ஊட்டி மார்க்கெட்டில் கிளைகோஸ் விலை கிடுகிடு உயர்வு

ஒரு சில காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளையும். முட்டைகோசை விட பல மடங்கு சிறியதாக இருக்கும். இதனை ஜுனியர்’ கோஸ் என்றும் அழைக்கின்றனர்.
ஊட்டி மார்க்கெட்டில் கிளைகோஸ் விலை கிடுகிடு உயர்வு
Published on

ஊட்டி,

அசைவ உணவின் சுவைக்கு ஈடு கொடுக்கும் சில காய்கறி களின் வருகையால், சைவ பிரியர்கள் குஷி அடைந்து ள்ளனர்.

ஒரு சில காய்கறிகள், பழங்கள் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளையும். மீண்டும் அவற்றை சுவைக்க அடுத்த சீசன் வரை காத்திருக்க வேண்டும்.

ஆனால், விவசாய புரட்சி காரணமாக அனைத்து வகை காய்கறிகள், பழங்களையும் ஆண்டு முழுவதும், நினைத்த நேரத்தில் விளைவித்து சுவைத்து மகிழ முடிகிறது.

வீரிய விதைகள் மற்றும் வெளிநாட்டு விதைகள் மூலம், புதுரக காய்கறிகளும் தமிழகத்தில் விளைவிப்பது அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் குளிர்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள், தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கா னலில் விளைவிக்க ப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

அந்த வகையில் அசைவ உணவின் சுவைதரும் கிளை கோஸ் நீலகிரி மாவட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவி க்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான முட்டைகோசை விட பல மடங்கு சிறியதாக இருக்கும். இதனை ஜுனியர்' கோஸ் என்றும் அழைக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் இந்த கோஸ் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளிமாவட்ட வியாபாரிகளும் இதனை வாங்கி செல்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கிளை கோஸ் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாகி வந்தது.

தற்போது கிளை கோஸ் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. அதுவும் வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து இருக்கிறது. அதன்படி ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ கிளை கோஸ் நேற்று ரூ.500முதல் ரூ.550 வரை விற்பனையானது.

X

Maalai Malar
www.maalaimalar.com