என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    தகட்டூர் மாப்பிள்ளைவீரன் கோவிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் வினோத திருவிழா நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தில் உள்ள மாப்பிள்ளைவீரன்  கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.
    கோவிலின் முக்கிய திருவிழாவான வாழைப்பழத்தை பக்தர்கள் மீது வீசும் வினோத திருவிழாவை பொட்டி தகட்டூர் பைரவநாத சுவாமி கோவிலில் இருந்து கப்பரை எடுத்து  சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வந்து மாப்பிள்ளை வீரன் கோவிலை  வந்துசேர்ந்தது.

    பின்பு பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழத்தை பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திட்டச்சேரி அருகே மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அம்மன் வீதியுலாவை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

    பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகூர் வெட்டாற்று பாலம் அடைக்கப்பட்டு நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகூர் வெட்டாறு பாலத்தின் மேல் தளம் உயர்த்துதல், பாலத்தில் அமைந்துள்ள விரிவாக்கம் இணைப்பு ஆகியவற்றை முழுமையாக மாற்றி அமைத்தல், தாழ்ந்துள்ள தூண்களை சுற்றி மணல் பரப்பை உறுத்தி படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தடுப்புகள் கொண்டு நாகூர் வெட்டாற்று பாலம் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி களால் அடைக்கப் பட்டது.

    பணிகள் தொடங்கப் பட்ட காரணத்தால் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து வாகனங்களும் வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து இடது பக்கம் திரும்பும் நாகூர் நகர சாலை வழியாகவும், புத்தூர் வழியாக வேளாங்கண்ணி, திருவாரூர் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருவாரூர், வேளாங்கண்ணியில் இருந்து புத்தூர் வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
    நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்ரமணி மகள் சுபாஷினி. பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தியதால் சுபாஷினி கடந்த 30ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

    அதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் தாளாளர் ஆனந்த், முதல்வர் லட்சுமி காந்தன், வகுப்பாசிரியர் ஜென்சி ஆகியோர் மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் கடந்த ஒரு வார காலமாக சடலத்தை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    இந்நிலையில் நேற்று நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் பொறுப்பு சுரேஷ் கார்த்தி தலைமையில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் தாய்&தந்தை, கல்லூரி மாணவிகள் என 9 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

    நீதிமன்ற விசாரணைக்கு பிறகு நாகை மாலி எம்.எல்.ஏ தலைமையில் மாணவியின் உறவினர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சடலத்தை பெற்றுக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.

    அதனை தொடர்ந்து நாகை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்த மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். காவல் உயரதிகாரிகள் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, மாணவியின் சடலத்தை நாகையில் இருந்து நாகூர் வரை உறவினர்கள் பேரணியாக எடுத்து சென்றனர்.

    கல்லூரி மாணவியின் தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகை மாலி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    நாகையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதால் உறவினர்களின் ஒருவார கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
    நாகை அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற 60 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் சரக்கு வாகனமான லாரி, டாடா மேஜிக் போன்ற வாகனங்களில் பயணிகளை ஏற்றி செல்வதாக கலெக்ட ருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த மாத சாலை பாதுகாப்பு கூட்டத்தில் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வதை சோதனை இடுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சோதனையில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 60 வாகனங்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதிச்சான்று, பர்மிட் புதுப்பிக்கப்படாமலும் மற்றும் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக் கப்பட்ட காரணத்திற்காக நாகை, வேதாரண்யம் போன்ற பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பிரபு, நல்லதம்பி ஆகியோர் சோதனை செய்து 60 வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

    அதில் பாண்டிச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களும், 10 கல்வி நிலைய பஸ்களும், 25 டாட்டா வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி வாகனங்களின் மூலம் அரசுக்கு ரூ.5 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  எனவே தொடர்ந்து வாகன சோதனை செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.
    நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் சாலை தர ஆய்வு  அதிகாரி சிவாஜிராஜா என்கிற சிவாஜி அங்குள்ள கோவிலின் பின்புறம் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமி யின் பெற்றோர் வேதாரண் யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தனர். அதன்பேரில் போலீ சார் நாகை நெடுஞ்சாலை துறை அதிகாரி சிவாஜிராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இது வரை அவரை கைது செய்ய வில்லை.

