search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    X
    புற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை அம்மன், நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 

    இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. 

    அதனை தொடர்ந்து எட்டு மணிக்கு வேத மந்திரம் ஓத, சிவாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இவ்விழாவில் தருமை ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×