என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    இந்து பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் மடாதிபதிகளை தி.மு.க அரசு மிரட்டி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜ்குமார் தலைமை தாங்கினர். பாலாஜி, சீர்காழி சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேஷ் வரவேற்றார். ஆசியுரை ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் பண்டார சன்னதி, சிறப்புஅழைப்பாளர்கள் திரைப்பட நடிகரும், சண்டை மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்து கொண்டனர்.

    இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது.

    திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை திமுக அரசு இடித்துள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆட்சி நடப்பது போல் மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனர். பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கில் தமிழக அரசு தடை செய்துள்ளது. திமுக அரசு மடாதிபதிகளை மிரட்டி வருகிறது.இந்துக்களின் கலாச்சாரத்தை உடைக்க வெளிநாடுகளில் இருந்தும் சதி நடைபெறுகிறது என கூறினார்.

    பா.ஜ கட்சியின் மாவட்ட செயலாளர் அகோரம், நாஞ்சில் பாலு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நகர செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து.தேவேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த மேலையூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து. தேவேந்திரன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் பூம்புகார். 

    இந்தகரை மீட்டெடுத்து தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்தியவர் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி ஆவார்.

    மேலும் வள்ளுவருக்கு கோட்டம் எழுப்பியதும், கன்னியாகுமரியில் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை அமைத்ததும் கலைஞர் அவர்களே அகநானூறு, புறநானூறு, பதினொன் கீழ்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என பல்வேறு சிறப்புகளை கொண்ட தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்ததும் அவரே. 

    எனவே தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கே உணர்த்திய கலைஞரின் பிறந்தநாளான வருகிற ஜுன் 3ம் தேதியை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என கூறினார்.

    குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. இதில் தருமபுரம், மதுரை ஆதீனங்கள் பங்கேற்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை முதல் கால பூஜை துவங்கியது.

    இதில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வந்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டளை தம்பிரான் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து இரு சன்னிதானங்களும் யாகசாலை பூர்ணாஹீதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தற்போது ஆதீன பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் 2 குருமகா சன்னிதானங்கள் சந்தித்து பேசிக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பேச்சாவடி பகுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மாணவர்களிடையே போதை பொருட்களின் புழக்கத்தை அரசு தடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பேச்சாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-

    தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பள்ளிவாசலிலேயே எளிதாக கிடைக்கிறது., இதற்கு காவல்துறையும் உடந்தையாகச் இருக்கி றார்கள். காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் தமிழக முதல்வர் இதற்கென தனி கவனம் செலுத்தி அனைத்துக்கட்சி கூட்டத்தினை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    மருத்துவ கல்வி வணிக மையமாவதை தடுக்கும் நோக்கில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் பயிற்சி சென்டர்கள் வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மாணவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மட்டும் நடத்தி மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இந்த கல்வி ஆண்டிற்குள் 10.5 % சதவீத இட ஒதுக்கீடு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பது தங்களது கோரிக்கையாக இருக்கிறது,

    நெய்வேலி என்.எல்.சி.யில் கடந்த வருட லாபம் மட்டும் 11,000 கோடி என்றும் ஆனால் சுற்றியுள்ள பொது மக்களுக்கு மருத்துவ வசதி உட்பட அடிப்படை வசதி எதுவும் செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்திற்கு என்.எல்.சி. நிறுவனம் எதற்கு இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார்.

    பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தாங்கள் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். அமைச்சர் துரைமுருகனின் வாக்கு பளிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.மதுவிலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் எனவும் அவ்வப்போது கூறினார்.

    தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை பல்லக்கில் அமரவைத்து மனிதர்கள் தூக்குவதற்கு தடை விதித்தது குறித்து பதிலளிக்கையில் நம் முன்னோர்கள் கடைப்பிடிக்கக் கூடிய சில மரபு வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும் எனவும் இதில் எந்தத் தடையும் யாரும் விதிக்கக் கூடாது என்றும் நமக்கு உரிய சில கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை நாம் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்தார்.

    தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தருமபுரம் ஆதீனம் தமிழையும், சைவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

    தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு உள்ளூர் கோட்டாட்சியர் தடை விதித்து நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

    தருமபுரம் ஆதீனம் மடத்தின் பாரம்பரி–யத்தையும் மரபுகளையும் காக்கின்ற இடத்தில் தற்போது இருக்கின்றார். கடந்த காலங்களில் இது போன்ற எதிர்ப்புகள் வந்த போது கூட பல எதிர்ப்புகளையும் மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியானது நடைபெற்று வந்தது.

