என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடியில் நலத்திட்ட உதவிகள்
- கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 122 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலும் நல உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
- பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 7-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1598 பயனாளிகளுக்கு ரூ.5.41 கோடி மதிப்பிலும், கடும் ஊனமுற்ற மாற்றுத்தி றனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 849 பயனாளிகளுக்கு ரூ.2.86 கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.12.35 லட்சம் மதிப்பிலும், கூடுதல் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 81 பயனாளிகளுக்கு ரூ.5.74 லட்சம் மதிப்பிலும், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.68 ஆயிரம் மதிப்பிலும், சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.1.75 லட்சம் மதிப்பிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 122 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலும் நல உதவி வழங்கப்பட்டிருக்கிறது.
மின்களம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி 5 பயனாளிகளுக்கு ரூ.4.99 லட்சம் மதிப்பிலும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூ.22.89 லட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு ரூ.3.35 லட்சம் மதிப்பிலும் 49 என மொத்தம் 2,814 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.8.90 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
பயனடைந்த மாற்றுத்தி றனாளி பயனாளி லங்கேஷ்வரன் கூறுகையில் நான் உட்லேண்ட், முசாபுரி, குன்னூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தனியார் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகிறேன். நான் தினமும் வேலைக்கு செல்ல பிறர் வாகனத்தை பயன்படுத்தி வந்தேன். இந்நிலையில் பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ண ப்பித்திருந்தேன்.
என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 3-ந் தேதி அன்று ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில், நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், எனக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் கிடைக்கப் பெற்றது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர் உதவியுடன் வேலைக்கு சென்று எனது அன்றாட பணிகளை செய்து வருகிறேன்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல பயன் அடைந்த மாற்றுத்திறனாளி பயனாளி பிரிடா ஜாஸ்மின் என்பவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.






