என் மலர்
நீங்கள் தேடியது "குப்பைகளாக காட்சியளிக்கும் மார்க்கெட் ரோடு"
- வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
- மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் மருத்துவமனை, கூட்டுறவு பண்டகசாலை, தபால் நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி அலுவலகம் செல்லக்கூடிய சாலையாக மார்க்கெட் பகுதி சாலை உள்ளது. இந்த சாலையில் எப்போதுமே வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட சாலை தற்போது குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது.
மேலும் கட்டண கழிப்பிடம் பூட்டி கிடப்பதால் சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கும் சம்பவங்களும் நடக்கிற்து. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதியில் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலையானது இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. எனவே நகராட்சி இதனை சரி செய்ய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






