என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை-பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மயிலாடுதுறை அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  மயிலாடுதுறை:

  நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் குடும்பத்தின் காதணி விழாவிற்கு சென்று உள்ளார். மதியம் 2 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
  Next Story
  ×