என் மலர்
நீலகிரி
- பெண் குழந்தைகளுக்கான பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களை எவ்வாறு அணுக வேண்டும்.
- மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரவேணு:
சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் நீலகிரி மாவட்டம் கிராமிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நடுஹட்டி ஊராட்சியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களை எவ்வாறு அணுக வேண்டும். பெண் குழந்தைகள் எங்கு எப்படி அதன் புகாரை தெரிவிக்க வேண்டும். கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் தங்கள் திறமைகளை எவ்வாறு வளர்த்து கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி, மோகன் கிராம உதவி ஆய்வாளர் ஹரிஷ், மகேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், வார்டன் பிச்சை, குழந்தைகள் நல காப்பு வார்டன் நந்தினி உள்பட பலர் உள்ளனர்.
- கோத்தகிரியில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது
- 3 கரடிகள் பிடிக்கப்பட்டு வனப் பகுதியில் கொண்டு விடப்பட்டன.
ஊட்டி
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னா். ஏற்கெனவே இப்பகுதியில் மூன்று கரடிகள் பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது,
எனவே , அசம்பாவிதங்கள் நடக்கும் முன் குடியிருப்புப் பகுதியில் உலா வரும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுகிறது.
- புலி சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
ஊட்டி
தமிழக எல்லையான பாட்டவயலை அடுத்து கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட சீரால் குடுக்கி கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் தொடா்ந்து புலி நடமாடுவதாக அந்த பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
இதை உறுதி செய்யும் வகையில், வனபகுதியில் இருந்து இரவு வந்த புலி சாலையை கடந்து அங்குள்ள வணிக நிறுவனத்தின் மதில் சுவரில் ஏறி உள்ளே குதித்து வளாகத்துக்குள் செல்வது அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் புலியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்றும், தங்களுக்கு வன விலங்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினா்.
- கூட்டத்தில், தி.முக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
- தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற, நீலகிரி எம்.பி. ராசாவுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஊட்டி,
குன்னூர் நகர தி.மு.க கூட்டம் வண்டிப்பேட்டை நகர கழக அலுவலகத்தில் நகர அவை தலைவர் ஆரோக்கிய தாஸ் தலைமையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு குன்னூர் நகர கழக செயலாளர் எம்.ராமசாமி சிறப்பான ஏற்பாடு செய்து அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில், தி.முக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும், பொறுப்பேற்றுள்ள தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர், துணை பொது செயலாளர்கள் ஆகியோரின் பணிகள் சிறக்க வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த 15-வது உட்கட்சி தேர்தலில் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக்குக்கு வாழ்த்துக்களையும், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்று, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் நீலகிரி எம்.பி. ராசாவுக்கு சிறப்பான மாபெரும் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அக்டோபர் 15-ந் தேதி, பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து தி.மு.க. தலைவர் ஆலோசனைப்படி, இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாணவர் அணி செயலாளர் ஆகியோரின் அறிவிப்புக்கு இணங்க நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஊட்டியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொதுக்குழு உறுப்பினரும் நகர மன்ற தலைவருமான சீலா கேத்தரின், நகர மன்றத் துணைத் தலைவர் வாசிம் ராஜா, தலைமை பேச்சாளர் ஜாஹிர், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிச்சாமி, மணிகண்டன், சார்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சாலைகளிலும் உலவுகின்றன.
கடந்த வாரம் கூட யானைக்கூட்டம் ஒன்று சாலையில் வந்த வாகன ஓட்டிகளை ஓட ஓட விரட்டியது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப்பயணிகளும் அந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வழக்கம் போல் வாகனங்கள் சென்ற வண்ணம் இருந்தன. அதிகாலை நேரத்தில் முள்ளூர் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை சாலையின் நடுவே வந்து நின்று கொண்டது. நீண்ட நேரமாக எங்கும் செல்லாமல் அங்கே உலவியது.
இதனால் சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சிலர் யானையை புகைப்படம் எடுக்க முற்பட்டனர்.
அப்போது திடீரென கோபம் அடைந்த யானை அங்கு நின்றிருந்த 5-க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி கண்ணாடியை உடைத்தது. மேலும் யானையை முந்தி செல்ல முயன்ற வேனின் கண்ணாடியையும் உடைத்தது.
