என் மலர்
நாகப்பட்டினம்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அதனை பின்பற்றாமல் விதிமீறி செயல்படுபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் ரோந்து சென்றபோது நிம்மேலி பகுதியில் கூட்டமாக மரத்தடியில் அமர்ந்திருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்கள் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடியது தெரியவந்தது. இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சூரக்காடு பகுதியில் சீட்டாடிய 7 பேரை கைது செய்தனர்.
பொதுவாக ஒரு குடும்பத்தில், ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்து விட்டாலே அந்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து விடும். ஆனால், மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரியில் ஒரு குடும்பத்தில் உள்ள 6 பேருமே மாற்றுத்திறனாளியாக இருக்கிறார்கள் என்றால் அது வேதனையிலும் வேதனையான செய்தியாகும். ஏற்கனவே வறுமையில் வாடி வந்த இந்த குடும்பத்தினர், ஊரடங்கால் அடியோடு வருவாயை இழந்து கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த சோக கதையை பார்ப்போம்!.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முரளி(வயது 53). 3 அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளியான இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே மாற்றுத்திறனாளிகள் என்பது உள்ளத்தை உருக வைப்பதாக உள்ளது.
இவரது சகோதரர் ரகு(48), 4 அடி உயரமும், சகோதரி லட்சுமி(45), 3½ அடிக்கு சற்று குறைவாகவும், இளைய சகோதரர் பாலாஜி(35) ஆகியோர் 3 அடி உயரமும் கொண்ட மாற்றுத்திறனாளிகள். இதில் சகோதரர்கள் 3 பேரும் பத்தாம் வகுப்பு வரையில் படித்துள்ளனர். இவர்களது தாய் வசந்தாவும்(73), இக்குடும்பத்திலேயே சிறுவயது முதல் வசித்து வரும் வசந்தாவின் சகோதரி லட்சுமியும்(60) காது கேட்காத, பேசவும் முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
முரளியின் தந்தை நாராயணன், திருமணஞ்சேரியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர். நல்ல உடல் தகுதியுடன் இருந்த இவர் காது கேட்காத, வாய் பேச முடியாத தனது அக்காள் மகள் வசந்தாவை கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு கருணை உள்ளத்தோடு திருமணம் செய்து கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளியான வசந்தாவின் சகோதரி லட்சுமியையும் தனது குடும்பத்தில் சேர்த்து பராமரித்து வந்தார்.
கருணை உள்ளம் கொண்ட நாராயணனின் வாழ்க்கையில் இயற்கை கருணை காட்டவில்லை. அவருக்கு பிறந்த 4 குழந்தைகளுமே மாற்றுத்திறனாளிகளாக பிறந்தது நாராயணனின் வாழ்க்கையில் தீராத சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், தான் வாழ்ந்த வரையில் தனது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்காமல், நாராயணன் காப்பாற்றி வந்தார். மேலும் தனது ஒரே பெண்ணான லட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு நாராயணன் இறந்த பிறகு அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. தன் தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்தை கொஞ்சம், கொஞ்சமாக விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த குடும்பத்தின் தலைமகனான முரளி, தந்தையின் மரணத்துக்கு பிறகு செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
இந்த குடும்பத்தில் தற்போது வசிக்கும் 5 பேரும், வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஊனமுற்றோர் உதவித்தொகை தலா ரூ.1000 வீதம் ரூ.5 ஆயிரத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சோதனை மேல் சோதனையாக பாலாஜி நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் சரிவர பணம் கட்டாத காரணத்தால், அந்த கடன் தொகைக்காக அக்குழுவின் தலைவரான பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் வசந்தா, லட்சுமி ஆகிய 3 பேரின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது வங்கி நிர்வாகம்.
உதவித்தொகையை வைத்து ஒரு நாளைக்கு 2 வேளை உணவு சாப்பிட்டு வந்த இந்த குடும்பத்தினர் தற்போது ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை மாவட்ட கலெக்டர், திருமண பிரார்த்தனை தலமான திருமணஞ்சேரி உத்வாகநாத சாமி கோவிலில் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய் உடைக்கும் பணியை(அர்ச்சகருக்கு உதவும் பணி)ரகுவுக்கு வழங்கினார். அந்த பணிக்காக அவருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
அந்த வருமானத்தை வைத்து ரகு தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் ஊரடங்கு இவரது வருமானத்திற்கு ஆப்பு வைத்தது. ஊரடங்கால், திருமணஞ்சேரி உத்வாகநாத சாமி கோவில் நடையும் அடைக்கப்பட்டுள்ளதால் தற்போது அந்த வருமானமும் இன்றி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் ரகு குடும்பத்தினர் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்றும், அவர்களது கஷ்டத்தை நிரந்தரமாக போக்க குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்காவது அரசு வேலை வழங்கி காப்பாற்ற தமிழக அரசு முன்வருமா? என்றும் இந்த(மாற்றுத்திறனாளிகள்) குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
சீர்காழி:
கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே3 வரை மத்திய, மாநில அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் பொது மக்கள், கூலிதொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதிப்பை சரி செய்யும் வகையில் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை மூலம் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரணநிதியுதவியை வழங்கி வருகிறது.
