என் மலர்

  செய்திகள்

  வழக்கு பதிவு
  X
  வழக்கு பதிவு

  வேதாரண்யம் அருகே கடனை திருப்பி கேட்டவரை தாக்கிய 7 வாலிபர்கள் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே கடனை திருப்பி கேட்டவரை தாக்கிய 7 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  வேதாரண்யம்:

  வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் வேட்டைக்காரனிருப்பு கிராமம் வடக்கு சல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கவாஸ்கர் (வயது36). இவர் தன் சொந்த நகைகளை அடகு வைத்து அதே ஊரைச் சேர்ந்த சிவரஞ்சன் (27) என்பவருக்கு 90 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

  பலமுறை கேட்டு கொடுக்காததால் நேற்று சிவரஞ்சன் வீட்டிற்கு சென்று கவாஸ்கர் பணத்தை கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவரஞ்சன் உள்பட 7 பேர் கவாஸ்கரை இரும்பு கம்பியால் தாக்கினர். பலத்த காயமடைந்த கவாஸ்கர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைக்காரனிருப்பு இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் சிவரஞ்சன், சிவகாந்தன், பிரவீன்ராஜ், மகேஷ், மாலா, சுரேஷ், சவுந்தர்ராஜ் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

  இதில் சிவரஞ்சன், சிவகாந்தன், பிரவீன்ராஜ் ஆகிய மூவரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×