என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    செம்பனார்கோயிலில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் லலிதா பேசியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் மே தினம் தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு. ஊராட்சி தலைவர் க.தி. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி இணை இயக்குனர் முருகண்ணன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்சி அலுவலர் விஜயலெட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் லலிதா, பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதாமுருகன் கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். அப்போது கலெக்டர் லலிதா பேசும்போது,

    கிராமசபை கூட்டங்களில் பெண்கள் அதிக அளவில் வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமசபை என்பது தங்கள் கிராமத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து தீர்வு காண்பதற்காக நடத்தப்படுகிறது. 

    அடுத்தடுத்த கிராம சபை கூட்டங்களில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் நமது கிராமத்தில் அரசின் சார்பில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது. அரசின் திட்டங்களை அறிந்து அவற்றை பயன்படுத்தி பெண்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ள வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் கார்த்திக் சந்திரசேகர், வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) குமரன், ஒன்றிய கவுன்சிலர் நாகரெத்தினம், உள்ளிட்ட அணைத் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானர்கள் கலந்துக்கொன்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்த்தி நன்றி கூறினார்.

    செம்பனார்கோயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சவுந்தரபாண்டியன், மாநில பொதுச்செயலாளர் பாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வளர்ச்சித் துறை சந்திக்கும் சவால்கள் குறித்து முன்னாள் மாநில பொருளாளர் நாகராஜன் கருத்துரையாற்றினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பின்னர் மாநில பொதுச்செயலாளர் பாரி அளித்த பேட்டியில்,

    ஊரக வளர்ச்சித் துறையில் பயன்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் ஜெயஜெய திட்டங்களுக்கு தமிழக அரசு உடனடியாக போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

    ஏற்கனவே ஏராளமான காலிப்பணியிடங்களால் வளர்ச்சித் துறை ஊழியர்களின் பணிச்சுமை கடுமையாக உள்ளதால் தமிழக அரசு உடனடியாக இந்தத் திட்டங்களுக்கு போதுமான ஊழியர் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். 

    பிரதம மந்திரி வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் பழங்குடியினர் மக்களுக்கான வீடுகளுக்கும் மதிப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

    மயிலாடுதுறை ஒன்றியத்தில் ஒரே குறுகிய இடத்தில் இரண்டு நபர்களுக்கு வருவாய் துறையினர் இரண்டு பட்டாக்கள் வழங்கி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் வீடு கட்டி கொடுப்பதில் தொய்வு அடைந்துள்ளது. ஒருவருக்கு ஒரு வீடு தான் வழங்கவேண்டும்.

     எனவே இந்த வீடுகள் கட்டும் திட்டத்திற்கான மதிப்பீட்டினை உயர்த்திதர வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் மானியத்தை உடனடியாக மாநில நிதிக்குழு விடுவிக்க வேண்டும் என்றார்.

    இதையடுத்து கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்ரமணியன் பணிநீக்கம் செய்யப்பட்டதை உடனடியாக ரத்து செய்து அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த வேப்பமரம் திடீரென வேரோடு சாய்ந்தது.
    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த டீக்கடையில் முன்பு இருந்த வேப்பமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் டீக்கடை பக்கவாட்டு சுவர் மற்றும் தரை தளம் சேதம் ஏற்பட்டது.

    டீக்கடை உரிமையாளர், டீக்குடித்துக் கொண்டிருந்தவர்கள் துரிதமாக அவ்விடத்திலிருந்து தப்பியோடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பழைய பேருந்து நிலையம் நான்கு சாலை சந்திப்பில் போக்குவரத்து பாதித்தது. 

    சாலையின் குறுக்கே மரம் விழுந்த போது சாலையில் காலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த வேப்ப மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இச் சம்பவத்தால பரபரப்பு ஏற்பட்டது.
    கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தருமபுர ஆதீனம் குருலிங்க சங்கம பாதயாத்திரைைய துவங்கினார்.
    கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தருமபுர ஆதீனம் குருலிங்க சங்கம பாதயாத்திரைைய துவங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானதும், சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்ற தலமான அரும்பன்னவன முலை அம்பாள் சமேத உத்தவே தீஸ்வரர் கோவில் அமை ந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது. 

