என் மலர்
நீலகிரி
- குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
- இளைஞா்கள் முதல் 61 வயது முதியவா் வரை கலந்து கொண்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந் நிலையில் கொலக்கம்பை காவல் துறையினா், மலையக மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் இளைஞா் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய மாரத்தான் ஓட்டம் சேலாஸ் பஜாா் பகுதியில் தொடங்கி கொலக்கம்பை வரை நடைபெற்றது.
மலையக மக்கள் அறக்கட்டளையைச் சோா்ந்த மதிவாகனம் வரவேற்றாா். குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் கோவிந்தசாமி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
இந்த விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் சிறுவா்கள், இளைஞா்கள் முதல் 61 வயது முதியவா் வரை கலந்து கொண்டனா். இதில் சிறியவா்களுக்கு ஒரு கிலோ மீட்டா், நடுத்தர வயதினருக்கு நான்கு கிலோ மீட்டா், பெரியவா்களுக்கு 10 கிலோமீட்டா் வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கொலக்கம்பை காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- இந்த ஆண்டுக்கான பண்டிகை, தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
- தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் குரும்பா், இருளா், காட்டுநாயக்கா், பனியா், தோடா், கோத்தா் என ஆறு பண்டைய பழங்குடிகள் வசித்து வருகின்றனா். இதில் தோடரின மக்கள் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வருகின்றனா்.
இவா்கள் தங்களுடைய மந்துகளில் டிசம்பா் மாத இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ மொா்டுவொா்த் என்ற பாரம்பரியப் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனா்.
இந்த ஆண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும் மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்துகொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன்போ மற்றும் ஓடையாள்போ கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
கோவில் வளாகத்து க்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதால் தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து வழிபாடு நடத்தினா். மேலும் தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடி பழங்குடியின தெய்வத்தை வழிபட்டனா்.
பின்னா் தோடரின இளைஞா்கள் இளவட்டக் கற்களைத் தூக்கி தங்கள் பலத்தை நிரூபித்தனா்.
இளவட்டக்கல் 100 கிலோ எடைகொண்டதாகவும், முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
விழாக் காலங்களில் இந்தப் போட்டி நடைபெறும். ஊட்டியில் தோடர் இன மக்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், இளவட்டக்கல்லை தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. வெண்ணெய் பூசப்பட்ட 75 கிலோ எடை கொண்ட கல்லை தோடர் இன இளைஞர்கள் தூக்கி, அதனை தோலில் வைத்து முதுகுக்கு பின்புறமாக கீழே போட்டு அசத்தினார்கள்.
இந்த விளையாட்டு நிறைவடைந்ததும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவா்கள் பிரியாவிடை பெற்று தங்களது சொந்த மந்துகளுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
- கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 122 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலும் நல உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
- பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 7-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1598 பயனாளிகளுக்கு ரூ.5.41 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 849 பயனாளிகளுக்கு ரூ.2.86 கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.12.35 லட்சம் மதிப்பிலும், கூடுதல் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 81 பயனாளிகளுக்கு ரூ.5.74 லட்சம் மதிப்பிலும், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.68 ஆயிரம் மதிப்பிலும், சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 122 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலும் நல உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
மின்களம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி 5 பயனாளிகளுக்கு ரூ.4.99 லட்சம் மதிப்பிலும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.22.89 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு ரூ.3.35 லட்சம் மதிப்பிலும் 49 என மொத்தம் 2,814 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பயனடைந்த மாற்றுத்தி றனாளி பயனாளி லங்கேஷ்வரன் கூறுகையில் நான் உட்லேண்ட், முசாபுரி, குன்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தனியார் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறேன். நான் தினமும் வேலைக்கு செல்ல பிறர் வாகனத்தை பயன்படுத்தி வந்தேன். இந்நிலையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ண ப்பித்திருந்தேன்.
