என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    காசிக்கு சென்று திரும்பிய நாகை பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

    காசிக்கு சென்று திரும்பிய நாகை பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாகையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்கார தெருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் காசிக்கு சென்றார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த பெண்ணை காசியில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வைத்து அந்த பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பெண் திருவள்ளூர் மாவட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×