தொடர்ந்து சாலையில் நின்றிருந்த காரை நோக்கி யானை வந்தது. யானை வருவதை பார்த்ததும் காரில் இருந்தவர்கள் பயத்தில் சத்தம் போட்டனர். வந்த வேகத்தில் யானை காரை ஆக்ரோஷமாக தூக்கியது.
இதனால் காரில் இருந்தவர்கள் அலறினர். பின்னர் அங்கேயே காரை போட்டு விட்டு சென்று விட்டது. சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று விட்டது.
அதிர்ஷ்டவசமாக யானை காரை தூக்கி வீசாததால் காரில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.யானை சென்றதும் வாகன ஒட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் இரவில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊட்டி,
ஊட்டியில் நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பங்கேற்ற பின் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் தலா 10 கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் மற்றும் கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகள் அந்தந்த சட்டப் பேரவை உறுப்பினா்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து முதற்கட்டமாக துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், முதுமலை புலிகள் காப்பக கள இக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்- கலெக்டர் அறிவுரை
- குடிநீர் குழாய்கள் என அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- சாலை மிகவும் மோசமாக உள்ளதால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சிக்கு ட்பட்ட 36 வார்டுகளில் பல ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் கழிவு நீர் கால்வாய், நடைபாதைகள், தெரு விளக்குகள் மற்றும் சாலைகள், குடிநீர் குழாய்கள் என அடிப்படை வசதிகள் ஏதும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 32-வது வார்டு நொண்டிமேடு பகுதியில் உள்ள பள்ளிவாசல் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் பலமுறை சாலையை சீர்படுத்தி தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை.
இதனிடையே அப்பகுதியில் அவசர தேவைக்காக நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் சாலை இல்லாமல், அதன் ஓட்டுநர் மிகுந்த சிரமத்தில் ஆபத்தான முறையில் நோயாளியை அழைத்து சென்றார்.
ஆகவே ஊட்டி நகராட்சி நிர்வாகம் ெநாண்டிமேடு சாலையை உடனே சீர்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
- அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 9000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
கோத்தகிரி,
போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்து விசாரித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாதவர்களிடம் அபராதமும் வசூலித்தனர்.
அதன்படி, உரிய ஆவணம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல், தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 44 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14,800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அதிக பட்சமாக அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரிக்கு 9000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
- துப்புரவு பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் போன்றவற்றை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆய்வு செய்து வருகிறார்.
- தும்மனட்டி கிராம மக்களிடம் குறைகளையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்தார்.
ஊட்டி,
ஊட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவு பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் போன்றவற்றை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழக முதல்வரின் ஆணைப்படியும் மாவட்ட செயலாளர் அறிவுரைபடியும் அனைத்து கிராம பகுதிகளிலும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆயவுகளை மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை குறைகளை கேட்டு அவைகளை போக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக தும்மனட்டி கிராம மக்களிடம் குறைகளையும், அவர்களின் அடிப்படை தேவைகளையும் கேட்டறிந்தார். அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படும் என உறுதியளித்தார். அவருடன் ஊர் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
- தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது
- 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர்.
அரவேணு,
கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.
- கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட்டது.
- மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று, முழக்கம் எழுப்ப பேரணி தொடங்கியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மன்னரசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உரையாற்றினார். இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராமகிருஷ்ணன், இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் மணி, பெண்கள் இணைப்பு குழுவின் சாரா, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று, முழக்கம் எழுப்ப பேரணி தொடங்கியது. பேரணி கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக பஸ் நிலையத்திலிருந்து ஜான்சன் ஸ்கொயர் காமராஜர் சிலை வரையிலும் நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட், இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மக்கள் அதிகாரம், இந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்தியா ஜனநாயக வாலிபர்கள் சங்கம், பெண்கள் இணைப்பு குழு, திராவிட தமிழர் கட்சியை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வீடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது.
- நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வன பகுதியில் தீவன பற்றாக்குறையாலும், தண்ணீா் தேடியும் குடியிருப்பு பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஊட்டியில் உள்ள பாரஸ்ட் கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று அதிகாலை நேரத்தில் சுற்றி திரியும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோவில், குடியிருப்பு பகுதிக்குள் புகும் சிறுத்தை, வீட்டின் முன் இருந்த நாயை வேட்டையாடச் செல்கிறது. சப்தம் கேட்டு மற்ற நாய்கள் அங்கு வந்ததால் பாதியில் அந்த சிறுத்தை ஓட்டம் பிடிக்கிறது.
நாயை வேட்டையாடியதால் சிறுத்தை நடமாட்டம் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்






