என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாலையில் நடந்து வனப்பகுதிக்குள் தாவி செல்லும் புலி.
வால்பாறை சாலையில் உலா வந்த புலி- சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்து பரப்பினர்
புலி அடர்ந்த பகுதியில் மட்டுமே காணப்படும். சில சமயங்களில் இடபெயர்ச்சிக்காக சாலையை கடந்து செல்லும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கூறினர்.
ஆனைமலை:
கோவை மாவட்டமான வால்பாறை, ஆனைமலை பொள்ளாச்சி பகுதி சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான வெளிமாநில மற்றும் மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த பகுதிக்கு செல்லும் சாலை வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் ஏராளமான குரங்குகள், மான்கள், காட்டு எருமை, யானைகளை பார்க்க முடியும். இதனால் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இதற்காகவே சில சுற்றுலா பயணிகள் அடிக்கடி இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வால்பாறை கவர்கன் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அப்போது அவர்களது வாகனத்திற்கு முன்பு புலி ஒன்று நடந்து செல்வதை கண்டு வியந்தனர்.
அந்த புலி மெதுவாக சாலையில் நடந்து சென்று வனப்பகுதிக்குள் தாவி சென்றது. இதனை அந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, புலி அடர்ந்த பகுதியில் மட்டுமே காணப்படும். சில சமயங்களில் இடபெயர்ச்சிக்காக சாலையை கடந்து செல்லும். அதனை இடையூறு செய்யாமல் இருந்தால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது.
வனப்பகுதியில் இருந்து சாலையை கடக்கும்போது வாகனங்களின் சத்தத்தை கேட்டு புலிகள் காட்டுக்குள் ஓடி விடும். மேலும் புலிகளுக்கு 300 மீட்டர் தூரம் வரை மனிதர்களின் வாடையை உணரும். இதனால் புலிகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராது என்றனர்.

Next Story