என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை முகாம்
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகரஎலத்தூர் கிராமத்தில் வட்டார சுகாதாரதுறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அகரஎலத்தூர் கிராமத்தில் வட்டார சுகாதாரதுறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா வைரஸ் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர்.பபிதா தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார், அப்போது அவர் கூறுகையில், அனைவரும் தவறாமல் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சளி, இருமல், தும்மல் ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். வட்டார வள அலுவலர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி முருகவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாராமன், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ்குமார், நந்தகுமார், சுந்தரம், ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 200- க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
Next Story