புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 58) என்பவர் பெட்டிக் கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com