    திருமடங்களுக்கு என்று பாரம்பரியமும் மரபுகளும் தனியாக உள்ளது. இதனை தடை செய்வது அரசாங்கம் இந்து சமய நிகழ்வுகளில் தலையிடும் செயல் ஆகும். சட்டப்படியும் கூட ஆர்.டி.ஓ செய்த செயல் தவறானது. 

    உடனடியாக இதனை வாபஸ் பெற வேண்டும்.வழக்கம்போல் ஆதினத்தின் பாரம்பரியங்கள் மரபுகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது இந்து மக்கள் கட்சியின் கோரிக்கை. இதனை ஆதீனத்திடம் நேரில் வலியுறுத்துவோம்.மேலும் தமிழகத்திலுள்ள மடாதிபதிகள் அனைவரும் இணைந்து முதல்வரை சந்தித்தனர். இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதுவும் மிகவும் வரவேற்கத்தக்கது.

    ஆனால் அங்கு சென்ற பாரம்பரியம் மிக்க நமது மடாதிபதிகளுக்கு உரிய வரவேற்பு மரபுகள் படி மரியாதையும் செலுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான அரசு, ஆன்மீக அரசு என சொல்லிக் கொள்பவர்கள் மடாதிபதிகளை காக்க வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அதேபோல் மடாதிபதிகளும் இந்த ஆட்சியை ஆன்மீக அரசு என்று தெரிவித்துள்ளார்கள். 

    இந்தச் சூழ்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு அரசு தடை விதித்து இருப்பது முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது என தெரிவித்தார். அப்போது இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    மயிலாடுதுறையில் உள்ள சுமங்கலி காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் அருகில் அமைந்துள்ள சுமங்கலி காளியம்மன், சுமங்கலி மாரியம்மன் கோயில் 39 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. 

    இதற்கு முன்னதாக காவிரி கரையில்இருந்து கரகம் காவடி காளிஆட்டம் புற ப்பட்டு அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வீதி உலா வந்தது. கோயில் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீக்குண்டத்தில்பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இதனை தொடர்ந்து மாப்படுகை அய்யனார் கோயில் நகர மற்றும் கிராம சீர் வரிசையுடன் அம்பாள் சன்னதி வந்தடைந்தது. தீப ஆராதனையும் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலய அர்ச்சகர் ஸ்ரீதர், செயல் அலுவலர் அசோக்குமார், நகர கிராமவாசிகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் மேலபாதி ஊராட்சி, மேல தெருவை சேர்ந்தவர்கள். அம்மாயி என்கிற பிரவீன்ராஜ், காவியா (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் அடிக்கடி இருவருக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று மனவேதனையடைந்த காவியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    தகவலின்பேரில் செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். 

    மயிலாடுதுறை டிஎஸ்பி வசுந்தரராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். 
    திருமணமாகி இரண்டு வருடமே ஆவதால் சீர்காழி ஆர்.டி.ஓ.வின் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    செம்பனார்கோவில் ஒன்றியம் திருச்சம்பள்ளி ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருச்சம்பள்ளி ஊராட்சியில் மே தினம் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் துரை தலைமை தாங்கினார். பற்றாளர் லதா முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சசிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் பொதுமக்க ளிடம் குறைகள் கூற அனுமதிக்கப்பட்டது. அப்போது சாலை வசதிகள் செய்து தரவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்துத் தரவேண்டும்.வாய்க்கால் குளங்கள் தூர் வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்தனர்அதனை தீர்மானங்களில் எழுதப்ப ட்டடு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்படும் என்று கூறினர். 

    இதில் சமூக ஆர்வலர் கார்த்திக், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் மீனா நன்றி கூறினார்.
    சீர்காழியில் பாரதிசெல்லம்மா சிலை ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி வருகைபுரிந்த பாரதிசெல்லம்மா திருவுருவசிலை அமைக்கப்பட்ட ரதத்திற்கு சிலம்பாட்டம், மயிலாட்டம் பட்டாசு வெடித்து மாலை அணிவித்தும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மகாகவி பாரதியின் மனைவியான செல்லம்மாவின் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் சேவாலயா அறக்கட்டளையின் சார்பாக செல்லம்மா பாரதி கற்றல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

     இங்கு நிறுவுவதற்காக உருவாக்கப்பட்ட செல்லம்மா பாரதியின் திருவுருவ சிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரதத்தில் யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டு நிறைவாக ஜூன் 27-ம் தேதி செல்லம்மா -பாரதி திருவுருவ சிலை நிறுவப்படவுள்ளது செல்லம்மாபாரதி திருவுருவ சிலையுடன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர பகுதிக்கு வந்தடைந்த ரதத்தின வரவேற்கும் விதமாக சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் வரவேற்பு விழா நடைபெற்றது. பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமைஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், உடற்கல்விஇயக்குனர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ}மாணவிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து பாரதியாரின் கவிதைகள் குறித்தும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. 