    இதனிடையே சிவாஜி ராஜாவுக்கு நெருங்கிய உறவி னர்கள் வழக்கை வாபஸ் வாங்க கூறி சிறுமியின் குடும் பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள் ளனர்.  இதனால் பயந்துபோன அவர்கள் நாகை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித் தனர்.

    அதில் வழக்கை வாபஸ் பெறக்கோரி எங்க ளுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது.  இதனால் நாங்கள் சொந்த கிராமத்திற்கு கூட செல்ல முடியவில்லை.உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
    வேதாரண்யத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    நகரத்தலைவர் வைரம், மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் மகிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்திகோஷம் எழுப்பினர்.

    இதில் மாவட்டத் தலைவர் சத்தியகலா, நகராட்சி கவுன்சிலர் தங்கதுறை, ஐ.என்.டி.யூ.சி சங்கத்தைச் சேர்ந்த தங்கமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ரபிக் சோட்டாபாய் அப்சல் உசேன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெல்லி குமார், அர்ஜீனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகை அருகே லோடு வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பெண்கள் படுகாயமடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளை சேர்ந்த பெண்கள் கும்பகோணத்திற்கு லோடு வாகனத்தில் சென்று வீடு வீடாக மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வழக்கம்போல மீன்களை விற்ற மீனவ பெண்கள் லோடு வாகனத்தில் நாகைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது நாகை மாவட்டம் ஒக்கூர் பவர் பிளாண்ட் அருகே திடீரென லோடு வாகனம் விபத்துக் குள்ளாகி கவிழ்ந்தது. லோடு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் பயணித்த 8 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
    திட்டச்சேரி பகுதிகளில் அதிகளவில் விற்பனையாகும் புகையிலை, குட்கா பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை பகுதிகளிலும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் புகையிலை குட்கா பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.

    இதனால் இளம் வயதில் கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உரிமையாளர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திட்டச்சேரி, நடுக்கடை பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் சர்வ சாதாரணமாக புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையாகி வருகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் படுத்தி வருவதால் இதுபோன்ற குற்றச்செயல்களில் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு நாகை மாவட்ட எஸ்.பி. ஜவஹர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
    திருமருகல் அருகே அரசலாற்றில் மிதந்த மூதாட்டி பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பரமநல்லூர், அகலங்கன்
    பாலம் இடையே அரசலாற்று படுகையில் புதுச்சேரி மாநிலம் எல்லை
    அருகில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க நீலம் சிவப்பு நிறம் கலந்த புடவை மற்றும் ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருந்த மூதாட்டி
    பிணம் கிடப்பதாக திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சென்று திருமருகல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் பிணத்தை கைப்பற்றி
    நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து
    இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா? என பல
    கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்வேளூரில் உள்ள அஞ்சு வட்டத்து அம்மன் கோவிலில் வீதியுலா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 29-ம்தேதி காப்பு கட்டுதலுடன்
     துவங்கி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான யானை வாகனத்தில் அஞ்சுவட்டத்தம்மன்
    சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி
    தேசமங்கைகரசி சொற்பொழிவு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த சென்னை ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவர் தனது நண்பர்களுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக, சென்னை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே வேளாங்கண்ணி தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு அங்கு பதுங்கி இருந்த விக்னேஷ், அவரது நண்பர்களான சென்னை செனாய் நகரை சேர்ந்த தேவசகாயம் (36), திருவேற்காடு பால்வீதி தெருவை சேர்ந்த எழிலரசன் (24), திருவண்ணாமலை மாவட்டம் கீழபென்னாத்தூர் பகுதியை சேர்ந்த தினகரன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

    விக்னேஷ் மீது சென்னை சூளைமேடு போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு இருப்பதும், இவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதும், தேவசகாயம் மீது சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், அவரது பெயரும் ரவுடி பட்டியலில் உள்ளதும் தெரியவந்தது.

    இவர்கள் எதற்காக வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×