என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    குருக்கத்தி, ராதாமங்கலம் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

    கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தி ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சிக்கல்:

    கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தி ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா சக்திவேல் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி தலைமையில் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 195 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதேபோல ராதாமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் ஜீவா தொடங்கி வைத்தார். இதில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ரோகிணி தலைமையில் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 156 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் 106 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    தலைஞாயிறை அடுத்த வாட்டாகுடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வீரமணி முன்னிலை வகித்தார்.இதில் சுற்றுவட்டார ஊராட்சிகளை சேர்ந்த 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதேபோல துளசாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.இதில் 60-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    Next Story
    ×