என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சந்தேகப்படும்படியான நபர்கள் கடைக்கு வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • இரவு நேர காவலாளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஊட்டி

    தீபாவளியை முன்னிட்டு கூடலூர் நகரில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், வணிகர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கூடலூரில் நடைபெற்றது. கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    திருட்டு போன்ற குற்றங்களை தடுக்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முகம் தெளிவாக பதிவு ஆகும் வகையில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் உள் மற்றும் வெளிப்புறம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அந்த காட்சிகள் 30 நாட்கள் பதிவு செய்யும்படி இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் கடைக்கு வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    நகைகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரத்தையும், உண்மையான முகவரியையும் சேகரிக்க வேண்டும். தொடர்ந்து இரவு நேர காவலாளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 8 மணி முதல் 11 மணி வரையும், இதேபோல் மாலை நேரத்திலும் சரக்கு லாரிகளில் பொருட்கள் இறக்கிக்கொள்ளலாம்.

    இதேபோல் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களை கடைகள் முன்பு நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். போலீசார் யாராவது பரிசு பொருட்கள் கேட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா உள்பட போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கூடலூர் அனைத்து வணிகர் சங்க செயலாளர் அப்துல் ரசாக், வணிகர் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் தாமஸ், நிர்வாகிகள் சம்பத்குமார், சைஜி மோன் மற்றும் வணிகர்கள் கலந்துகொண்டனர்.

    • தற்காலிமாக தொழிலாளர்கள் 3 ஆண்டில் இருந்த 4 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்
    • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்

    ஊட்டி,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தற்காலிமாக தொழிலாளர்கள் 3 ஆண்டில் இருந்த 4 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற அரசின் உத்திரவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மண்டல தலைவர் சபாஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு பஸ்கள் சாலையில் பழுதாகி நிற்காத வகையில், தேவையான உதிரி பாகங்களை வாங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில துணை தலைவர் செய்து இப்ராஹீம் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
    • மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி பிள்ளிக்கம்பை பகுதியில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அப்போது பில்லிக்கம்பை பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் (வயது 66) என்பதும், மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

    பின்பு அவரிடமிருந்து சுமார் 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை போக்க பல முகாம்களை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.
    • இந்த முகாமின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

    கோத்தகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை போக்க பல முகாம்களை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நெடுகுளா பகுதியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் மக்கள் மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 154 பயனாளிகளுக்கு சுமார் 66.19 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இம்முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 282 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 165 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு 117 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    குறிப்பாக இந்த முகாமின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ்,

    தனித்துணை ஆட்சியர் முருகன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • பெண்கள் வேலைக்கு சென்று இரவு தனியாக வரும்போது அவர்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,

    கோத்தகிரி

    கோத்தகிரி 6-வது வார்டு பகுதியான ரைபிள்ரேஞ்சு எனும் பகுதியில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகி ன்றனர். அவர்களில் பெரும்பா லோனோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் குடியிருக்கும் பகுதியில் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த புதரின் மறைவில் இருந்து வந்த காட்டு பன்றி ஒன்று ஒரு பெண்ணை கடித்து குதறியது.

    பலத்த காயம் அடைந்த அவர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ரைபிள்ரேஞ்சு குடியிருக்கும் பகுதிக்கு செல்ல 2 தரைப்பாலங்கள் உள்ளது. அவை பராமரிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் நீரோடையில் அடித்து செல்லும் நிலையில் உள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் அருகில் இரவு நேரங்களில் வாலிபர்கள் மதுகுடிப்பது, கஞ்சா பயன்படுத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    சில நேரங்களில் பெண்கள் வேலைக்கு சென்று இரவு தனியாக வரும்போது அவர்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களிடம் தட்டி கேட்டால் மிரட்டு வதாகவும் தெரிவிக்கி ன்றனர்.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,

    • தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • பரவலாக மழை பெய்தது.

