என் மலர்
கிருஷ்ணகிரி
- தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
- ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும்படை தாசில்தாராக பணியாற்றி வருபவர் இளங்கோ.
இவர் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து வருகிறார்கள். மேலும் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த தாசில்தார் இளங்கோ பயன்படுத்தி வரும் அரசு ஜீப்பில் டிரைவராக கிருஷ்ணகிரியை அடுத்த பி.சி.புதூரை சேர்ந்த சுப்பிரமணி (59) என்பவர் பணியாற்றி வந்தார்.
ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கலெக்டரின் டிரைவராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் பணி மாறுதலில் பறக்கும் படை தாசில்தார் இளங்கோவின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தாசில்தாரின் ஜீப்பில் ஜி.பி.எஸ். கருவி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இதை கவனித்த அவர், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட தாசில்தாரின் டிரைவர் சுப்பிரமணியை பணிமாறுதல் செய்து கிருஷ்ணகிரி தாசில்தார் ஜீப்பின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஜி.பி.எஸ். கருவியை ரேஷன்அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த குருபரப்பள்ளி அருகே உள்ள நடுசாலையை சேர்ந்த தேவராஜ் (33) என்பவர் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கருவி தேவராஜின் செல்போன் எண்ணுடன் இணைப்பில் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தேவராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தான் ரேஷன் அரிசி கடத்தலுக்காக ஜி.பி.எஸ். கருவியை பறக்கும் படை தாசில்தாரின் ஜீப் டிரைவராக இருந்த சுப்பிரமணியிடம் வழங்கியதாகவும், அதை அவர் தான் ஜீப்பில் பொருத்தி எனக்கு உதவி செய்தார் என்றும் கூறினார்.
இதையடுத்து ஜீப் டிரைவர் சுப்பிரமணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அரிசி கடத்தல் மன்னன் தேவராஜ் கூறியவை உண்மை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி வாங்கி தாசில்தாரின் ஜீப்பில் பொருத்தி ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த தேவராஜ், உடந்தையாக இருந்த தாசில்தாரின் ஜீப் டிரைவர் சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க செல்லும் பறக்கும் படை தாசில்தாரின் ஜீப்பிலேயே ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி, வாகனத்தை கண்காணித்து, ரேஷன் அரிசி நூதன முறையில் கடத்திய நபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஜீப் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனீந்தி ராவை தேடிவரு கின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கானநா யக்கனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனீந்திரா (வயது32).
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தம்பி சேகர் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முனீந்தி ராவை தேடிவரு கின்றனர்.
- அங்கு வந்த 2 பேர் அண்ணாமலை படித்து கொண்டிருந்த செய்திதாளை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர்.
- ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து அண்ணாமலையை கல்லால் தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரியகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது55). விவசாயியான இவர் சம்பவத்தன்று ஊத்தங்கரை கதவனண பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் உட்கார்ந்து செய்திதாளை படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 பேர் அண்ணாமலை படித்து கொண்டிருந்த செய்திதாளை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து அண்ணாமலையை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் கதவ ணை பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் சதீஸ் (25), தென்னரசு (32) ஆகிய 2 பேர் அண்ணாமலையை தாக்கியது தெரியவந்தது. இதில் சதீஸை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தென்னரசுவை போலீசார் தேடிவருகின்றனர்.
- சூளகிரி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- தனியார் மகாலில் சூளகிரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நடைபெற்றது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் சூளகிரி பேரிகை சாலையில் உள்ள தனியார் மகாலில் சூளகிரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாக்யராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழக ஆக்கப் பணிகள் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கபட்டது. கழக தலைவர் ஆணைக்கிணங்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலை ஒன்றினைந்து செயல்படவும், ஆலோசனை வழங்கப்பட்டது .
