என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி கலெக்டர் தலைமையில் ஏற்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழுநோய் இல்லா இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்ற உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தலைமையில் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் எற்றனர்.
தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 ஊனமுள்ள தொழு நோயாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், இணை இயக்குநர் நலப்பணிகள் ராணி, துணை இயக்குநர் தொழுநோய் சங்கரி, நிலைய மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் டெல்டா வைரஸ் கொரோனா, ஒமிக்ரான் இணைந்து சமூகப் பரவலாக தொடங்கி உள்ளதாக கடந்த மாதம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக இரவு நேர ஊரடங்கு போடப்பட்டது. பிறகு ஞாயிறு முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் மட்டும் தவிர்த்து வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி மறுப்பு செய்யப்பட்டது.
இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது.
இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். அன்றாடம் 27 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிக்கும் போது ஏன் ஊரடங்கு தளர்த்தி பள்ளிகள் திறக்க வேண்டும்?
தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ஊரடங்கு போட மாட்டோம் என்பதை அரசு உத்தரவாதம் அளிக்குமா? பள்ளி மாணவர்களுக்கு 15 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதுவும் 2 டோஸ் போட வில்லை. எந்த அடிப்படையில் கொரோனாவால்
மூடி இருந்த பள்ளிக்கூடங்களை இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் திறக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.
பள்ளி திறப்பதால் எந்த பாதிப்பும் வராது, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்களா? தேர்தல் அரசியலுக்காக மாணவர்கள்
நலனை பாதிக்க கூடாது.
பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமருகலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருமருகல் ஒன்றிய பொறுப்பு செயலாளர் சந்திரசேகர், பொறுப்பு தலைவர் முத்துவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய சங்க நாகை மாவட்ட செயலாளர் பாபுஜி கோரிக்கை விளக்கி பேசினார்.
இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், திருமருகல் கிளை செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் சென்றதாக கூறப்படுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைபேட்டையை சேர்ந்தவர் மீனவர் அமிர்தலிங்கம் (வயது 43). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், மணிகண்டன், ஆறுமுகம், வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, தேவா, ஹரி, குணால், வெற்றி மற்றும் அமிர்தலிங்கம் உள்பட 12 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர் மணிகண்டன் தனது விசைப்படகை நாகை மாவட்டத்தை சேர்ந்த குமாரி என்பவரிடம் இருந்து வாங்கி பதிவு எண்ணை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் நாகை மீன்துறை அலுவலகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க டோக்கன் பெற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இரண்டு படகில் இருந்த 21 மீனவர்களும் கடல் வளம் மிகுந்து காணப்படும் காங்கேசன் துறைமுகம் அருகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தமிழக மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீன்படிக்கலாம். ஆனால் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லை பகுதியான காங்கேசன் துறையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 9 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டால் 2 படகுகள் மீதும் வெளிச்சத்தை பாய்ச்சி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்களா? இதனால் இப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என கூறி மணிகண்டன், அமிர்தலிங்கம் படகில் இருந்த 21 மீனவர்களையும் அழைத்து சென்று மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அமிர்தலிங்கம், மணிகண்டன் ஆகியோரது விசைப்படகும் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை காங்கேசன் அல்லது பருத்தித்துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை ஆஜர்படுத்தி விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.
