search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றங்கரையோரம் குடிசையில் ஏழ்மை நிலையில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்.
    X
    ஆற்றங்கரையோரம் குடிசையில் ஏழ்மை நிலையில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்.

    வறுமையில் தவித்த நேபாள குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

    வறுமையில் தவித்த நேபாள குழந்தைகள் 4 பேரை வட்டார வள மைய அதிகாரிகள் அரசு பள்ளியில் சேர்த்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரிசங்கு, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் சேராமல் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றார்களா என்று கொள்ளிடம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது கொள்ளிடம் பகுதியிலுள்ள ஒரு கரும்பு சாறு விற்பனை செய்துவரும் கடையில் நேபாளத்தை சாா்ந்த 35 வயதுள்ள ஒரு பெண்ணும் அவருடைய 9 வயது மகனும் வேளை செய்து வந்தனர். மிகவும் வறுமை நிலையில் வசித்து வரும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே ஆற்றங்கரையோரம் ஒரு குடிசையில் வசித்து வருவதை அறிந்து அங்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கல்வியின் அவசியமும் எதிர்கால வாழ்க்கை குறித்தும் அவர்களிடம் எடுத்துக் கூறியபோது, தமிழ்நாட்டுக்கு அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்து 5 ஆண்டு ஆகிறது என்றும் தனக்கு 3 குழந்தைகள் என்றும் மூவரும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடியவில்லை என்றும் கூறினர். மேலும் அங்கு வசித்து வரும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும் பள்ளியில் சேரமால் இருந்தது கண்டறியப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து பள்ளியில் சேராமல் இருந்த இந்த நான்கு குழந்தைகளையும் கொள்ளிடம் துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5ஆம்வகுப்பு, 3ஆம்வகுப்பு, 2 ஆம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு ஆகிய வகுப்புகளில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் கொண்டு வந்து சேர்த்தனர். இதுவரை பள்ளியில் சேராமல் இருந்து தற்போது 4 குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×