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாவட்ட, நீர்வாகிகள் சீனிவாசன், ஷேக் ரஷீத் அருணா பூசன்குமார், சாலம்மாள், ஒன்றிய நிர்வாகிகள் ஹரி, ராமசந்திரன், முனிசந்திரன், பூசன் குமார், கோதாண்டன், அன்பு, கழக நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணி களின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பி.எல்.ஏ நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
- பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் பால் கொள்முதல் கட்டிடத்தை குத்து விளக்கேற்றி வைத்து திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பால்கொள் முதல் நிலைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் பால் கொள்முதல் கட்டிடத்தை குத்து விளக்கேற்றி வைத்து திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார்.
விழாவில் மத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, மாவட்ட அரங்காவலர் குழுத் தலைவர் ரஜினி செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா, மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ் குமரன், துரைசாமி, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, திமுக மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், ஒன்றிய கழகத் துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஏகாம்பரம், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி மாதப்பன், பால்வள பொது மேலாளர், துணைபதிவாளர் மற்றும் சார்பதிவாளர் கால்நடை மருத்துவர், விரிவாக்க அலுவலர் பால் வள கூட்டு சங்க செயலர் கார்த்திகேயன், களர்பதி பூபதி, பால்வளகூட்டுவு சங்க இயக்குநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நேற்று வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்களை அழைத்து மயான நிலத்தை சர்வே செய்தார்.
- அதிகாரிகள் அத்தி முகம் பொது மக்களுக்கு மயான நிலத்தை மீட்டு கொடுத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, அத்தி முகம் கிராமத்தில் பல வருடங்களாக மயானம் நிலத்தை ஒரு சிலர் ஆக்கிரமித்து வந்தனர் .
இதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நள்ளிரவு நேரங்களில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அந்த வழியாக மண்சாலை அமைத்தனர்.
இதனை கண்ட அத்திமுக கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சரயுவிடம் புகார் அளித்தனர். புகார் மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நேற்று வருவாய் துறை அதிகாரிகள், ஊர் மக்களை அழைத்து மயான நிலத்தை சர்வே செய்தார்.
இதில் சுமார் 2.12 ஏக்கர் நிலம் ஆக்கரிமிப்பு செய்ய பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அத்தி முகம் பொது மக்களுக்கு மயான நிலத்தை மீட்டு கொடுத்தனர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டு கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டர் சரயுவிற்கும் நன்றி தெரிவித்து கொண்ட னர்.
- ஓசூர் - பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது.
- 150 கி.மீ.,க்குள் இருந்தால் பெங்களூரு விமான நிலைய எம்.டி., அனுமதி பெற வேண்டும். அவர், வாரத்திற்கு 4 விமானம் ஓட்ட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓசூர் - ஜோலார்பேட்டை ரெயில்வே திட்டத்திற்காக சர்வே பணி முடிக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது. இதனை ரெயில்வே பொது மேலாளர், ரெயில்வே மந்திரிக்கு அனுப்ப உள்ளார்.
இந்த அறிக்கை திட்ட கமிஷனுக்கு அனுப்பி, அங்கிருந்து கேபினட் கமிட்டி மூலம் பிரதமர் அலுவலகத்தில் முடிவு எடுக்கப்படும். இப்பணிகள் முடிய குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இந்த திட்டத்திற்காக ரூ.1600 முதல் ரூ.1700 கோடி வரை செலவாகும்.
இதுகுறித்து ரெயில்வே மந்திரியிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில்வே திட்டம் டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, ஜனவ ரியில் திட்ட பணிகள் தொடங்கும், இந்த ரயில் பாதைக்கு நிதி பற்றாக்குறை ஏதாவது இருந்தால், பிரதமரின் கதிசக்தியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வார்கள்.
இதே போல் ஓசூர் - பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. ஓசூரில் விமான நிலையத்திற்கு, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி உதான் திட்டத்தில் அனுமதி பெற்று தந்தார்.
150 கி.மீ.,க்குள் இருந்தால் பெங்களூரு விமான நிலைய எம்.டி., அனுமதி பெற வேண்டும். அவர், வாரத்திற்கு 4 விமானம் ஓட்ட வேண்டும். 19 சீட் மட்டும் இருக்க வேண்டும் என அனுமதி அளித்தார். ஆனால் எந்த விமான நிறுவனமும் இதை நடத்த முன்வரவில்லை.
