என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் புதுமண்ணியாறு உள்ளது. ஓதவந்தான்குடி, செருகுடி,வட்டாரம்,மாதானம்,பழையபாளையம்,தாண்டவன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை பல்வேறு கிராமங்களுக்கு பாசனவசதி தரும் பிரதான பாசன ஆறாக உள்ளது.

    இதனிடையே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் புதுமண்ணியாற்றில் கரைகள் வழிந்து தண்ணீர் செல்கிறது.

    இதனால் புதுமண்ணியாற்றில் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஓதவந்தான்குடி கிராமத்தில் குடியிருப்புகள தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனஓட்டிகளும் அவதியடைந்தனர்.

    இதனிடையே உடைப்பு ஏற்பட்ட கரைகளை பொதுமக்களே மணல்மூட்டைகள் கொண்டு அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து தண்ணீர் புகுவதை தடுத்தனர்.

    இந்த புதுமண்ணியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது இவ்வாறு கரைகள் உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் வரும் காலத்தில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க கான்கிரிட் தடுப்பு சுவர் அமைத்து கரைகளை பலப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானிய திட்டங்கள் இடுபொருள் முன்பதிவு பயிர் காப்பீடு விவரம்.
    • 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு உழவர் செயலி குறித்த ஒரு நாள் பயிற்சி மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் உதவி தொழில் நுட்ப மேலாளர் மதுமனா வரவேற்றார். வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் விவசாயிக்கு எளிதில் கிடைப்பதற்கும் தங்கள் திட்டத்தின் பயனாளியாக பதிவு செய்து கொள்வதற்கும் பல்வேறு வேளாண்மை உழவர் நலத்துறை சார்ந்த தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ளும் விதமாக இந்த உழவர் செயல் உருவாக்கப்பட்டது.

    இதனை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

    தொடர்ந்து உழவர் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள மானிய திட்டங்கள் இடுபொருள் முன்பதிவு பயிர் காப்பீடு விவரம் உரங்கள்.

    விதைகளை இருப்பு நிலை மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் வாடகை சந்தை நிலவரம் வானிலை அறிவுரைகள் பண்ணை வழிகாட்டி போன்றவை மற்றும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இயற்கை பண்ணை பொருட்கள் மற்றும் பொருட்கள் வேளாண்மை செய்திகள் கருத்துக்கள் பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம் உழவர் ஈ சந்தை, பட்டு வளர்ச்சி பற்றிய விவரம் வேளாண்மை நிதிநிலை அறிக்கை அத்துடன் கலைஞரின் வேளாண்மை திட்டத்துடன் 21 தலைப்புகளில் இந்த செயலி செயல்படுகிறது என்று விவரமாகவும் உழவர் செயலி பயன்படுத்துதல் பற்றியும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் பாரி, குணசேகரன், மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை உதவி வேளாண்மை அலுவலர் சுகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

    அட்மா திட்ட உதவி தொழிற்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினார்.

    • பல கிராமங்களில் மின்சார வசதிகள் இல்லை.
    • மாற்று வழியாக பவர் என்ஜின் பொருத்தப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 -11 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் இயல்புநிலை முடங்கியது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் வயல்வெளிகள் நீரில் மூழ்கின.

    இரண்டு லட்சத்து 35 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 10- தேதி முதல் தற்போது வரை பல கிராமங்கள் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றன.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டடம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அடுத்து மடப்புரம் ஊராட்சியில் 5 நாட்களாக மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் இருளில் முழ்கியது.

    அப்பகுதி கிராம பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாத நிலையில் ஊராட்சி மற்றும் அரசையை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் மயிலாடுதுறை தரங்கம்பாடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டம் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உயர் மின்னழுத்தம் கம்பிகள் சாய்ந்து கிடப்பதால் இதனை சரிசெய்து தர ஒருவார காலம் ஆகலாம். மாற்று வழியாக பவர் இன்ஜின் பொருத்தப்படும்.

    மேலும் குடி நீர் வாகனங்களில் கொண்டுவந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மழை பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.
    • மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை:

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், மழை பாதிப்பு காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
    • மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் குடும்ப அட்டைக்கு ரூ. 1,000 நிவாரணம் வழங்கப்படுகிறது.

