search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்- கலெக்டர் அறிவுரை
    X

    3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்- கலெக்டர் அறிவுரை

    • 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    ஊட்டி,

    ஊட்டியில் நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகளை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், கூடலூா் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் பங்கேற்ற பின் மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் தலா 10 கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் மற்றும் கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தலா 10 முக்கியமான கோரிக்கைகள் அந்தந்த சட்டப் பேரவை உறுப்பினா்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவது தொடா்பான சாத்தியக் கூறுகள் குறித்து முதற்கட்டமாக துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

    கூட்டத்தில், முதுமலை புலிகள் காப்பக கள இக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    3 சட்டமன்ற தொகுதிகளில் தலா 10 கோரிக்கைகளை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும்- கலெக்டர் அறிவுரை

    Next Story
    ×