என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    நாகை மாவட்டத்தில் கொரோனா கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனையை சிறப்பு அதிகாரி ஆய்வு

    காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என ரேபிட் கருவியை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அதிகாரி பார்வையிட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும், கொரோனா வைரஸ் உறுதி உறுதி செய்யப்பட்ட 44 பேரின் குடியிருப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு காவல் துறையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பதிக்கப்பட்டவர்கள், குடியிருப்பு பகுதிகள், சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் தொடர்பில் உள்ள காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என ரேபிட் கருவியை கொண்டு பரிசோதனை செய்யப்பட்டதை காவல்துறை தலைவரும், தஞ்சாவூர் சரக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அதிகாரியுமான சாரங்கன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×