search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்த ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர்.
    X
    கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்த ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர்.

    பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை திரும்பபெற வேண்டும் - கலெக்டரிடம், ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மனு

    பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை திரும்பபெற வேண்டும் என கலெக்டரிடம் ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மனு அளித்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டனப்பிரவேசம் என்ற நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அறிக்கையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டுகொண்டுள்ளார். 

    அதன்பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ பாலாஜி உத்தரவிட்டார்
    .
    இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மீக பேரவை மற்றும் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
    இந்நிலையில் மயிலாடு–துறை ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் ஆர்.டி.ஓ.வின் தடைஉத்தரவை திரும்பபெற்று தருமபுர ஆதீன பட்டண–ப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையின்றி நடத்த ஆவனம் செய்ய வேண்டி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர்.

    ஆதீனகர்த்தரை சொக்கநாத பெருமானாக கருதி வணங்கி பக்தர்கள் பூரணகும்ப மரியாதையுடன் பூஜைகள் செய்து கொலுபீடத்தில் அமர வைத்து கடவுளாக பாவிப்பர் பலநூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கடை–பிடிக்கப்பட்டு வரும் ஆன்மிக நிகழ்வுகளை நடத்த அரசு தடை ஏற்படுத்தாமல் சிறப்பாக நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனர். 

    இந்நிகழ்ச்சியில் செந்தில்வேலன், பண்ணை சொக்கலிங்கம், சிவலிங்கம் உள்ளிட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    Next Story
    ×