நாகை அக்கரைபேட்டையை சேர்ந்தவர் மீனவர் அமிர்தலிங்கம் (வயது 43). இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மாவட்டத்தை சேர்ந்த செல்வம், மணிகண்டன், ஆறுமுகம், வினோதன், கந்தன், நரசிம்மன், மணி, தேவா, ஹரி, குணால், வெற்றி மற்றும் அமிர்தலிங்கம் உள்பட 12 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி மேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த 9 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர் மணிகண்டன் தனது விசைப்படகை நாகை மாவட்டத்தை சேர்ந்த குமாரி என்பவரிடம் இருந்து வாங்கி பதிவு எண்ணை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் மணிகண்டன், அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் நாகை மீன்துறை அலுவலகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க டோக்கன் பெற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இரண்டு படகில் இருந்த 21 மீனவர்களும் கடல் வளம் மிகுந்து காணப்படும் காங்கேசன் துறைமுகம் அருகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இப்பகுதியில் தமிழக மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீன்படிக்கலாம். ஆனால் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று இலங்கை மீனவர்கள் கூறியதன் பேரில் தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதன்பேரில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லை பகுதியான காங்கேசன் துறையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 9 பைபர் படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் அதிக வெளிச்சம் கொண்ட டார்ச் லைட்டால் 2 படகுகள் மீதும் வெளிச்சத்தை பாய்ச்சி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்களா? இதனால் இப்பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என கூறி மணிகண்டன், அமிர்தலிங்கம் படகில் இருந்த 21 மீனவர்களையும் அழைத்து சென்று மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அமிர்தலிங்கம், மணிகண்டன் ஆகியோரது விசைப்படகும் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை காங்கேசன் அல்லது பருத்தித்துறை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்களை ஆஜர்படுத்தி விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவருகிறது.
இதையும் படியுங்கள்... வால்பாறை சாலையில் உலா வந்த புலி- சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்து பரப்பினர்
நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டப்பேரவையில் பேசியதோடு, தமிழ்நாடு முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை மனுவும் அளித்தேன். அதன் அடிப்படையில், நம்பியார் நகர் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாகப்பட்டினம் நம்பியார் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் அவர்களுக்கும், மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை நிறைவேற துணை நின்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நன்றி கூறியுள்ளார்.
மூன்றாவது கதவை உடைக்க முடியாததால் டாஸ்மார்க் கடையில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான மதுபானங்கள் தப்பியது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல நேற்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இதுகுறித்து கீழ்வேளூர் காவல் துறைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் இரண்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததும், மூன்றாவதாக இருந்த மெயின் கதவை உடைக்க முடியாமல் கொள்ளை கும்பல் தப்பி சென்று இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து டாஸ்மாக் மேலாளரிடம் புகாரை பெற்ற கீழ்வேளூர் போலிசார் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெயின் கதவை உடைக்க முடியாமல் திருடர்கள் திரும்பி சென்றதால், டாஸ்மாக் கடையின் கல்லாவில் இருந்த 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பணமும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களும் தப்பித்தது..
கோடியக்கரை சரணாலய பகுதியில் 247 வகையான 2 லட்சத்து 87 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள்
சரணாலயம் அமைந்துள்ளது.
இங்கு ரஷ்யா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும்,
இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும்
ஆண்டு தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு ஏராளமான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இங்கு
உணவுக்காக வந்து தங்கி செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும் கடற்காகம், கடல் ஆலா, செங்கால் நாரை, கூழை கிடா, கொக்கு, உள்ளான் வகைகள் உட்பட 247 வகையான பறவைகள்
வந்துள்ளது.
இதனை கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு கணக்கெடுத்து வந்தனர்.
கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சத்தீஷ் கணக்கெடுப்பு விவரங்களை தெரிவித்தார்.
அதன் படி தற்சமயம் 67 வகையான பறவைகள் என மொத்தம்
2 லட்சத்து 87 ஆயிரம் இருப்பதாக அறிவித்தார். அப்போது
கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் உட்பட
வனத்துறையினர் இருந்தனர்.
திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர்
ஊராட்சியை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்களுக்கு
தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன்
தலைமை வகித்தார்.
திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கலைமணி
முன்னிலை வகித்தார்.
