search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேதாரண்யம் பகுதியில் நாளை முதல் தினமும் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நாளை முதல் தினமும் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் குழுவின் செயல்பாடுகளை கண்காணிக்கும் ஊராட்சி அளவிலான குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ தலைமையில் நடைபெற்றது

    கூட்டத்தில் ஆர்.டி.ஓ துரைமுருகன் தாசில்தார், ரமாதேவி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன், தனி அலுவலர் வேல்ஸ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், சுகாதார மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் குழு உறுப்பினர்களை அந்தந்த மண்டலங்களில் குழுவாக சென்று தினமும் 50 குடும்பங்களுக்கு வருகிற 7 ந் தேதி முதல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. வேதாரண்யம் ஊராட்சியில் உள்ள ஆதனூர், கோடியக்கரை, கோடியக்காடு, தேத்தாகுடி, தெற்கு நெய்விளக்கு, கருப்பம்புலம், குரவப்புலம், கடிநெல்வயல், பன்னாள் ஆகிய அனைத்து ஊராட்சிகளிருந்து கலந்து கொண்டனர்.
    Next Story
    ×