search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரையாக மயிலாடுதுறைக்கு வந்தபோது  மும்மதத்தினர்  வரவேற்றனர்.
    X
    தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரையாக மயிலாடுதுறைக்கு வந்தபோது மும்மதத்தினர் வரவேற்றனர்.

    தருமபுர ஆதீனம் குருலிங்க சங்கம பாதயாத்திரை

    கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தருமபுர ஆதீனம் குருலிங்க சங்கம பாதயாத்திரைைய துவங்கினார்.
    கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தருமபுர ஆதீனம் குருலிங்க சங்கம பாதயாத்திரைைய துவங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையானதும், சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்ற தலமான அரும்பன்னவன முலை அம்பாள் சமேத உத்தவே தீஸ்வரர் கோவில் அமை ந்துள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது. 

    அதன் பின்னர் தற்போது அன்பர்கள் உதவியுடன் திருப்பணிகள் செய்து புதுப்பித்து கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தன. 62 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது

    . இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், குரு லிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்ஆதீனத்தில் உள்ள சொக்கநாதப்பெ ருமான் ஆலயத்தில்பூஜி க்கப்பட்டு வந்த ஆத்மலி ங்கத்தை தருமபுரம் ஆதின மடாதிபதி தலையில் சுமந்து பாதாயாத்திரையை துவங்கினார். 

    மங்கல சின்னங்கள் முன்னே செல்ல பாதயாத்திரை நடைபெற்றது.குரு லிங்க சங்கம பாதயாத்திரை சென்ற ஆதீனத்தை வரவே ற்று வீடுகள் தோறும் பொதுமக்கள் கோலமிட்டு பூரண கும்ப மரியாதை அளித்து தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறை தர்காஸ் ஜமாத் சார்பில் திரளான இஸ்லாமியர்கள், மாயூரம் தமிழ்ச்சங்கம் சார்பில் ஜெனிபர் பவுல்ராஜ் ஆகி யோர் மடாதிபதிக்கு மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×