என் மலர்
நாகப்பட்டினம்
வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து வேளாங்கண்ணி மாதாவை வழிபாடு செய்யலாம் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. விழாவில் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பேரூராட்சிக்கு உட்பட்ட உள்ளூர் மக்களுக்கு மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 9-ந்தேதியிலிருந்து வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து பக்தர் கள் வந்து மாதாவை வழிபாடு செய்யலாம் என பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பது வழக்கம். தற்போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கடற்கரை பகுதிக்கு செல்ல பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கடலுக்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை அடித்துக்கொன்றதாக தாய்- கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
வேளாங்கண்ணி:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 30). அறுவடை எந்திர டிரைவரான இவர் கடந்த 10-ந் தேதி ஒரு பெண் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என கூறி அவர்கள் இருவரும் குழந்தையை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடனே குழந்தையின் உடலை மருத்துவமனையில் விட்டு விட்டு ராமதாசும் அவருடன் வந்த பெண்ணும் தலைமறைவாகி விட்டனர்.
இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸ் மற்றும் அவருடன் வந்த பெண்ணை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே ராமதாஸ் மற்றும் அவருடன் வந்த பெண் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளியூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி எழிலரசி(28). மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மனுஸ்ரீ என்ற மகளும் இருந்தனர்.
எழிலரசியும், ராமதாசும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தொலைபேசி மூலம் அறிமுகமாகி அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வந்த ராமதாசும், எழிலரசியும் அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். லாட்ஜில் அவர்கள் உல்லாசமாக இருந்த போது குழந்தை மனுஸ்ரீ அவர்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் சரமாரியாக குழந்தை மனுஸ்ரீயை தாக்கி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் மனுஸ்ரீ மயங்கி விழுந்தாள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாசும், எழிலரசியும் குழந்தையை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனால் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே போட்டு விட்டு வேளாங்கண்ணிக்கு வந்த இருவரும் அறையை காலி செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசையும் எழிலரசியையும் கைது செய்தனர். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் வேளாங் கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகரஎலத்தூர் கிராமத்தில் வட்டார சுகாதாரதுறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகரஎலத்தூர் கிராமத்தில் வட்டார சுகாதாரதுறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர்.பபிதா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார், அப்போது அவர் கூறுகையில், அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சளி, இருமல், தும்மல் ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். வட்டார வள அலுவலர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி முருகவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், நந்தகுமார், சுந்தரம், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
சீர்காழி அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழி அருகே கோவில்பத்து கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(வயது24). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்றுமுன்தினம் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாமோதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணியில் விடுதி மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசமர தெரு பகுதியை சேர்ந்த மகன் ராமதாஸ்(வயது 30) இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தை மனுஸ்ரீ ஆகியோருடன் வேளாங்கண்ணிக்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த குழந்தையை ராமதாஸ் தம்பதியினர் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள முளப்பாக்கம் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது45). மணல் லாரி டிரைவர் சங்க முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய இளைஞர் அணி பொருளாளருமான இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மூங்கில் தோட்டம் கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். ரெயிலடி தெரு பிள்ளையார் கோவில் அருகே அவர் சென்ற போது எதிரே சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பாஸ்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாஸ்கர் உடலுக்கு நேற்று முன்னாள் அமைச்சர் கே. ஏ.ஜெயபால் உள்பட அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் குடும்பத்தின் காதணி விழாவிற்கு சென்று உள்ளார். மதியம் 2 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர், மகனுடன் கைது செய்யப்பட்டார். மேலும் குடவாசலை சேர்ந்த உறவினரும் போலீஸ் பிடியில் சிக்கினார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் தாலுகா கப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மதிவாணன்(வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கோதை(47). இவர்களுடைய மகன் கார்த்திக். அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவி(58). இவருடைய மகள் இலக்கியா.
இலக்கியாவை, கார்த்திக் காதலித்தார். இவர்களின் காதலை ரவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த இலக்கியா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவுக்கு கார்த்திக் தான் காரணம் என கருதிய ரவி அவரை கொலை செய்ய தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
சம்பவத்தன்று மதிவாணன் வீட்டுக்கு ரவி மற்றும் அவருடைய மகன் ஸ்ரீராம், உறவினர் சதீஷ்குமார் ஆகியோர் சென்றனர். அப்போது வீட்டில் கார்த்திக் இல்லை. இதனால் ரவி, ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து வீட்டில் இருந்த மதிவாணன், அவரது மனைவி பூங்கோதை ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மதிவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பூங்கோதையின் கை துண்டானது. உடனே சம்பவ இடத்தில் இருந்து ரவி உள்பட 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவி உள்பட 3 பேரும் மங்கைநல்லூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவி, அவரது மகன் ஸ்ரீராம்(28), உறவினர் குடவாசலை சேர்ந்த சதீஷ்குமார்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்து சீர்காழி கோர்ட்டில் அஜர்படுத்தி சீர்காழி கிளை சிறையில் அடைத்தனர்.
பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நாகை மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2,383 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் ஏழை, எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வேளாண்மைத்துறை மூலம் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள், விவசாயிகள் என்ற போலியான ஆவணங்கள் மூலம் இணைந்து தமிழகம் முழுவதும் மோசடி நடந்து இருப்பது குறித்து கண்டறிய மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் தகுதியில்லாதவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அதன்படி நாகை மாவட்டத்திலும் பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள் பட்டியலை கொண்டு வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 59 ஆயிரம் விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர்.
இதில் 9 ஆயிரம் விவசாயிகளின் பட்டியல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் கோவில் நிலத்தவர்கள், சாகுபடிதாரர்கள் என 3 ஆயிரம் பேர் தகுதி இல்லாதவர்களாக கண்டறியப்பட்டு அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை ரூ.30 லட்சம் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளியூர் பக்தர்கள் வரத்தொடங்கினர். பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பக்தர்கள் மட்டும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பகுதியில் உள்ள பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பேராலய விழாவில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.
இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட பேராலய நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வர தொடங்கி உள்ளனர். கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மாதாவை தரிசனம் செய்தனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தை சுற்றி சுமார் 400-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இதில் ஓட்டல்கள், பேன்சி ஸ்டோர்ஸ், முடி இறக்கி காணிக்கை செலுத்தும் சலூன்கள் போன்றவை அடங்கும். இதில் பாதி அளவு கடைகள் திறந்து இருந்தன. ஓட்டல்களில் விற்பனை குறைவாக இருந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி உள்ள தங்கும் விடுதிகளில் ஒரு சில விடுதிகள் திறக்கப்பட்டு இருந்தன.

வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி இறக்கம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இன்று முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க வேளாங்கண்ணிக்குள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், கலெக்டர் பிரவீன் நாயர், போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் இன்று(புதன்கிழமை) முதல் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வர வெளிமாநிலம், வெளி மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பேராலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர்பவனி பக்தர்கள் இன்றி நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 29-ந் தேதி பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதை தடுக்க பக்தர்கள் வரும் 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த நாகை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் தேரும் அடுத்து சூசையப்பர் தேரும், கடைசியாக அன்னை மாதா பெரிய தேரும் சென்றது. தேர்பவனி ஆலய வளாகத்தை சுற்றி நடந்தது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்து தேர் பவனியை தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், திருச்சி மண்டல ஐ.ஜி.ஜெயராமன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கம் நடக்கிறது.