என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனவரியில் ஓசூர் - ஜோலார்பேட்டை ரெயில்வே திட்ட பணிகள் தொடங்கும்-பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் தகவல்
    X

    ஜனவரியில் ஓசூர் - ஜோலார்பேட்டை ரெயில்வே திட்ட பணிகள் தொடங்கும்-பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் தகவல்

    • ஓசூர் - பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது.
    • 150 கி.மீ.,க்குள் இருந்தால் பெங்களூரு விமான நிலைய எம்.டி., அனுமதி பெற வேண்டும். அவர், வாரத்திற்கு 4 விமானம் ஓட்ட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓசூர் - ஜோலார்பேட்டை ரெயில்வே திட்டத்திற்காக சர்வே பணி முடிக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது. இதனை ரெயில்வே பொது மேலாளர், ரெயில்வே மந்திரிக்கு அனுப்ப உள்ளார்.

    இந்த அறிக்கை திட்ட கமிஷனுக்கு அனுப்பி, அங்கிருந்து கேபினட் கமிட்டி மூலம் பிரதமர் அலுவலகத்தில் முடிவு எடுக்கப்படும். இப்பணிகள் முடிய குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இந்த திட்டத்திற்காக ரூ.1600 முதல் ரூ.1700 கோடி வரை செலவாகும்.

    இதுகுறித்து ரெயில்வே மந்திரியிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயில்வே திட்டம் டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, ஜனவ ரியில் திட்ட பணிகள் தொடங்கும், இந்த ரயில் பாதைக்கு நிதி பற்றாக்குறை ஏதாவது இருந்தால், பிரதமரின் கதிசக்தியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வார்கள்.

    இதே போல் ஓசூர் - பெங்களூரு மெட்ரோ திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. ஓசூரில் விமான நிலையத்திற்கு, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி உதான் திட்டத்தில் அனுமதி பெற்று தந்தார்.

    150 கி.மீ.,க்குள் இருந்தால் பெங்களூரு விமான நிலைய எம்.டி., அனுமதி பெற வேண்டும். அவர், வாரத்திற்கு 4 விமானம் ஓட்ட வேண்டும். 19 சீட் மட்டும் இருக்க வேண்டும் என அனுமதி அளித்தார். ஆனால் எந்த விமான நிறுவனமும் இதை நடத்த முன்வரவில்லை.

    இதற்கிடையில் தமிழக அரசு ஒரு இண்டர்நேஷனல் விமான நிலையம் கொண்டு வருவதாக கூறி இடம் தேடினர். மத்திய அரசு அனுமதி அளிக்காததால் அந்த திட்டம் நின்று போனது. இதனால் தி.மு.க. மத்திய அரசு விமான நிலையத்தை தடுத்துவிட்டனர் என புகார் தெரிவித்தனர்.

    ஆனால் ஏற்கனவே இயங்கக்கூடிய நிலையில் உள்ள ஓசூர் விமான நிலையத்தை தயார் செய்யும் படிதான் மத்திய அரசு கூறியது. பின்னர் தொழில் அதிபர்களை வைத்து பெங்களூருவில் நடந்த கூட்டத்தில், ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் அரை கி.மீ., தொலைவிற்கு கூடுதலாக ரன்வே அமைத்தால் இத்திட்டம் தொடங்கலாம் என முடிவானது. இந்த திட்டமும் வரும் டிசம்பர் மாதத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த 3 திட்டங்களும் விரைவில் முடிக்கப்பட்டு அறிவிப்புகள் வர உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×