என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 3-ந் தேதி அன்று ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில், நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் கிடைக்கப் பெற்றது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர் உதவியுடன் வேலைக்கு சென்று எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல பயன் அடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி பிரிடா ஜாஸ்மின் என்பவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- ஊட்டி, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அரவேணு, கொடநாடு, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மிதமான வெயிலும், அதிகாலை மற்றும் இரவில் கடும் பனிப்பொழிவும் காணப்பட்டது.
பனிப்பொழிவால் விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பனிப்பொழிவுடன் உறைபனியும் கொட்டியதால் மக்கள் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக குன்னூர் மற்றும் வண்டிச்சோலை, ஒட்டுப்பட்டரை, எடப்பள்ளி, வண்ணாரபேட்டை, அருவங்காடு, வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 மணி முதல் மழை பெய்தது.
மாலை தொடங்கிய மழையானது அதிகாலை வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் குன்னூர் பஸ் நிலைய பகுதி, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகளில் கற்களும், மணலும் சேர்ந்தது, அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. மழையுடன் கடுமையான குளிரும் நிலவியது.
இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
ஊட்டி, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அரவேணு, கொடநாடு, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஊட்டியில் காலையில் இருந்தே மிதமான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்திருந்தனர்.
அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவியது. நேற்று காலை முதல் நிலை மாறி மேகமூட்டமாக காணப்பட்டது.
மாலைக்கு பிறகு மழை பெய்ய தொடங்கியது. பாப்பநாயக்கன் பாளையம், அண்ணாசிலை, ரெயில் நிலையம், டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மழையில் நனையாமல் இருக்க வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஒரு சிலர் மழையில் நனைந்தபடியே வாகனங்களை இயக்கி சென்றதையும் காண முடிந்தது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதேபோல் புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர், வடவள்ளி, பேரூர், பொள்ளாச்சி, சூலூர், வால்பாறை, கருமத்தம்பட்டி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை, சோமனூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருக்கிறதா என சோதனை நடத்தினர்.
- நீலகிரியில் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பொருட்கள் உள்பட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், வெளிமாநில மற்றும் பிற மாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகையால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகமாக இருந்தது.
இதையடுத்து நீலகிரியில் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தொடர் விடுமுறை என்பதால், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி மகாராஜன் சுகாதார ஆய்வாளர் மருத்துவர் ஸ்ரீதரன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், வாகன நிறுத்தும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஒரு தங்கும் விடுதிக்கு ரூ.10 ஆயிரம், சுற்றுலா பயணிகளுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.13 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. ஒரு தங்கும் விடுதிக்கு சீல்வைக்கபட்டது
- இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை தயாரிக்கும் பணியை ஆட்சியா் அம்ரித் ஆய்வு செய்தாா்.
- கேத்தி பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கினார்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம், கேத்தி தோ்வுநிலை பேரூராட்சிக்கு உள்பட்ட வளம் மீட்பு பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்காக ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் 9 ஆட்டோ வாகனங்களை ஆட்சியா் அம்ரித் தொடங்கிவைத்தாா்.
மேலும் கேத்தி பேரூராட்சியில் பிரகாசபுரத்தில் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்கா மூலம் வீடுவீடாக சென்று தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை தயாரிக்கும் பணியை ஆட்சியா் அம்ரித் ஆய்வு செய்தாா்.
அதனைத் தொடா்ந்து வளம் மீட்பு பூங்காவில் அமைந்துள்ள மலிவு விலை இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் விற்பனை செய்யும் கூடத்தை திறந்துவைத்தாா். மேலும், கேத்தி பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கௌரவப்படுத்தினாா்.
பசுமைப் புரட்சி ஏற்படுத்த மரக்கன்றுகளை நட்டு வைத்தும், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்க்கும் வகையில் மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கேத்தி பேரூராட்சித் தலைவா் ஹேமாமாலினி, குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமாா், குன்னூா் வட்டாட்சியா் சிவகுமாா், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.
- ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை சிவகிருஷ்ணா, விபின் குமார் மற்றும் கிரேஸி ஆகியோர் செய்தனர்.
