என் மலர்tooltip icon

    நீலகிரி

    • செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்தனர்.
    • வைரலாக பரவி வருகிறது.

    கூடலூர்

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் இருந்து புல்பள்ளிக்கு செல்லும் சாலையில் முத்தங்கா சரணாலயத்துக்கு உட்பட்ட செதலயம் பகுதியில் கேரள போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. இதைக்கண்ட போலீசார் ஜீப்பை நிறுத்தி முகப்பு விளக்கு வெளிச்சத்தில் புலியை செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்தனர். மேலும் புலியும் சாலையைக் கடந்த படி வனத்துக்குள் சென்றது. இந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் போலீசார் பதிவிட்டனர். தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • 2 மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை.
    • கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஊட்டி

    ஊட்டி அருகே உள்ள முத்தொரை பாலடா பகுதியை சோ்ந்தவா் காளியப்பன்(33). கூலி தொழிலாளி. இவா் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை.இது குறித்து ஊட்டி ஊரக காவல் நிலையத்தில் அவரது உறவினா்கள் புகாா் அளித்திருந்தனா்.

    இந்நிலையில், முத்தொரை பாலடா பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசாா், தீயணைப்புத் துறையினா் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்டனா். விசாரணையில், அவா் 2 மாதத்துக்கு முன் மாயமான காளியப்பன் என்பது தெரியவந்தது.

    இதைத் தொடா்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனா்.

    மேலும், அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
    • மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் மருத்துவமனை, கூட்டுறவு பண்டகசாலை, தபால் நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி அலுவலகம் செல்லக்கூடிய சாலையாக மார்க்கெட் பகுதி சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சாலை தற்போது குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது.

    மேலும் கட்டண கழிப்பிடம் பூட்டி கிடப்பதால் சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கும் சம்பவங்களும் நடக்கிற்து. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையானது இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே நகராட்சி இதனை சரி செய்ய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி ஊட்டியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இதுதவிர வெளி மாவட்டங்கள், மாநிலங்க ளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, மேட்டுப்பா ளையம் உள்ளிட்ட மலைப்பகு திகளில், பச்சை பட்டாணி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஊட்டியில் விளையும் பச்சை பட்டாணி தமிழகம் முழுவதும் உள்ள மார்க்கெட்டுக ளுக்கு அனுப்பப்படுகிறது.

    தற்போது இப்பகுதிகளில் பட்டாணி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு பட்டாணி வரத்து குறைந்துள்ளது. இதனால் பட்டாணியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஊட்டியில் பச்சை பட்டாணி கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது மார்க்கெட்டுக்கு பட்டாணி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து மட்டுமே மார்க்கெட்டுக்கு பச்சை பட்டாணி விற்பனைக்கு வருகிறது என்றனர்.

    • மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 15 கடைகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • 15 கடைகளில் ஒரு கடையில் மட்டும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்ததுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஊட்டி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு காய்கறி, மீன் கடை, பழக்கடை, பூக்கடை என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் காய்கறிகள், பழங்கள் என அனைத்து பொருட்கள் வாங்குவதற்கு இங்கு தான் வருவார்கள்.

    இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இந்த மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் இந்த மார்க்கெட் எப்போதுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். எந்நேரமும் மக்கள் கூட்டமாகவே காணப்படும்.

    இன்று காலை வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதற்காக மார்க்கெட்டிற்கு வந்தனர். அப்போது மார்க்கெட்டில் உள்ள கடைகளில் 15 கடைகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியான அந்த கடைகளின் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கல்லாவில் வைத்திருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

    வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு சென்ற பிறகு நள்ளிரவு நேரத்தில் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 15 கடைகளில் கொள்ளை நடந்தது மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாபாரிகள் அனைவரும் திரண்டனர்.

    சம்பவம் குறித்து ஊட்டி நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கடைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் விசாரித்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மர்மநபர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அந்த நபர் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் 15 கடைகளில் ஒரு கடையில் மட்டும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்ததுள்ளது. மற்ற கடைகளில் எவ்வளவு பணம் கொள்ளை போய் உள்ளது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி மார்க்கெட்டில் 15 கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்தது ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    கோத்தகிரியில் சக்திமலை சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நீலகிரி கோத்தகிரி சிவன் கோவில்களில் பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதையொட்டி ஆவணி மாத பிரதோஷ நாளான நேற்று கோத்தகிரி சக்தி மலையில் உள்ள சிவன் கோவிலில் காலை 10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு, எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

    • 30-ந் தேதி வரை நடக்கிறது.
    • பயிற்சி கட்டணம் இலவசம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உப்பட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கூடலூர் உப்பட்டியில் உள்ள பழங்குடியினருக்கான அரசு ஐ.டி.ஐ., யில் காலியாக உள்ள தொழிற்பயிற்சி இடங்களுக்கு நேரடி சேர்க்கை வரும் 30-ந் தேதி வரை நடக்கிறது. தகுதியான பழங்குடியின மாணவ, மாணவிகள் மற்றும் இதர பிரிவு மாணவ, மாணவிகள் (பொதுப்பிரிவினரை தவிர) அரசு விதிமுறைகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி பிட்டர், கம்மியர் மோட்டார் வண்டி ஆகிய 2 ஆண்டு தொழிற் பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், ஒயர்மேன், பிளம்பர், வெல்டர் ஆகிய பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெறப்பட்ட மதிப்பெண் சான்று மற்றும் இதர சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். மதிப்பெண் அடிப்படையிலும் அரசு விதிகளின் படி கலந்தாய்வு சேர்க்கையின் மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி கட்டணம் இலவசம். அனைத்து மாணவர்களுக்கும் ரூ.750 வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உள்ளது. பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு உப்பட்டி ஐ.டி.ஐ., முதல்வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

    இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 102 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களின் கையேடு மற்றும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த துண்டு பிரசுரம் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    நீலகிரியில் மூலிகை செடி பயிா் செய்யும் விவசா–யிகளுக்கு முறையான திட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு பரிந்துரையாக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல, விதை கிழங்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு தோட்டக்கலை பண்ணைகளான நஞ்சநாடு மற்றும் கோல்கிரைனில் விதை கிழங்குகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் வழங்கப்படும்.

    தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா் கடன் அட்டை, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் குறித்து முகாம்கள் நடத்தப்படும். கூடலூா் உழவா் சந்தையில் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இட வசதி உள்ளதால், அதனை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் உழவா் கடன் அட்டை தொடா்பான கோரிக்கைகளுக்கு தனியாக கூட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • 2 கரடிகள் ஒன்று இந்த பகுதியில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது.
    • வனத்து–றையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது என தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் நடமாட்டமும், அதன் அட்டகாசமும் அதிகமாகவே காணப்படுகிறது.

    கோத்தகிரி பெரியார் நகர் தவிட்டுமேடு அடுத்த அரவேணு காந்தி சிலை அருகே கோத்தகிரி-காமராஜர் சதுக்கத்தை இணைக்க கூடிய சாலை செல்கிறது. இந்த சாலையில் ஏராளமான வீடுகளும் உள்ளன.

    இந்த நிலையில் நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய 2 கரடிகள் ஒன்று இந்த பகுதியில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. திடீரென அங்குள்ள ஒரு வீட்டின் அருகே சென்றது. பின்னர் அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி வீட்டின் வளாகத்திற்குள் புகுந்தது.

    வளாகத்தில் புகுந்த கரடிகள் அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்து விட்டு, பின்னர் மீண்டு சுற்றுச்சுவரை தாண்டி வனத்தை நோக்கி சென்றது.

    இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே கரடிகள், சிறுத்தைகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து–ள்ளது. எனவே இங்கு வனவி லங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படு த்த வனத்து–றையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ெரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடியது.
    • பயணிகள் பார்த்து உற்சாகமடைந்தனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ெரயில் பாதை அடர்ந்த வனத்திற்கு நடுவே உள்ளது. அந்த ரெயிலில் செல்லும் போது இயற்றை அழகினையும், காட்டில் வசிக்கும் யானை கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் என பல்வேறு வனவிலங்குகளையும் காண முடியும்.இதனால் இந்த பாதை வழியாக பயணிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புவார்கள்.இந்த நிலையில் மலைரெயில் பாதையில் உள்ள ரன்னிமேடு, ஹில்குரோவ், ஆடா்லி போன்ற ெரயில் நிலையங்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளதாலும், யானைகள் வழித்தடம் என்பதாலும் இந்த ெரயில் நிலையத்துக்குள் யானைகள் வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ெரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடியது.

    இதனை ரெயிலில் பயணித்த பயணிகள் பார்த்து உற்சாகமடைந்தனா். சிலா் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனா்.

    • தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன.
    • 3 மாடுகளும் வனவிலங்குகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகள் உள்ளன.

    மார்லிமந்து அணையில் இருந்து ஊட்டி நகராட்சியில் உள்ள சில வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டெரு மை, சிறுத்தை, மான், கடமான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வேறு வனப்பகுதியில் இருந்து செந்நாய்களும் மார்லிமந்து அணைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன.

    கடந்த சில மாதங்களாக 20-க்கும்மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக சேர்ந்து அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன.

    மார்லி மந்து ஏரி பகுதியில் ஊட்டியில் கால்நடை வளர்த்து வருபவர்கள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதேபோன்று நேற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்றன.

    மாலையில் மாட்டின் உரிமை யாளர்கள் மாடு களை வீட்டிற்கு அழைத்து வர சென்றனர். அப்போது 3 மாடுகள் படுகாயத்துடன் காணப்ப ட்டன.இதைபா ர்த்ததும் அதிர்ச்சி யான அவர்க ள் உடனடியாக வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். 3 மாடுகளும் வனவிலங்குகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. இருப்பி னும் எந்த விலங்கு தாக்கியது என்பது தெரியவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்லும் போது பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    • வங்கியின் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
    • 2021-22-ம் ஆண்டில் வங்கியின் லாபம் ரூ.3.06 கோடியாக உயா்ந்துள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 69-வது ஆண்டு உறுப்பினா்கள் பேரவைக் கூட்டம் ஊட்டியில் நடந்தது.

    கூட்டத்திற்கு தலைவா் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். கடன் பிரிவு மேலாளா் பிரவீன் வரவேற்றாா். கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்து சிதம்பரம், வங்கியின் பொது மேலாளா் சங்கர நாராயணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பேரட்டி ராஜி, பீமன், ஹேம்சந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    கூட்டத்தில், வங்கியின் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

    தொடா்ந்து வங்கியின் தலைவா் வினோத் பேசியதாவது:-

    2021-22-ம் ஆண்டில் வங்கியின் லாபம் ரூ.3.06 கோடியாக உயா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு விவசாயிகளை நம்பியே இந்த வங்கி உள்ளது. வங்கியின் வைப்புத்தொகையை உயா்த்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள்தான் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கியில் ஊட்டியில் மட்டுமே ஒரு ஏ.டி.எம் மையம் இருந்தது. தற்போது மஞ்சூா், கோத்தகிரியில் ஏ.டி.எம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, 2021-22 ஆம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் ரூ.1 கோடியே 74 லட்சத்து 84 ஆயிரத்து 813-யை வங்கியின் துணை விதிகளின்படி, லாப பிரிவினை செய்ய கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    ×