    ஊட்டி,

    கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. தொடர்ந்து லேசான வெயிலும் தென்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அதன் பின்னர் மதியம் வெயில் காணப்பட்டது. இதையடுத்து மாலை கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான தேவர்சோலை, ஸ்ரீமதுரை ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றி முற்றி உள்பட பல ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கூடலூர் நகர பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் கடும் குளிர் நிலவியது.

    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
    • இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை மலை பயிர்கள் துறை அட்மா திட்டத்தின் கீழ் உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு அளியூர் கிராமத்தில் சிக்மா இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் ஹீலாமோரி தலைமை தாங்கினார். நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பயிற்சி நிலையத்தில் அறங்காவலர் குமார், தொழில்நுட்ப வல்லுநர் மகேஷ் மற்றும் ரமேஷ் சிறப்புரையாற்றினர். தோட்டக்கலை இயக்குனர் ஐஸ்வர்யா இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி அளித்தார். குமரகுரு இயற்கை வேளாண்மை குறித்தான இடர்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை அலுவலர் ரமேஷ் வரவேற்றார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

    • எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை.
    • அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊட்டி,

    அதிமுகவின் 51 வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடத்தில் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சிவினோத், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர் இனிப்புகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் வழங்கினார்.

    அப்போது பேசிய அவர் பொய் வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றனர். ஆனால் இதுவரை எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் மக்களை ஏமாற்றும் வேலையைதான் செய்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் அர்ஜூனன், முன்னாள் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஒன்றிய செயலாளர்கள் பேரட்டி ராஜீ, ஹேம்சந்த், கிருஷ்ணன், கிளை செயலாளர் நொண்டிமேடு கார்த்திக், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • யானை தும்பிக்கையால் தாக்கியது.
    • ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரி த்துள்ளது பொதுமக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    2 நாட்களுக்கு முன்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்கி பலியானார்கள். இந்தநிலையில் இன்று காலை ஓவேலி நம்பர் 4 பகுதியில் யானை தாக்கியதில் ஒரு பெண் படுகாயம் அடைந்துள்ளார்.

    அந்த பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 55). இன்று அதிகாலை இவர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது காட்டு யானை அவரது வீட்டு அருகே வந்தது.

    அந்த யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் மகாலட்சுமி அதிர்ச்சியுடன் விழித்தெ ழுந்தார். தப்பி ஓட முயன்ற அவரை யானை தும்பிக்கையால் தாக்கியது. இதில் மகாலட்சுமி பலத்த காயம் அடைந்தார். பின்னர் யானை அங்கிருந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. அக்கம்பக்கத்தினர் மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டனர். காயம் அடைந்த மகாலட்சுமி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து வனத்துறை ஊழி யர்கள் நேரில் சென்று விசா ரணை மேற்கொண்டனர்.

    • வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட யூசுப்பிற்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100 வழங்கப்பட்டது.
    • நகராட்சி ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    குன்னூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சந்திரா காலனி குடியிருப்பில் நடைபாதைக்காக 40 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. தொடர் மழையால் இந்த தடுப்புச்சுவர் நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் இடிந்து, யூசுப் என்பவரது வீட்டின் மீது விழுந்தது. இதனால் அவரது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் நடைபாதை ஓரத்திலிருந்த மின்கம்பங்களை மாற்று இடத்தில் அமைத்து மின் இணைப்பு வழங்கினர்.

    வீட்டின் சுவர் இடிந்து பாதிக்கப்பட்ட யூசுப்பிற்கு அரசு நிவாரண தொகையாக ரூ.4,100 வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி குமரன் காலனி பகுதியில் செவனம்மாள் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சபீர்கான், கிராம உதவியாளர் அறிவாகரன் மற்றும் வருவாய்த்துறையினர், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகையான ரூ.4,100 வழங்கினர். 

    • பீரோவில் வைத்திருந்த 27 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    • தனிப்படை போலீசார் கர்நாடகா, கேரளாவில் விசாரணை நடத்தினர்.
    • கனகம்மாள் கூடலூா் ராஜகோபாலபுரம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார்.
    • கூடலூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    ×