இதற்கிடையில் தமிழக அரசு ஒரு இண்டர்நேஷனல் விமான நிலையம் கொண்டு வருவதாக கூறி இடம் தேடினர். மத்திய அரசு அனுமதி அளிக்காததால் அந்த திட்டம் நின்று போனது. இதனால் தி.மு.க. மத்திய அரசு விமான நிலையத்தை தடுத்துவிட்டனர் என புகார் தெரிவித்தனர்.
ஆனால் ஏற்கனவே இயங்கக்கூடிய நிலையில் உள்ள ஓசூர் விமான நிலையத்தை தயார் செய்யும் படிதான் மத்திய அரசு கூறியது. பின்னர் தொழில் அதிபர்களை வைத்து பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் அரை கி.மீ., தொலைவிற்கு கூடுதலாக ரன்வே அமைத்தால் இத்திட்டம் தொடங்கலாம் என முடிவானது. இந்த திட்டமும் வரும் டிசம்பர் மாதத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த 3 திட்டங்களும் விரைவில் முடிக்கப்பட்டு அறிவிப்புகள் வர உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆனந்தா, வெங்கடா சலத்து டன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
- பாக்கிய லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தா வை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி அருகே உள்ள பொம்மண்டப் பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (30).
இந்த நிலையில் பாக்கிய லட்சுமி செல்போனில் சமூக வலை தளமான முக நூலில் (பேஸ்புக்) கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம், ஆனேக்கல் தாலுகா திம்ம சந்திரத்தை சேர்ந்த ஆனந்தா (33) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இது பாக்கிய லட்சுமியின் கணவர் வெங்கடாசலத்திற்கு தெரிய வந்தது.
இது குறித்து அறிந்து அவர் தனது மனைவியை கண்டித்தார். பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் தேவையற்ற நபர்களுடன் பேசி, பழக கூடாது என்று எச்சரித்தார்.
மேலும் ஆனந்தாவையும் எச்சரித்தார். இதனால் பாக்கியலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற் பட்டது.
இதனால் கணவருடன் கோபித்து கொண்டு பாக்கிய லட்சுமி, தனது பெற்றோர் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றார்.
மேலும் தொடர்ந்து பேஸ்புக்கில் ஆனந்தாவுடன் பழகி வந்தார். இந்த நிலையில் தனது மனை வியை வீட்டிற்கு வெங்கடா சலம் அழைத்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி பொம்மண்டப்பள்ளியில் உள்ள நிலத்தில் வெங்க டாசலமும், பாக்கியலட்சுமி யும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆனந்தா, வெங்கடா சலத்து டன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பாக்கிய லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தா வை கைது செய்தனர்.
அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் பிரிவு களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.
- அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் ஊழியர்களை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களாக மாற்றம் செய்திட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் சேரலநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் 186 நம்பிக்கை மையங்களை, முதற்கட்ட பரிசோதனை மையங்களாக மாற்ற மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும். அவுட் சோர்சிங் முறையில் பணிபுரியும் ஊழியர்களை, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களாக மாற்றம் செய்திட வேண்டும்.
நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுகொண்டப்படி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதை போல், ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் மாவட்ட பொருளாளர் சிவசண்முகம் நன்றி கூறினார்.
- விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு ஊற்றி பயிர்களைக் காத்து வருகின்றனர்.
- விவசாய விளை நிலப் பகுதிக்குச் சீரான மற்றும் உயரழுத்த மின் விநியோகத்துக்கு மின்வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள கிராம மக்களுக்கு விவசா யமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மேலும், இப்பகுதி விவ சாயிகள் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும், மழையை நம்பி மானாவாரி நிலங்களிலும் சில விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது மழை இல்லாததால் பயிர்களை காக்க அதிக அளவில் நீர் பாய்ச்சும் நிலையுள்ளது.