    அதன் பின்னர் தற்போது அன்பர்கள் உதவியுடன் திருப்பணிகள் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. 62 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது

    . இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குரு லிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்ஆதீனத்தில் உள்ள சொக்கநாதப்பெ ருமான் ஆலயத்தில்பூஜி க்கப்பட்டு வந்த ஆத்மலி ங்கத்தை தருமபுரம் ஆதின மடாதிபதி தலையில் சுமந்து பாதாயாத்திரையை துவங்கினார். 

    மங்கல சின்னங்கள் முன்னே செல்ல பாதயாத்திரை நடைபெற்றது.குரு லிங்க சங்கம பாதயாத்திரை சென்ற ஆதீனத்தை வரவே ற்று வீடுகள் தோறும் பொதுமக்கள் கோலமிட்டு பூரண கும்ப மரியாதை அளித்து தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை தர்காஸ் ஜமாத் சார்பில் திரளான இஸ்லாமியர்கள், மாயூரம் தமிழ்ச்சங்கம் சார்பில் ஜெனிபர் பவுல்ராஜ் ஆகி யோர் மடாதிபதிக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு உபசரிப்பு
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநா தசுவாமி கோவில் உள்ளது. 

    இக்கோவிலில் சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு மேற்கொண்டு சென்றனர். 

    நான்கு வீதிகள், பிரதான சாலைகளில் அதிக அளவு நெகிழிப் பைகள் உள்ளிட்ட அதிக குப்பைகள் குவிந்திருந்தது. 

    மலைபோல் குவிந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் ஒரே நாளில் சுத்தம் செய்து நான்கு வீதிகளிலும் பிளிசிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.


    இந்நிலையில் சிறப்பாக தூய்மை பணி மேற்கொண்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், அலுவலர்களை கவுரவிக்கும் வகையில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அவரது கணவர் அலெக்சாண்டர் ஆகியோர் தங்களது இல்லத்திற்கு அழைத்து கறி உணவு சமைத்து விருந்து வைத்தனர்.

    தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

    Food treat, வைத்தீஸ்வரன்கோயில்

    சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்றபோது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கியது.
    மயிலாடுதுறை:

    காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக பாண்டிச்சேரிக்கு சுமார் 65 பயணிகளுடன் நேற்று இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    சீர்காழி அருகே காரைமேடு என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 60  பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்த காரணமாக சீர்காழி- நாகப்பட்டினம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே கவுரி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி, அச்சுதராயபுரத்தில்உள்ள கவுரி மாரியம்மன் கோவிலில் 55 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.

    தொடர்ந்து மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.
     
    இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது. காவிரி கரையில் இருந்து மேளதாளம் வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றதது. 

    காப்பு கட்டி விரதமிருந்து பக்தர்கள் அலகு காவடி, பறவை காவடி எடுத்தும்‌, வாயில் 16 அடிநீள அலகு, 20 அடி நீள அலகு குத்தியும் கோவிலை வந்தடைந்தனர். 

    கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்திகரகம் இறங்க தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். 
    மேலும் 16 அடி நீள அலகு மற்றும் 20 அடி நீளம் கொண்ட அலகினை வாயில் குத்தியபடி பக்தர்கள் தீ மிதித்த காட்சி அங்கிருந்து பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்தது. 

    இதனை தொடர்ந்து இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வர காத்தவீரன்நாடகம் நடைபெற்றது. இந்நி கழ்ச்சி ஏற்பாடுகளை கிரா மவாசிகள் செய்திருந்தனர்.
    எருக்கூர் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக தினவிழா நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள எருக்கூரில் லெட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது.

    பல நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலை இதே ஊரில் பிறந்து வளர்ந்து பல வருடங்கள் சிறைத்த ண்டனை பெற்று வெளியே வந்து வாழ்க்கையின் இறுதிகாலத்தில் பிரம்மச்சா ரியாக வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட வீரர் நீலகண்டபிரம்மச்சாரி தனது குழந்தை பருவத்தி லிருந்து இளமைப்பருவம் வரை வழிபட்ட கோயிலும் இதுவே ஆகும். 

    இக்கோயிலில் முதல் வருட கும்பாபிஷேக தின விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முன்பு சிறப்பு யாகமும், அதனைத்தொடர்ந்து நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கிராம மக்கள் சார்பில் எருக்கூர் சுப்பிரமணிய ஐயர் செய்திருந்தார்.
    சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை அம்மன், நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 

    இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. 

