என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ராம்சிங் (வயது 54). என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், வீட்டு அருகிலேயே ஊறல் போட்டு வைத்திருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு போலீசார் சென்றனர்.
அப்போது ராம்சிங் தப்பி ஓடிவிட்டார். சோதனையில் வீட்டில் வைத்திருந்த ஒரு லிட்டர் எரிசாராயம் மற்றும் வீட்டருகே 2 கேன்களில் ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி அழித்தனர். ராம்சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் செல்லூர். சுனாமி குடியிருப்பை சேர்ந்த பதினெட்டாம் படியான் (வயது 41), பிஆர்புரம், கோவில் தெரு, அந்தோணி ராஜ் (34) ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளன.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையின்படி கலெக்டர் பிரவீன்பிநாயர் 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு காவல் சரகம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 46). இவர் அதே ஊரில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த வேதாரணயத்தில் படித்து கொண்டு தலைஞாயிறில் பெரியம்மா வீட்டில் தங்கி இருக்கும் பிளஸ்-1 மாணவியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதா கவும் மிரட்டியுள்ளாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் அறிவுரையின்படி வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சுப்ரியா வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின் பெரியம்மாவுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.






