உயர்த்தி காட்டியது.
- வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோட்டம் பந்தலூர் வனச்சரகத்தில் உள்ள தனியார் எஸ்டேட் செல்லும் வழியில் எஸ்டேட் பணியாளர்கள் ஒரு யானை குட்டி படுத்து கிடப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் வன ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனவர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் நேரில் சென்று யானையை பார்வையிட்டனர். அப்போது உடல் சோர்வடைந்த நிலையில் 2 வாரமே ஆன குட்டி யானை தாயைப் பிரிந்து தவித்தது கிடந்ததை பார்த்தனர். அதனை எழுப்பி, வனத்துறையினர் தண்ணீர் குடிக்க வைத்து, யானையை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.
இன்னொரு பிரிவாக வனத்துறையினர் தாய் யானையை தேடி காட்டுக்குள் சென்றனர். 2 மணி நேரத்தில் தாய் யானை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குட்டி யானையை அங்கு அழைத்து கொண்டு சென்று கூட்டத்தின் அருகே விட்டனர்.
எவ்வித சிரமமும் இன்றி குட்டியை தாய் யானை அரவணைத்துக் கொண்டது. அது விடைபெற்று செல்லும்போது வனத்துறையினருக்கு நன்றி சொல்லும் வகையில் துதிக்கையை உயர்த்தி காட்டியது. இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் 1 மணி நேரம் வனத்துறையினர் அந்த யானை கூட்டத்தை பின் தொடர்ந்து சென்றனர். 2 முறை தாய் யானை குட்டிக்கு பால் அளித்ததை பார்த்துவிட்டு திரும்பி வந்தனர். முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் துரைராஜ் தலைமையில் சிறப்பாக பணியில் ஈடுபட்ட வனச்சரக அலுவலர் , வனவர் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களையும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
- தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்றது.
ஊட்டி,
கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள்
எம்.எல்.ஏ.வுமான சாந்திராமு தலைமை தாங்கினார்.
அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன்,குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், குன்னூர் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், குன்னூர் நகர மன்ற உறுப்பினர் குருமூர்த்தி மற்றும்கோத்தகிரி நகரம், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 78 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
- ரூ.18 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. வாடகை மறுநிா்ணயம் செய்து கடந்த 2016 ஜூலை 1-ந் தேதி முதல் உயா்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவாா்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனா்.
இந்நிலையில், தொடா்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகையாக ரூ.40 கோடி செலுத்தாததால் 2021 ஆகஸ்டில் 757 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதையடுத்து, சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு சிலா் முழுத் தொகையையும், ஒரு சிலா் பாதித் தொகையையும் செலுத்தியதைத் தொடா்ந்து சீல்கள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும், அவா்கள் வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஊட்டி நகராட்சி ஆணையா் காந்திராஜ் உத்தரவின்பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனா். இதன்படி கடந்த ஒரு வாரத்துக்குள் 1 லட்ச ருபாய்க்கு மேல் வாடகை நிலுவை உள்ள 78 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் 24 கடைகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரிகள் நேற்று முயற்சி மேற்கொண்டனா். இதனால் அதிா்ச்சி அடைந்த வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் வாடகை செலுத்த கால அவகாசம் வழங்கக் கோரி மாா்க்கெட் வளாகத்தில் நேற்று இரவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து ஊட்டி நகராட்சி ஆணையாளா் காந்திராஜ் கூறுகையில், வாடகை தொடா்பாக கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சீல் நடவடிக்கையை தொடா்ந்து ரூ. 40 கோடி பாக்கி இருந்த நிலையில், தற்போது வரை ரூ.18 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. நகராட்சி நிா்வாகம் சாா்பில் மின் கட்டணம் மட்டும் ரூ.14 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியா்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே மீதமுள்ள நிலுவைத் தொகையை வசூலித்தால்தான் நகராட்சி நிா்வாகப் பணிகளையும் மக்கள் நலப்பணிகளையும் செய்ய முடியும் பணிகளை தொய்வின்றி செயல்படுத்த முடியும் என்றாா்.
- பாக்கு மரத்தை யானை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.
- யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் யானை உடல் புதைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்று ஆண் யானை ஒன்று வலம் வந்தது. வனப்பகுதியில் நின்ற மரங்களை முறித்து சாப்பிட்டது.
அங்கு நின்ற பாக்கு மரத்தை யானை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது. அப்போது அந்த பகுதியில் சென்ற மின் கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக யானை மீதே விழுந்தது. இதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தது.
இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். அந்த இடத்திலேயே யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் யானை உடல் புதைக்கப்பட்டது.
அந்த பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மின்சாரம் தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இந்தநிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 58) என்பவர் பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஜோய், மற்றும் ஜெய் சங்கர் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
கூடலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 3 பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் ஜோய் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் அங்கு ெசன்று, ஜோயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்-4 பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெய்சங்கர் (53) என்பவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று, ஜெய்சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து, ஜோய், மற்றும் ஜெய் சங்கர் ஆகியோர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






