என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலையில் ஜவுளி வியாபாரிவிஷம் குடித்து தற்கொலை
    X

    கபிலர்மலையில் ஜவுளி வியாபாரிவிஷம் குடித்து தற்கொலை

    • ஜெயக்குமார் (வயது 30). இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
    • நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 30). இவர் ஊர் ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் கடந்த 3 மாதங்களாக மது குடித்து விட்டு ஜவுளி வியாபா ரத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மனைவி புவனேஸ்வரி இதனை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக ஜெயக்குமார் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது வீட்டிற்கு அருகில் இருந்தவர்கள், அவரைக் காப்பாற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×