என் மலர்
நாமக்கல்
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
- சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.
மாற்று திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு விதிகளின் படி தேர்வு எழுத உரிய சலுகை கள் வழங்கப்பட்டிருந்தன. பொது தேர்வு பணியில் 70 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள் , 344 முதன்தமை கண்காணிப்பா ளர்கள், 344 துறை அலுவலர்கள் 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பா ளர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 844 பேர், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லா பணி யாளர்கள் நியமனம் செய்யபட்டு கண்காணித்த னர்.
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 20 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் எழுதினர். 300 அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் எழுதினர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 94 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. 94 முதன்ைம கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள் மறறும் கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஸ்ரீநாமகிரி தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோவில் மலையை குடைந்து குடவறை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
- கோவிலில் மேற்கு பகுதியில் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாமகிரி தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோவில் மலையை குடைந்து குடவறை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த கோவிலில் மேற்கு பகுதியில் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மலையின் கிழக்கு புறத்தில் ஸ்ரீஅரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த 3 கோவில்களுக்கு தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு கோட்டை பகுதியில் ஸ்ரீநரசிம்மர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாலை 4 மணிக்கு மெயின் ரோட்டில் ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ேதரோட்டமும் நடைபெற உள்ளது. இத்தேர்திருவிழவையொட்டி 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க 10 இடங்களில் டிரோன் காமிரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கோட்டை ரோடு பகுதியில் இன்று காலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பார்க் ரோடு, உழவர் சந்தை வழியாக சென்றது.
இன்று மாலை அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டத்தையொட்டி மெயின்ரோடு, தட்டார தெரு, சேந்தமங்கலம் ரோடு பகுதிகளில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. இதனால் சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கோட்டை ரோடு, உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்தடையும்.
- நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அழியாக்குழந்தைபுதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (வயது 85). இவர் தனியாக வசித்து வருகிறார்.
- நித்திய ராஜவேலன் (27) என்ற கூலித் தொழிலாளி, மூதாட்டி நல்லம்மாளிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அழியாக்கு ழந்தைபுதூர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மனைவி நல்லம்மாள் (வயது 85). இவர் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சம்ப வத்தன்று, அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் நித்திய ராஜவேலன் (27) என்ற கூலித் தொழிலாளி, மூதாட்டி நல்லம்மாளிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு மூதாட்டி மறுக்கவே நித்திய ராஜவேலன் மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததார். காயம் அடைந்த நல்லம்மாள், நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் இது பற்றி நல்லம்மாள் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீ சார், நித்திய ராஜவேலன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு அவரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ராசிபுரம் கிளை சிறைச்சா லையில் அடைத்தனர்.
- பங்குனி உத்திரத்தை யொட்டி முருகன் கோவில்க ளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- வட்டமலை வேலாயுத சுவாமி கோவிலில் காவிரி யிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆரா தனைகள் நடத்தப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதியில் பங்குனி உத்திரத்தை யொட்டி முருகன் கோவில்க ளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வட்டமலை வேலாயுத சுவாமி கோவிலில் காவிரி யிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆரா தனைகள் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பால முருகன் கோவிலில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா லித்தர். காவடி பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஜெயக்குமார் (வயது 30). இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
- நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 30). இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் கடந்த 3 மாதங்களாக மது குடித்து விட்டு ஜவுளி வியாபா ரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மனைவி புவனேஸ்வரி இதனை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக ஜெயக்குமார் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள், அவரைக் காப்பாற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தினந்தோறும் யானை, குதிரை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவம் மற்றும் பூ பல்லக்கும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா கடந்த 29-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை தினந்தோறும் யானை, குதிரை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவம் மற்றும் பூ பல்லக்கும் நடைபெற்றது.
நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, விஜயகிரி வடபழனி யாண்டவர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேரை நிலை சேர்த்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று சத்தாபரணமும், கொடி இறக்குதலும், நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.
- வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும், காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350-க்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நாமக்கல் மாவட்டம் அமைப்பு குழுவின் சார்பில் மாவட்டத்தில் உள்ள, 8 தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. வீட்டு மனை இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை கேட்டும், காலி நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கவும், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும் 350-க்கு மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.
இதில் முருகேசன், ரங்கசாமி, சக்திவேல், பராசக்தி, ராணி, சுந்தர், சண்முகம்,சண்முகம், சிவராஜ், சுப்ரமணி, அருண்குமார், துரைசாமி, பாஸ்கர் முருகேசன், சந்திரசேகரன், பழனிசாமி, பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், சுல்தான்பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகபெருமானுக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அதேபோல், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அணிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், கு.அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜா சுவாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
- பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளை யம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளை யம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம் மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்க ளில் பங்குனி மாத பவுர்ண மியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
- டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்த தேவையான இடத்தை, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், அம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மற்றும் பார் அமைத்தால் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் டாஸ்மாக் கடை அமைக்க பூமி பூஜை போட வந்தவர்களையும், பொக்லைன் எந்திரத்தையும் முற்றுகையிட்டனர். இதையடுத்து, பூமி பூஜை போடும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
- முட்டை விலை கடந்த 10 நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது.
- கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 92 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம் ஈரோடு, திருப்பூர், பல்லடம் ஆகிய பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் அதிகமாக கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 92 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதே போல நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் செய்யாமல் 62 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முட்டை விலை கடந்த 10 நாட்களாக 450 காசுகளாக நீடிக்கிறது. இதனால் முட்டை விலை 40 காசுக்கு மேல் குறைத்து விற்க கூடாது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
- பலபட்டறை மாரியம்மன் கோவில் பக்தர்கள் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
- சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது வடக்குப்புறத்தில் இருந்த காலி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கும்பாபிசேக விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் பக்தர்கள் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மே மாதத்தில் தொடங்கி ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறுவது சிறப்பு ஆகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது வடக்குப்புறத்தில் இருந்த காலி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கும்பாபிசேக விழா நடைபெற்றது. பின்னர் தனி நபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், அந்த சுவர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையொட்டி அரசு அதிகாரிகள் முன்னிலையில் கோவிலின் வடக்குப்புற சுவர் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி இடிக்கப்பட்டது. தற்போது சிறப்பு வாய்ந்த கோயிலின் ஒரு பகுதி சுவர் இல்லாமல், திரையிட்டு மூடப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு என்பதை, பழைய ஆவணங்களின்படி கணக்கிட்டு, அளவீடு செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வசதியாக இருக்கும் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