இந்நிலையில், வேப்பனப்பள்ளி, நாச்சி குப்பம், சிகரமானப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாண வரனப்பள்ளி, நேரலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்தழுத்த மின் விநி யோகம் காரணமாக விளை நிலங்களில் மின் மோட்டா ரை இயக்க முடி யாத நிலை நிலவி வருகிறது.
தொடரும் இப்பிரச்சினை யால், வாடி வரும் பயிர்களை காக்கவும், நிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் இப்பகுதி விவசாயிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு ஊற்றி பயிர்களைக் காத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் தொடர் மின் வெட்டு, குறைந்தழுத்த மின் விநியோகம் காரணமாக விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிய வில்லை.
ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி நேரத்துக்கும் மேல் மின் நிறுத்தம் செய்யப்படு கிறது. மேலும், மின் விநியோகம் இருக்கும்போது குறைந்தழுத்த மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை.
இதனால், குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் ஊற்றி பயிர் களை காத்து வருகி றோம். இதேநிலை நீடித்தால், மகசூல் பாதிப்பும், வருவாய் இழப்பும் ஏற்படும்.
எனவே, விவசாய விளை நிலப் பகுதிக்குச் சீரான மற்றும் உயரழுத்த மின் விநியோகத்துக்கு மின்வாரி யம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
இதுதொடர்பாக மின் வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது, மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள தாலும் விவசாய பயன் பாட்டுக்கான மின் தேவை வழக்கத்தை விட அதிகரித் துள்ளது.
இதனால் மின் அழுத்த பிரச்சினை ஏற்படுகிறது. இதை சீர் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.
- கடந்த 3 ஆண்டு களாக காந்தி நினைவு மண்டபம் பராம ரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.
- நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்ட கலெக்டர் கடந்த 1956-ம் ஆண்டு காவேரிப்பட்டிணம் பகுதியில் காந்தி நினைவு மண்டபம் அமைக்க அரசு புறம்போக்கு நிலத்தில் 3.8 சென்ட் நிலம் வழங்கினார்.
அந்த நிலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜ் மணியகார் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு காந்தி ஜெயந்தி, காந்தி நினைவு நாள், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பிறந்தநாள்கள், நினைவு நாட்கள், போன்றவை நடத்தப்பட்டு வந்தன.
பள்ளி, கல்லூரி மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். அவருக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் பட்டாபி நாயுடு, அவருக்கு பின்னர் 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக இருந்த காசிலிங்கம் தலைமையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர் கொண்ட அறக் கட்டளை குழு காந்தி நினைவு மண்டபத்தை பராமரித்து வந்தது.
அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக காந்தி நினைவு மண்டபம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு உள்ளது.
காந்தி நினைவு மண்டபத் திற்குள் உள்ள கலையரங்கங்கள் சேதமடைந்தும், கதவுகள் உடைந்தும், செடிகள் முளைத்து முட்புதர்களாகவும் பரா மரிப்பின்றி காணப்படுகிறது.
நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த காந்தி நினைவு மண்டபம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
அதேபோல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அதில் இந்திய காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு சேர்மன் விஜய் இந்தர் சிங்லா, குழு உறுப்பினர்கள் நிதின் கும்பகர், வாசு ஆகியோர் காந்தி மண்டபம் மற்றும் அதன் சொத்துக்களை கடந்த ஜூலை மாதம் நேரில் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில காங்கிரஸ் கட்சியும், தேசிய காங்கிரஸ் கட்சியும் காந்தி நினைவு மண்டபத்தை புனரமைத்து சுதந்திர போராட்ட வரலாற்றை படைப் பாற்றும் விதமாக கண்காட்சிகள் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- சிறிது நேரம் கழித்து வெங்கட்ராமன் வெளியே வந்து பார்த்தபோது, கடைக்கு முன்பு நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
- உடனே திவாகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வைத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது28). இவர் நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்தார்.
அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
சிறிது நேரம் கழித்து வெங்கட்ராமன் வெளியே வந்து பார்த்தபோது, கடைக்கு முன்பு நிறுத்தி யிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த திவாகர் (30) என்பவர், வெங்கட்ராமனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
உடனே திவாகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.