    சிலம்பாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பட்டாசுகள் வெடித்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு ரதத்திற்கு அளிக்கப்பட்டது. பின்னர் புறப்பட்டு வந்த ரதத்திற்கு சீர்காழி நகரமன்ற தலைவர் துர்காபர மேஸ்வரிராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் நித்தியாதேவிபாலமுருகன், ஜெயந்திபாபு, பாஸ்கரன், முபாரக் மற்றும் திமுகவை சேர்ந்த ஜே.கே.செந்தில் ஆகியோர் வர வேற்பு அளித்தனர்.

    பின்னர் சங்கர மடம் வந்தடைந்த ரதத்திற்கு தமிழ்நாடு பிரமாணர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கடவாசல்.ரமணன், வெங்கட்ராமன், முத்துகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோ ரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் தென்பாதியில் சாய்ராம் வித்யாலயா, சாரதாவித்யாலயா மெட்ரிக்பள்ளி சார்பில் அதன் தாளாளர் ராஜா, தலைவர் கதிரவன், செயலாளர் சாய். ராக்கேஷ் ஆகியோர் ரதத்தினை வரவேற்றனர்.

    சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுபம்வித்யாமந்திர் பப்ளிக் பள்ளி ஆகியன சார்பில் செல்லம்மாள் பாரதி ரதத்திற்கு சிறப்பான வரவேற்று அளித்தனர். சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பில் அதன் தலைவர் சக்கரபாணி செயலாளர் அன்பழகன், பேராசிரியர் வீழிநாதன், ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் அதை தொடர்ந்து சீர்காழி நகர பகுதியில் ஊர்வலமாக சென்ற பாரதி செல்லம்மா திருவுருவச்சிலைக்கு வழிநெடுகிலும் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் பிரமுகர்கள், மரியாதை செலுத்தி வரவேற்பளித்தனர்.

    சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீ ஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் செல்வமு த்துக்குமாரசாமி, செ வ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதி களில் அருள்பாலி க்கின்றனர்.

    இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்ததுமுன்ன தாக கிருத்திகை மண்ட பம் எழுந்தருளிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு இளநீர், தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்செய்ய ப்பட்டது. 

    தொடர்ந்து மலர்களால் அலங்க ரிக்க ப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்று மகா தீபம் காட்டப்பட்டது.இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார்.
    பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை திரும்பபெற வேண்டும் என கலெக்டரிடம் ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மனு அளித்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டனப்பிரவேசம் என்ற நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அறிக்கையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டுகொண்டுள்ளார். 

    அதன்பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ பாலாஜி உத்தரவிட்டார்
    .
    இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மீக பேரவை மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
    இந்நிலையில் மயிலாடு–துறை ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் ஆர்.டி.ஓ.வின் தடைஉத்தரவை திரும்பபெற்று தருமபுர ஆதீன பட்டண–ப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையின்றி நடத்த ஆவனம் செய்ய வேண்டி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர்.

    ஆதீனகர்த்தரை சொக்கநாத பெருமானாக கருதி வணங்கி பக்தர்கள் பூரணகும்ப மரியாதையுடன் பூஜைகள் செய்து கொலுபீடத்தில் அமர வைத்து கடவுளாக பாவிப்பர் பலநூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கடை–பிடிக்கப்பட்டு வரும் ஆன்மிக நிகழ்வுகளை நடத்த அரசு தடை ஏற்படுத்தாமல் சிறப்பாக நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனர். 

    இந்நிகழ்ச்சியில் செந்தில்வேலன், பண்ணை சொக்கலிங்கம், சிவலிங்கம் உள்ளிட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    வைத்தீஸ்வரன்கோயிலில் ஓட்டுனர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீ ஸ்வ ரன்கோயில் பகுதியில் மே தினத்தையொட்டி சேவாதள காங்கிரஸ் மற்றும் தேசபக்தி இயக்கினத்தின் சார்பில் கார், வேன், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க ப்பட்டது. சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால.எழிலரசன் தலைமையில் உழைப்பாளர்களை கௌரவிக்கும் வகையில் ஓட்டுனர்களை அழைத்து சால்வை அணிவித்து மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் சுதந்திர போராட்ட வீரர் ஏ.கே.சொக்கலிங்கம் வாரிசு சொக்க.ஆறுமுகம் மற்றும் தனபால், தாமஸ், ஸ்ரீதர், முருகன் பங்கேற்றனர்.
    ×