என் மலர்
தமிழ்நாடு

கொடநாடு வழக்கு அக்டோபர் 28-க்கு ஒத்திவைப்பு
- கொடநாடு வழக்கு தொடர்பாக தற்போது 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டது. தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர்.
கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சம்சீர் அலி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.