    அதனை தொடர்ந்து எட்டு மணிக்கு வேத மந்திரம் ஓத, சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இவ்விழாவில் தருமை ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
    திட்டை ஊராட்சியில் அமைக்கப்பட்ட சாலையின் தரத்தை கலெக்டர் லலிதா திடீரென ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வளர்ச்சி பணிகள் நடைபெறுவதை திடீர் ஆய்வு செய்தார். 

    அதன்படி திட்டை ஊராட்சி குளங்கரை தெருவில் ஏஎன்எஸ் நகரில் என்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ததோடு சாலையின் தரத்தினை பள்ளம் வெட்டி சோதித்து பார்த்தார். பின்னர் சாலையின் அகலம், உயரம் ஆகியவற்றையும் அளந்து ஆய்வுசெய்தார்.

     தொடர்ந்து கற்பகம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் ஆய்வுசெய்தார்.இந்த ஆய்வின்போது சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலு வலர் அருள்மொழி, பொறி யாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, துணை தலைவர் விஜ யராணி, ஊராட்சி செயலர் அன்பரசன் உடனிருந்தனர்.
    வறுமையில் தவித்த நேபாள குழந்தைகள் 4 பேரை வட்டார வள மைய அதிகாரிகள் அரசு பள்ளியில் சேர்த்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரிசங்கு, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் சேராமல் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றார்களா என்று கொள்ளிடம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கொள்ளிடம் பகுதியிலுள்ள ஒரு கரும்பு சாறு விற்பனை செய்துவரும் கடையில் நேபாளத்தை சாா்ந்த 35 வயதுள்ள ஒரு பெண்ணும் அவருடைய 9 வயது மகனும் வேளை செய்து வந்தனர். மிகவும் வறுமை நிலையில் வசித்து வரும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றங்கரையோரம் ஒரு குடிசையில் வசித்து வருவதை அறிந்து அங்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கல்வியின் அவசியமும் எதிர்கால வாழ்க்கை குறித்தும் அவர்களிடம் எடுத்துக் கூறியபோது, தமிழ்நாட்டுக்கு அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்து 5 ஆண்டு ஆகிறது என்றும் தனக்கு 3 குழந்தைகள் என்றும் மூவரும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடியவில்லை என்றும் கூறினர். மேலும் அங்கு வசித்து வரும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும் பள்ளியில் சேரமால் இருந்தது கண்டறியப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து பள்ளியில் சேராமல் இருந்த இந்த நான்கு குழந்தைகளையும் கொள்ளிடம் துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5ஆம்வகுப்பு, 3ஆம்வகுப்பு, 2 ஆம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ஆகிய வகுப்புகளில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கொண்டு வந்து சேர்த்தனர். இதுவரை பள்ளியில் சேராமல் இருந்து தற்போது 4 குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
    கொள்ளிடம் ஆறு,குவாரியிலிருந்து 30-ந் தேதி முதல் டிராக்டர்-டிப்பர்களுக்கு மணல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே மாதிலிவேளூர், வடரெங்கம் கிராமத்தில் மணல்குவாரி திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. முதல்கட்டமாக தற்போது பெரிய டாரஸ்லாரி, லாரிகளில் முன்பதிவு செய்து மணல் அள்ளிசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

     இதனிடையே டிராக்டர் டிப்பர்களிலும் மணல் வழங்கவேண்டும் டிராக்டர்உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற அமைதிபேச்சுவார்த்தையில் மணல்குவாரியிலிருந்து டிராக்டர் டிப்பர்களுக்கு மணல் வழங்கி வாழ்வா தாரத்தை காக்வேண்டும் என்ற கோரிக்கை பரிசீ லிக்கப்பட்டு நாளை டிராக்டர் டிப்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பபட்டு 30-ந் தேதி முதல் மணல் டெப்போவில் மணல் வழங்கப்படும் என பொதுப்பணித்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி வட்ட டிப்பர்களுக்கு  குன்னம் மணல் டெப்போவிலும், சீர்காழி டிப்பர்களுக்கு பாலூரான்படுகை டெப்போ மூலம் மணல் வழங்கப்படும் என தெரிவிக்க ப்பட்ட தையடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
    ×