என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ வாகனங்கள்
    X

    நீலகிரியில் குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோ வாகனங்கள்

    • இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை தயாரிக்கும் பணியை ஆட்சியா் அம்ரித் ஆய்வு செய்தாா்.
    • கேத்தி பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கினார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம், கேத்தி தோ்வுநிலை பேரூராட்சிக்கு உள்பட்ட வளம் மீட்பு பூங்காவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்காக ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குப்பைகளை அகற்ற பேட்டரி மூலம் இயங்கும் 9 ஆட்டோ வாகனங்களை ஆட்சியா் அம்ரித் தொடங்கிவைத்தாா்.

    மேலும் கேத்தி பேரூராட்சியில் பிரகாசபுரத்தில் சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்கா மூலம் வீடுவீடாக சென்று தூய்மைப் பணியாளா்கள் சேகரிக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை கொண்டு இயற்கை உரம் மற்றும் மண்புழு உரங்களை தயாரிக்கும் பணியை ஆட்சியா் அம்ரித் ஆய்வு செய்தாா்.

    அதனைத் தொடா்ந்து வளம் மீட்பு பூங்காவில் அமைந்துள்ள மலிவு விலை இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் விற்பனை செய்யும் கூடத்தை திறந்துவைத்தாா். மேலும், கேத்தி பேரூராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் கௌரவப்படுத்தினாா்.

    பசுமைப் புரட்சி ஏற்படுத்த மரக்கன்றுகளை நட்டு வைத்தும், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்க்கும் வகையில் மஞ்சப் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

    இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி உதவி இயக்குநா் இப்ராஹிம்ஷா, கேத்தி பேரூராட்சித் தலைவா் ஹேமாமாலினி, குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமாா், குன்னூா் வட்டாட்சியா் சிவகுமாா், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலா் நடராஜன், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×