search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் தி.மு.க. நகர கூட்டம்
    X

    குன்னூரில் தி.மு.க. நகர கூட்டம்

    • கூட்டத்தில், தி.முக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
    • தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற, நீலகிரி எம்.பி. ராசாவுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூர் நகர தி.மு.க கூட்டம் வண்டிப்பேட்டை நகர கழக அலுவலகத்தில் நகர அவை தலைவர் ஆரோக்கிய தாஸ் தலைமையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு குன்னூர் நகர கழக செயலாளர் எம்.ராமசாமி சிறப்பான ஏற்பாடு செய்து அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில், தி.முக தலைவராக 2-வது முறை பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கும், பொறுப்பேற்றுள்ள தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மை செயலாளர், துணை பொது செயலாளர்கள் ஆகியோரின் பணிகள் சிறக்க வாழ்த்துகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

    நடைபெற்று முடிந்த 15-வது உட்கட்சி தேர்தலில் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக்குக்கு வாழ்த்துக்களையும், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் தி.மு.க. துணை பொது செயலாளராக பொறுப்பேற்று, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் நீலகிரி எம்.பி. ராசாவுக்கு சிறப்பான மாபெரும் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அக்டோபர் 15-ந் தேதி, பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து தி.மு.க. தலைவர் ஆலோசனைப்படி, இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாணவர் அணி செயலாளர் ஆகியோரின் அறிவிப்புக்கு இணங்க நீலகிரி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஊட்டியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொதுக்குழு உறுப்பினரும் நகர மன்ற தலைவருமான சீலா கேத்தரின், நகர மன்றத் துணைத் தலைவர் வாசிம் ராஜா, தலைமை பேச்சாளர் ஜாஹிர், நகர துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத் ராவ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிச்சாமி, மணிகண்டன், சார்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×