என் மலர்
செய்திகள்

கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே ஓர்குடி ஆற்றங்கரை பகுதியில் சாராயம் விற்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஆனைமங்கலம்- மஞ்சவாடி காலனி தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சாலமன் மகன் டேவிட் சதிஷ் (29), ஆனைமங்கலம் - மஞ்சவாடி பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் இங்கர்சால் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






