என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி
கீழ்வேளூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் இரண்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
மூன்றாவதாக இருந்த மெயின் கதவை உடைக்க முடியாமல் அப்படியே போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பியதும் தெரிய வந்தது.
இதனால் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் பணம் மற்றும் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பியது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






