என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    X
    திட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

    சாலையின் தரத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்

    திட்டை ஊராட்சியில் அமைக்கப்பட்ட சாலையின் தரத்தை கலெக்டர் லலிதா திடீரென ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வளர்ச்சி பணிகள் நடைபெறுவதை திடீர் ஆய்வு செய்தார். 

    அதன்படி திட்டை ஊராட்சி குளங்கரை தெருவில் ஏஎன்எஸ் நகரில் என்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ததோடு சாலையின் தரத்தினை பள்ளம் வெட்டி சோதித்து பார்த்தார். பின்னர் சாலையின் அகலம், உயரம் ஆகியவற்றையும் அளந்து ஆய்வுசெய்தார்.

     தொடர்ந்து கற்பகம் நகரில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் ஆய்வுசெய்தார்.இந்த ஆய்வின்போது சீர்காழி ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலு வலர் அருள்மொழி, பொறி யாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, துணை தலைவர் விஜ யராணி, ஊராட்சி செயலர் அன்பரசன் உடனிருந்தனர்.
    Next Story
    ×