அதேபோல் பதிவு செய்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும் அரசு நிதியுதவியினை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. ஆனால் கடந்த 30 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள ஆவண எழுத்தர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை.
ஊரடங்கு உத்தரவில் சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டதன் மூலம் கடந்த 20ம்தேதி முதல் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் போக்குவரத்து இல்லாததாலும், பொதுமக்களள் வருகை குறைவாலும் பத்திரபதிவு அலுவலகத்திற்கு யாரும் வருவதில்லை. ஆன்லைன் பத்திப்பதிவு மேற்கொள்ளும் போது ஆவண எழுத்தர்கள் மூலமாக அவர்களுடைய அலுவலகத்தில் கணினியில் பத்திரம் தட்டச்சு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு அதன் பின்னரே பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவுக்கு ஏற்றப்படும்.
ஆனால் ஆவண எழுத்தர்களின் அலுவலகம் (கணினி தட்டச்சு) திறந்து செயல்பட எந்தவித அறிவுறுத்தலும் அரசால் தெளிவாக வழங்கப் படவில்லை. இதனால் பத்திரப்பதிவு அலுவலகம் செயல் பட்டாலும் கடந்த 1 மாதகாலமாக ஆவண எழுத்தர்கள், முத்திரைதாள் விற்பனையாளர்கள் பணிகள் இன்றி வருவாய் இழந்து சிரமப்படுகின்றனர்.ஆகையால் பதிவு செய்யப்பட்ட ஆவண எழுத்தர்கள், முத்திரைதாள் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட குறைந்தபட்ச நிவாரணத் தொகையை அரசு அறிவிக்கவேண்டும்.
ஆவண எழுத்தர்களுக்கு கொரோனா தொற்று நோயால் இறப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களது குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி, வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என சீர்காழி வட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு மே 3-ந் தேதி வரை மத்திய, மாநில அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் கால நிர்ணயம் செய்து திறக்கப்பட்டு வருகிறது.சீர்காழி போலீசார் தீவிரமாக கண்காணித்து ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
சமூக இடைவெளியில்லாமல் மளிகை கடைகள், காய்கனி கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து வார்டுகளிலும் வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் வாரத்திற்கு 2 கிழமைகள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி நகரில் சுற்றி திரிபவர் களையும், கூட்டம் சேர்ந்து விளையாடுபவர்கள், பேசிக் கொண்டிருப்பவர்களை கண்காணிக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் வந்தனா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் (டிரோன் காமிரா) மூலம் சீர்காழி நகரின் நாள் முழுவதும் கண்காணித்தனர்.
சீர்காழி புதிய, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை தாழ்வாக டிரோனை பறக்க செய்து எச்சரித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளிலும் டிரோனை ஓடவிட்டு கண்காணித்தனர்.
அதேபோல் சீர்காழி ஈசானியத் தெரு, எடமணல் கிராமப்பகுதி திடலில் கிரிக்கெட் விளையாடியவர்களை டிரோன் மூலம் காவலர்கள் கண்காணித்தனர். அப்போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் இதனை கண்டு மரத்தடியில் மறைந்து தப்பினர்.
இருந்தும் டிரோனை தாழ்வாக பறக்கவிட்டு காவலர்கள் எச்சரித்தனர்.
இதேபோல் திருமுல்லை வாசல் கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்தினையும் டிரோன் மூலம் கண்காணித்து போலீசார் விரட்டியடித்தனர். இதனால் சீர்காழியில் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புத்தூர், புதுப்பட்டினம், கொள்ளிடம் என சுமார் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இந்த அச்சகங்களில் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே அதாவது சித்திரை, வைகாசி மாதங்களில் தான் அதிகளவு திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் என அதிகளவு அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் அச்சு செய்திட ஆர்டர்கள் வரும்.
