என் மலர்
நீங்கள் தேடியது "3 Wild animals attacking cows"
- தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன.
- 3 மாடுகளும் வனவிலங்குகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தது தெரியவந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 10 அணைகள் உள்ளன.
மார்லிமந்து அணையில் இருந்து ஊட்டி நகராட்சியில் உள்ள சில வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டெரு மை, சிறுத்தை, மான், கடமான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வேறு வனப்பகுதியில் இருந்து செந்நாய்களும் மார்லிமந்து அணைப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக 20-க்கும்மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக சேர்ந்து அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன.
மார்லி மந்து ஏரி பகுதியில் ஊட்டியில் கால்நடை வளர்த்து வருபவர்கள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதேபோன்று நேற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்றன.
மாலையில் மாட்டின் உரிமை யாளர்கள் மாடு களை வீட்டிற்கு அழைத்து வர சென்றனர். அப்போது 3 மாடுகள் படுகாயத்துடன் காணப்ப ட்டன.இதைபா ர்த்ததும் அதிர்ச்சி யான அவர்க ள் உடனடியாக வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். 3 மாடுகளும் வனவிலங்குகள் தாக்கியதில் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. இருப்பி னும் எந்த விலங்கு தாக்கியது என்பது தெரியவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்லும் போது பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.