அரவேணு,
ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா முன்னிலை வகித்தனர்.
இதில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நுகர்வோர் சார் அம்சம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.
இதில் துணை தலைவர் ஜெயந்தி, இணை செயலாளர் கண்மணி, செயற்குழு உறுப்பினர்கள் லிலிதா, சங்கீதா, ராதிகா, தேவி, ராமகிருஷ்ணன், விபின்குமார், சிவகிருஷ்ணா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பீட்டர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சிவகிருஷ்ணா, விபின் குமார் மற்றும் கிரேஸி ஆகியோர் செய்தனர்.
- வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப்பகுதிகளை விட்டு உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் நகர்புறங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி லுக் சர்ச் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2 காட்டெருமைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தன. திடீரென 2 காட்டெருமைகளும் சண்டையிட்டு கொண்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெகுநேரமாக சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது எனவும், நாம் தொந்தரவு செய்யாமல் இருந்தால் வனவிலங்குகள் தானாகவே சென்றுவிடும் என அறிவுரை கூறினர்.
- ஒரு சில காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளையும்.
- முட்டைகோசை விட பல மடங்கு சிறியதாக இருக்கும். இதனை ஜுனியர்’ கோஸ் என்றும் அழைக்கின்றனர்.
ஊட்டி,
அசைவ உணவின் சுவைக்கு ஈடு கொடுக்கும் சில காய்கறி களின் வருகையால், சைவ பிரியர்கள் குஷி அடைந்து ள்ளனர்.
ஒரு சில காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளையும். மீண்டும் அவற்றை சுவைக்க அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாய புரட்சி காரணமாக அனைத்து வகை காய்கறிகள், பழங்களையும் ஆண்டு முழுவதும், நினைத்த நேரத்தில் விளைவித்து சுவைத்து மகிழ முடிகிறது.
வீரிய விதைகள் மற்றும் வெளிநாட்டு விதைகள் மூலம், புதுரக காய்கறிகளும் தமிழகத்தில் விளைவிப்பது அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் குளிர்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள், தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கா னலில் விளைவிக்க ப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
அந்த வகையில் அசைவ உணவின் சுவைதரும் கிளை கோஸ் நீலகிரி மாவட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவி க்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான முட்டைகோசை விட பல மடங்கு சிறியதாக இருக்கும். இதனை ஜுனியர்' கோஸ் என்றும் அழைக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் இந்த கோஸ் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளிமாவட்ட வியாபாரிகளும் இதனை வாங்கி செல்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கிளை கோஸ் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வந்தது.
தற்போது கிளை கோஸ் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. அதுவும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது. அதன்படி ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ கிளை கோஸ் நேற்று ரூ.500முதல் ரூ.550 வரை விற்பனையானது.
- கடையில் சோதனை நடத்தினர்.
- போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் உள்ள ஜெயபால் (வயது 47) என்பவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயபாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- நகர பகுதியில் ரோந்து சென்றனர்.
- கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் உள்ளிட்ட போலீசார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், கூடலூர் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி மற்றும் துணை தலைவர் ரவிகுமார் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் கலெக்டரை சந்தித்து நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்த மனுவினை வழங்கினர். அந்த மனுவில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியினை எளிதில் பெற ஏதுவாக 1500 சதுரடி வரையிலான கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தடுப்புசுவர்கள், மழை நீர் கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரிசெய்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ், முஸ்தபா, எல்கில் ரவி, தம்பி இஸ்மாயில், ரமேஷ், கீதா, நாகமணி, ரீட்டா, விஷ்னுபிரபு, ரகுபதி, கஜேந்திரன், செல்வராஜ், திவ்யா, மீனா, பிளோரினா, மேரி பிளோரினா, வினோதினி, வனிதா, அனிதாலட்சுமி, விசாலாட்சி, அபுதாகீர், நாதன், நாகராஜ், ரஜினிகாந்த், உமா நித்யசத்யா, ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.