மற்ற நாட்களில் பில் புக்குகள், லெட்டர் பேடுகள் மற்றும் குறைந்த அளவிலான திருமணம் போன்ற அழைப்பிதழ்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறும். இந்நிலையில் நிகழாண்டு சீசன் தொடங்கும் இவ்வேலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அச்சகங்களும் மூடப்பட்டு அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து மே3-ந்தேதிக்கு மேல் அச்சகங்கள் திறக்கப்பட்டாலும் வரும் மாதங்களிலும் சுப நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நடத்துவதை தள்ளி வைக்கவே நினைப்பர். இதனால் இந்த ஆண்டு அச்சகங்களின் சீசன் முற்றிலும் பாதிக்கப்பட்டு அடுத்த சித்திரை, வைகாசி முகூர்த்த அழைப்பிதழ்கள் அடிக்கும் நாள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அச்சக தொழில் எந்திரங்கள், கணினிகள், இங்க் போன்ற அச்சு பொருட்கள் மூல தனங்களுக்கு அச்சக உரிமையாளர்கள் வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்று தான் தொழிலை நடத்தி வருகின்றனர்.
ஆகையால் அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அச்சக தொழிலுக்கு உரிய கொரோனா நிவாரண நிதியுதவியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் 40 காக்கைகள் மற்றும் 3 நாய்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. தகவல் அறிந்த சுகாதார, கால்நடை துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த காக்கைகள் மற்றும் நாய்களுக்கு பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னர் தான் எப்படி இவைகள் இறந்தன? என்ற விவரம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று மனிதர்களிடம் பரவி வரும் நிலையில் ஒரே நாளில் காக்கைகள், நாய்கள் இறந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் தமிழக அரசு சார்பில் நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், புத்தூர், மாதானம், தென்பாதி ஆகிய பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் நெல், அரிசி, உளுந்து ஆகியவற்றை நவீன அரிசி ஆலையில் ஏற்றி, இறக்கி வந்தனர்.
மேலும் எடமணல் கிராமத்தில் அரசு உணவு சேமிப்பு கிடங்கு இருப்பதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் பயன் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 29 நாட்களாக மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த ஊரடங்கால் பல்வேறு துறைகள் வருவாய் இழந்து முடங்கி உள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
இதேபோல் சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், ஊரடங்கு அமலில் இருப்பதால் லாரிகளை இயக்க முடியாமல் கடந்த ஒரு மாதமாக வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக லாரி டிரைவர்கள், வாழ்வாதாரத்தை இழந்து குடும்பம் நடத்த முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். லாரிகள் இயக்கப்படாததால் அரிசி ஆலை பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலு கூறியதாவது:-
சாதாரண நாட்களிலேயே போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் லாரி உரிமையாளர்களும், டிரைவர்களும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக லாரிகளை இயக்க முடியாமல் மேலும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் லாரி டிரைவர்கள் அன்றாடம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் நடத்தி வந்தனர்.
ஆனால் தற்போது ஊரடங்கால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் லாரி டிரைவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். எனவே, சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள லாரி டிரைவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும், கொரோனா வைரஸ் உறுதி உறுதி செய்யப்பட்ட 44 பேரின் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு காவல் துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பதிக்கப்பட்டவர்கள், குடியிருப்பு பகுதிகள், சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் தொடர்பில் உள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என ரேபிட் கருவியை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதை காவல்துறை தலைவரும், தஞ்சாவூர் சரக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அதிகாரியுமான சாரங்கன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் பார்வையிட்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் வேட்டைக்காரனிருப்பு கிராமம் வடக்கு சல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது36). இவர் தன் சொந்த நகைகளை அடகு வைத்து அதே ஊரைச் சேர்ந்த சிவரஞ்சன் (27) என்பவருக்கு 90 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
பலமுறை கேட்டு கொடுக்காததால் நேற்று சிவரஞ்சன் வீட்டிற்கு சென்று கவாஸ்கர் பணத்தை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவரஞ்சன் உள்பட 7 பேர் கவாஸ்கரை இரும்பு கம்பியால் தாக்கினர். பலத்த காயமடைந்த கவாஸ்கர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் சிவரஞ்சன், சிவகாந்தன், பிரவீன்ராஜ், மகேஷ், மாலா, சுரேஷ், சவுந்தர்ராஜ் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சிவரஞ்சன், சிவகாந்தன், பிரவீன்ராஜ் ஆகிய மூவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 4 ஆயிரத்து 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து 2994 இரு சக்கர வாகனங்கள், 60 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபட்ட 421 பேர் கைது செய்யபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்கார தெருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் காசிக்கு சென்றார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த பெண்ணை காசியில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வைத்து அந்த பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பெண் திருவள்ளூர் மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் செம்போடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செம்போடை மகராஜபுரம் சுந்தேரசன் (வயது42) தன் வீட்டிற்கு அருகே சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது வழக்குபதிவு கைது செய்தனர். சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.