    சீர்காழி:

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இதற்கிடையே, கடலூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார்.

    அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்த பின் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

    • நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து முதல்-அமைச்சரிடம் கொடுத்து முறையிட்டனர்.
    • நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து முதல்-அமைச்சரிடம் கொடுத்து முறையிட்டனர்.

    மயிலாடுதுறை :

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி முதல் கனமழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கனமழை நீடித்தது. சிதம்பரத்தில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 8-ந்தேதி முதல் 28 மணி நேரத்தில் 33.25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதன் பின்னர் மறுநாள் ஓரளவு மழை குறைந்தது.

    10-ந்தேதி மீண்டும் அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. அப்போது விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் கடலூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் அனைத்தும் வெள்ளக்காடானது. கடலூர் நகர் பகுதியான பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், குண்டுஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.

    கடலூர் சிப்காட் செல்லும் சாலை முழுவதும் தண்ணீர் உள்ளதால் தற்போதும் அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    சிதம்பரம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டது. குறிப்பாக மாவட்டம் முழுவதும் 23,118 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. 242 வீடுகள் மழைக்கு இடிந்தது.

    மேலும் கனமழைக்கு 30 பசுமாடுகளும், 37 ஆடுகள் உள்ளிட்ட 108 கால்நடைகளும் பலியானது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தண்ணீரால் சூழப்பட்ட நெற்பயிர்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    எனவே நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    குறிப்பாக சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு அதி கனமழை கொட்டியது. 122 ஆண்டு கால வரலாற்றில் பெய்த கனமழையால் சீர்காழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஏராளமான வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல தெருக்களில் மழைநீர் 4 அடி உயரத்துக்கு செல்கிறது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்க சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 87 ஆயிரம் ஏக்கரில் சம்பா இளம்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டார். புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை அவர் புதுச்சேரியில் இருந்து கார் மூலம் கடலூர் புறப்பட்டார். கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் வெள்ளத்தால் சேதமான விளை நிலங்களை நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அந்த பகுதியில் குடிசை வீடு சேதம் அடைந்ததை கணக்கீட்டு 10 பேருக்கு தலா ரூ.4,100 வீதம் வழங்கினார். மேலும் முழுமையாக குடிசை வீடு இடிந்த 2 பேருக்கு தலா ரூ.5,200 வீதம் நிவாரணம் வழங்கினார். இது தவிர அரிசி, வேஷ்டி, புடவைகளும் வழங்கினார்.

    அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த மாவட்ட அளவிலான வெள்ளப்பாதிப்பு தடுப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகை பகுதிக்கு சென்றார். அங்கு தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    வல்லம் படுகையில் சேதம் அடைந்த 2 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 3 பேருக்கு வழங்கினார். குடிசை வீடுகளை இழந்த 2 பேருக்கு தலா ரூ.4,100 வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளபாதிப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் சீர்காழிக்கு கார் மூலம் புறப்பட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பச்சை பெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறி னார்.

    அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர்களுக்கு பிஸ்கட், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

    அங்கிருந்து புறப்பட்டு அருகே உள்ள உமையாள்பதி கிராமத்துக்கு சென்றார். அங்கு வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து முதல்-அமைச்சரிடம் கொடுத்து முறையிட்டனர். நெற்பயிர்களை வாங்கி கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதனை தொடர்ந்து சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு சென்று, அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி , காய்கறி உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை வழங்கினார். மொத்தம் 2500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

    • மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
    • கணக்கீடு செய்து முடித்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிப்படைந்த இடங்களை ஆய்வு செய்தவற்காக 3 அமைச்சர்களை நேற்று முன்தினமே அனுப்பி வைத்தேன். அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் சிறப்பான பணி மேற்கொண்டனர். அதோடு நின்று விடாமல் நானும் நேரில் ஆய்வு நடத்துவதற்காக இன்று வந்து ஆய்வு செய்தேன்.

    பொதுமக்கள் திருப்தியாக தான் உள்ளனர். இன்னும் சில குறைகள் மக்களிடம் இருக்கிறது. அதையும் முழுவதுமாக தீர்த்து வைத்து விடுவோம்.

    மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் கணக்கீடு செய்து முடித்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

    எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்வார்கள். அவர்களின் வீண் விமர்சனங்கள் குறித்து கவலையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல்.
    • போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரிடம், 1 கிலோ 100 கிராம் அளவில் இருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு சிவன்கோவில் தெருவை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 58) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார் வைத்தியநாதனை கைது செய்தனர்.

    • தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்துள்ளது. தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெறுவதால் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
    • மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக மழை பெய்துள்ளது. தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன. மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
    • ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம், பட்டமங்கலம் ஊராட்சி, சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் மழைநீர் சூழ்ந்து கொண்டது.

    இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இதையடுத்து தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி பொக்லைன் கொண்டு தண்ணீரை பள்ளவன் ஆற்றில் இணைப்பு எற்படுத்தி அடைப்புகளை சரிசெய்து மழை நீரை வடிகட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கிராம அலுவலர் நெப்போலியன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மழை நீரை வடிகட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் இதுவரை 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி வருகிறது.

    திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ளது.

    குறிப்பாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    இந்த அதீத கனமழையால் சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. இது தவிர வைத்தீஸ்வரன்கோவில் உள்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    மேலும் சீர்காழி அருகே சூரைக்காடு உப்பனாற்றில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் கரையோரத்தில் உள்ள 350 வீடுகள் வெள்ளத்தில் பெருமளவு மூழ்கியது. இதனால் அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் உடமைகளை கூட எடுக்காமல் வெளியேறினர்.

    இப்படி பல வீடுகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது. மொத்தம் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் வரலாறு காணாத வகையில் பெய்த அதி கனமழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    குடியிருப்புகள் மட்டுமின்றி கோவில்களிலும் மழைநீர் புகுந்துள்ளது. சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் புகுந்துள்ளது.

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பழையார் கடற்கரை சாலையில் தொடுவாய் என்ற இடத்தில் பாலம் உள்வாங்கியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. அப்போது பால் ஏற்றி சென்ற வேன் பாலத்தின் நடுவே பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இப்படி புரட்டி போட்ட கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

    பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் இதுவரை 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    சீர்காழி பகுதிகளில் மீண்டும் இரவில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் இருந்து மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

    இதனால் தேங்கிய வெள்ளநீர் வடியாத சூழல் நிலவுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. கூடுதலாக வீடுகள் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து குறைந்தது 1 வாரத்திற்காவது மழை நின்றால் தான் வெள்ளநீர் வடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அதற்கான வழி இல்லாமல் மழை பெய்து வருவதால் பொது மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்து தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா இளம் பயிர்கள் நீரில் முழுமையாக மூழ்கி உள்ளன.

    வயல்வெளிகளில் சுமார் 6 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பயிர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் மழை நின்று தண்ணீரை வெளியேற்றினால் தான் முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் தொடர்ந்து பெய்யும் கனமழையால் அதற்கான சாத்தியக்கூறு இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதனால் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விசைப்படகுகள் மற்றும் 6 பைபர் படகுகள் ஒன்றோடென்று மோதி கடலில் மூழ்கியது.

    இது தவிர சீர்காழி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளது. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் சீர்காழி, திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 70 கிராமங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதில் சீர்காழி நகரில் மட்டும் நேற்று இரவு மின் வினியோகம் வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.

    இடைவிடாது பெய்து வரும் அதி கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது மட்டுமின்றி வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பயிர்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

    பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர் அதிகாரிகளை அனுப்பி விரைந்து இந்த பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாகவும் ஒரே நாளில் 18 சென்டிமீட்டர் மழை பெய்ததாலும் ஆக்கூர் உடையார்கோவில், புத்தூர்ரோடு, சின்ன தெரு, பெரிய தெரு ஆகிய வீதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் வடிய வழியின்றி விளைநிலங்களில் புகுந்து சாலைகளை கடந்து காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் நிலைகளில் தேங்கியுள்ள ஆகாயதாமரை செடிகளால் தண்ணீர் செல்ல வழியின்றி சாலைகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இதில், பத்துக்கும் மேற்பட்ட கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.

    ×