என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திட்டச்சேரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

    திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார்.
    திட்டச்சேரி:

    திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.இதில் 102 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நோய் தொற்று பாதிப்பு குறித்தும், நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் மருத்துவர்கள் மணிவேல், ஹரிதா, சுகாதார ஆய்வாளர் பரமநாதன், பேரூராட்சியின் இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×