என் மலர்
மயிலாடுதுறை
வடரங்கம் கூட்டு குடிநீர் திட்டம் ஆழ்குழாய் கிணறு பழுது சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் மின் மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுத்து கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு குடிநீருக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் நேற்று குடிநீர் வெளியே வரும் ஆழ்துளை குழாயில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் வெளியே வருவது நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், தனலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் நேற்று வடரங்கம் கிராமத்திலுள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் வெளியேற்றும் நிலையத்துக்குச் சென்று பழுதான குழாயை ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து குடிநீர் குழாய் பழுது நீக்கும் பணி தீவிரமாக நடைபெற்று குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொது வேலை நிறுத்தத்திற்கு அரசு ஓய்வூதியர் சங்கம் ஆதரவு அளிப்பதாக மயிலாடுதுறையில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் மாநில தலைவர் சீதரன் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பழனிவேலு வரவேற்று பேசினார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார்.
அப்போது மாநில தலைவர் ஸ்ரீதரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள 48 மணி நேர பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைப்பெறும் போராட்டங்களில் ஓய்வூதியர் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்வார்கள்.
70 வயது நிறைவுப்பெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 19-ல் வட்ட தலைநகரங்களிலும், மே-17 ல் மாவட்ட மையங்களிலும் தர்ணா போராட்டம், ஜூன்-21 ல் மாநில அளவில் பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மாநில செயற்குழு கூட்டத்தின் நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் இளமாறன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம், மணக்குடி ஊராட்சியில், ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சிமெண்ட் ரோடு, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மினி டேங்க் (தண்ணீர்) ரூ.5 லட்சத்து15 ஆயிரம் செலவில் சமுதாய கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
அதேபோல் வள்ளாலகரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் செலவில் ஊராட்சி அலுவலகம், ரூ.5 லட்சத்து 37 ஆயிரம் செலவில் ராமலிங்கம் நகர் தார் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
மயிலாடுதுறை ஒன்றியம் முழுவதுமாக ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் 200&க்கும் மேற்பட்ட வீடுகள் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது.
ஆகக் கூடுதலாக ரூ.3 கோடியே 6 லட்சத்து 24 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று அதில் தரமான முறையில் கட்டப்பட்டு வருகிறதா, முறைகேடுகள் ஏதாவது நடைபெற்று உள்ளதா, என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு தரமாக வழங்கப்பட்டு வருகிறதா, உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியின்போது மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி (ஊராட்சி) அலுவலர் மீனா, பொறியாளர்கள் மகேஸ்வரி, இளமுருகன், பூங்குழலி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், வள்ளாலகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட், மணக்குடி ஊராட்சித் தலைவர் வீரமணி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.
மயிலாடுதுறை, குத்தாலத்தில் இன்றும், நாளையும் மாற்றுதிறனாளிகள் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெறும் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஒன்றியங்களில் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான 3 சக்கரவண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்று வண்டி, கை, கால் செயற்கை உறுப்புகள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு கீழ்க் குறிப்பிடப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் மருத்துவ மதிப்பீட்டு முகாம்களில் பங்கேற்கலாம்.
இன்று (வியாழக்கிழமை) மயிலாடுதுறை டி.இ.எல்.சி. உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும், 26-ந்தேதி (சனிக்கிழமை) குத்தாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
எனவே மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய வட்டார வள மையங்களில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறன் அடையாளஅட்டை மற்றும் உதவி உபகரணங்கள் பெற பிறப்புச் சான்றிதழ் நகல்,
ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 எண்ணிக்கை, வருமானச்சான்று நகல், குடும்பஅட்டை நகல், தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தில், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுக்கா, மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தேவி சுரேஷ்குமார் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் ராஜகோபால் வரவேற்றார்.
மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மாவட்டத்திலேயே இந்த ஊராட்சிதான் முதலிடத்தில் உள்ளது. வீடுகளுக்கும், தெரு பம்பினிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அதேசமயம் குடிநீரின் அவசியம், அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வும் ஊராட்சி சார்பில் வழங்கப் பட்டுள்ளதை பாராட்டி இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் லலிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சுகாதாரமான குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஊராட்சியின் நீர் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பொது மக்களுக்கு நிலத்தடி நீர் அறிந்தும் அறியாததும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
அதில் ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நில நீர் தரப்பரிசோதனை பெட்டியின் மூலம் சுகாதாரமான குடிநீர், குடிநீரின் தன்மை, மணம், கலங்கல், பி.எச், காரத்தன்மை, குளோரைடு, இரும்பு, உப்பு உள்ளிட்ட 16 வகையாண பரிசோதனைகள் எவ்வாறு செய்வது என்பதை செய்து காண்பித்தனர்.
