search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசி பெற்ற இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்அர்ஜூன் சம்பத்.
    X
    தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசி பெற்ற இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்அர்ஜூன் சம்பத்.

    பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி

    தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தருமபுரம் ஆதீனம் தமிழையும், சைவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

    தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு உள்ளூர் கோட்டாட்சியர் தடை விதித்து நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

    தருமபுரம் ஆதீனம் மடத்தின் பாரம்பரி–யத்தையும் மரபுகளையும் காக்கின்ற இடத்தில் தற்போது இருக்கின்றார். கடந்த காலங்களில் இது போன்ற எதிர்ப்புகள் வந்த போது கூட பல எதிர்ப்புகளையும் மீறி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியானது நடைபெற்று வந்தது.

    திருமடங்களுக்கு என்று பாரம்பரியமும் மரபுகளும் தனியாக உள்ளது. இதனை தடை செய்வது அரசாங்கம் இந்து சமய நிகழ்வுகளில் தலையிடும் செயல் ஆகும். சட்டப்படியும் கூட ஆர்.டி.ஓ செய்த செயல் தவறானது. 

    உடனடியாக இதனை வாபஸ் பெற வேண்டும்.வழக்கம்போல் ஆதினத்தின் பாரம்பரியங்கள் மரபுகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது இந்து மக்கள் கட்சியின் கோரிக்கை. இதனை ஆதீனத்திடம் நேரில் வலியுறுத்துவோம்.மேலும் தமிழகத்திலுள்ள மடாதிபதிகள் அனைவரும் இணைந்து முதல்வரை சந்தித்தனர். இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதுவும் மிகவும் வரவேற்கத்தக்கது.

    ஆனால் அங்கு சென்ற பாரம்பரியம் மிக்க நமது மடாதிபதிகளுக்கு உரிய வரவேற்பு மரபுகள் படி மரியாதையும் செலுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான அரசு, ஆன்மீக அரசு என சொல்லிக் கொள்பவர்கள் மடாதிபதிகளை காக்க வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அதேபோல் மடாதிபதிகளும் இந்த ஆட்சியை ஆன்மீக அரசு என்று தெரிவித்துள்ளார்கள். 

    இந்தச் சூழ்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு அரசு தடை விதித்து இருப்பது முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளது என தெரிவித்தார். அப்போது இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×