இதில் புதுச்சேரி யாழ் தேனீ பயிற்சி மைய நிர்வாகிகள் விஜயகுமார், உதயகுமார், திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரி கிருஷ்ணமூர்த்தி,
ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், திருக்கண்ணபுரம் தொடக்க
வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிக்குமார்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேதாரயண்யத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் தமிழ்நாடு கிராம
நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம், புதிய
நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு
சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட தலைவர் ரங்கநாதன், செயலாளர் செல்வம்,
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பாலச்சந்திரன்,
செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ஜெயபிரகாஷ்,
வேதாரண்யம் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள்
ரங்கநாதன், ஐயப்பன், உதயகுமார், முன்னாள் அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், மங்களதாஸ், நாகூரான், சுந்தர்ராஜன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும்,
வருவாய் நிர்வாகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு
வருவதால் கால சூழ்நிலைக்கு ஏற்ப கிராம நிர்வாக
அலுவலரின் அடிப்படை கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆக உயர்த்த வேண்டும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப கிராமங்களின் எல்லைகளை
வரையறை செய்து புதிய கிராமங்களை உருவாக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களின் வட்ட தேர்தலை
பிப்ரவரி மாதத்திலும், மாவட்ட தேர்தல் மார்ச் மாதத்திலும்
நடத்தப்படும்.
மே மாதம் வேதாரண்யத்தில் சங்க மாநில மாநாடு நடத்துவது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாகை அருகே அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்களே சாலையை சீரமைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அடுத்துள்ள ஈசனூர் ஊராட்சி
வழியாக கீழையூர் முதல் திருக்குவளை வரை செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையானது கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட நிலையில்,
கிட்டத்தட்ட 200 மீட்டர் நீளமுள்ள சாலை மட்டும் அமைக்கப்படாமல் அதற்கான நிதி இல்லை என கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக
காட்சி அளிப்பதோடு, ஆபத்து ஏற்படுத்தும் பள்ளங்களும்
நிறைந்து இருந்தன.
இதனால் இவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வந்தனர். மேலும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என
இப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து டிராக்டர் மூலமாக 3 டிப்பர்
சிறு செங்கற்கள் கொண்டு சாலையிலுள்ள பள்ளங்களை மூடி
தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு
மேற்கொண்டு தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.
உடன் சீரமைக்கப்படாத பட்சத்தில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.
நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க கூட்டம் நாகையில் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
கீழ்வேளூர் வட்டத் தலைவர் பாலமுரளி துவக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் உதயகுமார் வேலை அறிக்கையும், பொருளாளர் ரவிச்சந்திரன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.
புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநிலத் தலைவர்
அந்துவன்சேரல், அரசு ஊழியர் சங்க நாகை வட்டத் தலைவர்
ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலச் செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
புதிய மாவட்ட நிர்வாகிகளாக கணேசன் (தலைவர்), ரவி
மற்றும் ஐயப்பன் (துணைத் தலைவர்கள்), உதயகுமார் (செயலாளர்),
ரஞ்சித் குமார் மற்றும் முருகேசன் (துணைச் செயலாளர்கள்),
ரவிச்சந்திரன் (பொருளாளர்) மற்றும் ராஜேந்திரன்,
அசோக்குமார் (தணிக்கையாளர்கள்) ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டனர்.
நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு
2 சாலைப் பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்கி
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்,
சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும் என்பது
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்
அன்பழகன் நிறைவுரையாற்றினார்.
நாகை வட்டச் செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
வேதாரண்யத்தில் பக்தர்கள் தை அமாவாசைக்கு புனித நீராட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பழமை வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.
அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி கதவை திறந்ததாக வரலாறு.
இந்த திருத்தலத்தில் ஆடி, தை, மகாலய, மகோதய, அர்த்தோதய அமாவாசை போன்ற புண்ணியக் காலங்களில் ஏராளமான பக்தா¢கள் இங்கு வந்து கோடியக்கரை ஆதிசேது சித்தர் கட்டத்தில் புனித நீராடி பின்னர் வேதாரண்யம் சன்னதி கடலுக்கு வந்து புனித நீராடி மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு தை அமாவாசை நாளை 31.1.22 வருகிறது. அதனை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் வருவாய்த்துறை, நகராட்சி, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா கட்டுபாட்டை அனுசரித்து பக்தர்கள் சென்று வர விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புனித நீராட வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து நடக்க வேண்டுமென அனைத்துத் துறை அதிகாரிகளும் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.