திட்ட இயக்குனர் முருகண்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, குடிநீர் வழங்கள் நிர்வாக பொறியாளர் ராஜு, உதவி நிர்வாக பொறியாளர்கள் ஜெயக்குமார், விஜயராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மைவிழி, ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி, வீரமணி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் புகழ் பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகவும், சமயக்குரவர்களால் பாடல் பெற்றதும், அபிராமிப் பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமி ஆக்கி அபிராமி அம்பாள் திருவிளையாடல் புரிந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 27ம் தேதி காலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாகசாலை ஏற்பாடுகள் குறித்து தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பார்வையிட்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீன மடாதிபதி கூறுகையில் 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது என்றும், சுவாமி அம்பாள் காலசம்ஹாரமூர்த்தி ஆகியோருக்கு, நவாக்கினி ஹோமமும், முருகன் விநாயகர் உள்ளிட்டோருக்கு பஞ்சாக்னி ஹோமம், மற்ற பரிவார தெய்வங்களுக்கு ஏகாக்கினி ஹோமமும், நடைபெறும்,
120 வேத விற்பன்னர்கள் யாகம் நடத்துவார்கள் என்றும், இருபத்தி ஏழு திருமுறை ஓதுவார்கள் தேவாரம், திருப்பதிகம் பாடுவார்கள் என்றும், ஒரு லட்சம் மிருத்யுஞ்சய ஜபம் செய்யப்படும் என்றும், 100 பேர் அபிராமி அந்தாதி பாடுவார்கள் என்றும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தருமபுர ஆதீன மடாதிபதி அப்போது தெரிவித்தார்.

மயிலாடுதுறையில் ஊரக வளர்ச்சி துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியனின் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,
வளர்ச்சித்துறையின்மீது பிற துறைகளின் பணிகளைத் திணிப்பதை நிறுத்துவதோடு, திட்டப்பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதில் மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார் கோவில், சீர்காழி, கொள்ளிடம், உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொன்டனர்.

குத்தாலம் அரசு கல்லூரியில் கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
குத்தாலம்:
குத்தாலம் அரசு கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி 2020-21-ம் முதல் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 325 மாணவர்கள் படிக்கும் இக்கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு வகுப்புகள் தற்போது நடைபெறுகிறது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் திருவாலங்காடு கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர் மாணவர்களுக்கு இடநெருக்கடி இன்றி அமருவதற்கு விரைவில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத்தரப்படும். குறிப்பாக கழிப்பிட வசதி மற்றும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி சென்றுவர பேருந்து வசதி, குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது ராமலிங்கம் எம்.பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அடுத்த ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கப்பட
உள்ள நிலையில், இக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தரவும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் திருவாலங்காடு கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் லலிதா கல்லூரியின் அடிப்படை
வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் மாணவர்களுக்கு இடநெருக்கடி இன்றி அமருவதற்கு விரைவில் கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத்தரப்படும். குறிப்பாக கழிப்பிட வசதி மற்றும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி சென்றுவர பேருந்து வசதி, குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது ராமலிங்கம் எம்.பி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகண்ணன், கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
சீர்காழி அருகே வன்புருஷோத்தம பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில்
ஒன்றான வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது.
முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு
அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து உற்சவ கொடியேற்றப்பட்டது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன்,
கண்ணன் ,கிருஷ்ணமாச்சாரியார், ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய நிகழ்வாக27-ஆம் தேதி வெண்ணைத்தாழி உற்சவம்,
28-ம் தேதி தேரோட்டமும், 30-ம் தேதி திருக்கல்யாண
உற்சவம் நடைபெற உள்ளது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள 7 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ள
அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகம் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 19-ம் தேதி விக்னேஸ்வர
பூஜையுடன் தொடங்கபெற்று வருகிறது. விழாவின் முக்கிய
நிகழ்ச்சிகளில் ஒன்றான உப கோயில்கள் கும்பாபிஷேகம்
நேற்று நடைபெற்றது.
திருக்கடையூர் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில்
அமைந்துள்ள சக்தி விநாயகர், கற்பக விநாயகர், வெள்ளை
வாரண விநாயகர், அமிர்த ரட்ச விநாயகர், சித்தி விநாயகர்,
திருக்கடையூர் எல்லை தெய்வமான பிடாரி அம்மன் கோவில்
மற்றும் எதிர்காலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில்
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
யாகசாலை அமைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர்
ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் கலசங்களுக்கு ஊற்றி
கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர்
ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தி.மு.க பொதுக்குழு
உறுப்பினர் அமிர்தவிஜயகுமார், ஒன்றியக்குழு துணைத் தலைவர்
மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ்
மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் அருகே ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின்
சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம்
செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர்
யோகேஷ்குமார்மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் முன்னிலையில்
கடலில் ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட
சுமார் 32,000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. குஞ்சுகளும் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது. இந்நிலையில்
நேற்று 4000-க்கும் மேற்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமைக்
குஞ்சுகளை கடலில் விட்டனர்.
கடலில் விட்ட நாளிலிருந்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஞ்சி பொறிக்கப்பட்ட இடத்திற்கே இனப்பெருக்கத்திற்காக ஆமைகள்
வரும் என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா
தெரிவித்தார்.
உடன் சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மீனவர்கள்
கலந்து கொண்டனர்.
வெள்ளப்பள்ளம் ஊராட்சி பள்ளியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் தலைமையாசிரியர் ஹேமலதா தலைமையில் ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த் மற்றும் ஆசிரியர் வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு பற்றி ஆசிரியர் இளங்கோ, ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த், தலைமை ஆசிரியர் ஹேமலதா, ஆசிரியர் வேலுமணி பேசினர்.பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.