என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    விவசாயியை தாக்கிய வாலிபர் கைது

    • அங்கு வந்த 2 பேர் அண்ணாமலை படித்து கொண்டிருந்த செய்திதாளை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து அண்ணாமலையை கல்லால் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரியகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது55). விவசாயியான இவர் சம்பவத்தன்று ஊத்தங்கரை கதவனண பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் உட்கார்ந்து செய்திதாளை படித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர் அண்ணாமலை படித்து கொண்டிருந்த செய்திதாளை பிடுங்கி தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து அண்ணாமலையை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.

    இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் கதவ ணை பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் சதீஸ் (25), தென்னரசு (32) ஆகிய 2 பேர் அண்ணாமலையை தாக்கியது தெரியவந்தது. இதில் சதீஸை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தென்னரசுவை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×