என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை யில் பூமி பூஜை நடைபெற்றது.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய ழகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம் நாகம் பட்டி ஊராட்சி, பிச்சனம் பட்டி பகுதியில் அனைத்து அண்ணா மறுலர்ச்சி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி கதிர்வேல் தலைமை யில் பூமி பூஜை நடைபெற்றது. இப்பூஜைக்கு சிறப்பு அழைப்பாளராக பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதிய ழகன் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய கழக செயலாளர்கள் குண வசந்தரசு, (கிழக்கு), நரசிம்மன் (தெற்கு ), மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர் சங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கதிர்வேல், நாகம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சீனன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் சாந்தமூர்த்தி, கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதய குமார், பொம்மேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தாமரை சுப்பிரமணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் (பொறுப்பு) மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளருமான பூபதி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் முருகன், விஜியகுமார், மாவட்ட ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் ரஜினி சரவ ணன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார், ஒன்றிய கலை இலக்கிய அணி செயலாளர் பால் மூர்த்தி, மாடஹள்ளி மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
- மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி உள்ளிட்ட மூட்டைகள் நனைந்து வீணாகிறது.
- பொதுப்பணித்துறை சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பேட்டபனூர் கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதால் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும். வேப்பனப்பள்ளியில் உள்ள வேளாண்மை அலுவலகம் கட்டிடம் சேதமாகி உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து நெல், ராகி உள்ளிட்ட மூட்டைகள் நனைந்து வீணாகிறது. எனவே, வேளாண்மை அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்.
பாரூர் ஏரியின் கீழ் பொதுப்பணித்துறை சொந்தமான இடங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து அவ்வழியே பொதுமக்கள் சென்று வர இடையுறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுப்பணித்துறை சொந்தமான இடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் அகற்றிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி, தூர்வார வேண்டும்.
மேலும் நீர்நிலைகள், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அதிகளவில் காய்கறிகள் விளைவிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்க வேண்டும். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதை தடுக்க தகவல் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சரயு பேசியதாவது:-
இ-நாம் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை கூடங்களில் மாங்காய்கள் விற்பனை செய்யலாம். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகள் சாகுபடி தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கட்டண விவரங்களுடன் தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- மகனை வெளியே அனுப்பி மகளுக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்தார்.
- போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயது நபர். கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 22.01.2022 அன்று கூலித் தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் கூலி வேலைக்காக சென்ற னர். மகன், மகள் மற்றும் அவரது தந்தை ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப் போது தொழிலாளி மகனை வெளியே அனுப்பி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார், போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தொழி லாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உமாதேவி மங்களமேரி ஆஜர் ஆகி வாதாடினார்.
- சாமுவேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
- மேல்கிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம்,தேன்கனிக் கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 26). கூலித்தொழிலாளி.
இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (32), என்பவரது மனைவி ரேணுகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஜெகதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதை சாமுவேல் கேட்க வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் நேற்று கெலமங் கலம் ராஜலட்சுமி தியேட்டர் அருகே அமர்ந்திருந்த சாமு வேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
படுகாயமடைந்த சாமு வேல் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார். அங்கிருந்து மேல்கிச் சைக்காக ஓசூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கெல மங்கலம் போலீசில் சாமு வேல் புகார் செய்தார்.
இதையடுத்து தலை மறைவாக இருந்த ஜெகதீஷ் மற்றும் ஜெக்கேரி அருகே உள்ள சின்னட்டியை சேர்ந்த விஜய் (25) மற்றும் கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பெண்ணிற்கு திருமணம் ஆகவே குணாவுடன் ஆன தொடர்பை துண்டித்தார்.
- பெண்ணின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார்.
ஊத்தங்கரை,
ஊத்தங்கரை அருகே உள்ளமிட்டப்பள்ளியை சேர்ந்தவர் 22 வயது பெண். திருமணம் ஆனவர். இவருக்கும் ஊத்தங்கரை மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் குணா (23) என்பவருக்கும் இடையே பழக்கம் கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்ததுள்ளது.
இந்த நிலையில் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகவே குணாவுடன் ஆன தொடர்பை துண்டித்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற குணா, அவரை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.
இதனால் அவருடன் வாக்குவாதம் செய்த குணா அவரை தாக்கி மானபங்கம் செய்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காரப்பேடடை
போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் குணாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன்-மனைவி இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- கணவர் ரங்க–சாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகு–தியைச் சேர்ந்தவர் ரங்க–சாமி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர் சற்று மனநலம் பாதிக்கப் பட்டவர். இவர்களுக்கு சந்தோஷ் (வயது19) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தோஷ் வேலைக்காக வெளியே சென்று விட்டார். அப்போது கணவன்-மனைவி இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் இவரது மகள் துர்கா தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட–போது, ஆத்திரமடைந்த ஜெயந்தி தன் கணவர் ரங்கசாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் ஜெயந்தி நடமாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயந்தியின் மகள் துர்கா அப்பா எங்கே என்று கேட்டார். அதற்கு ஜெயந்தி தனது மகளிடம் பதில் ஏதும் சொல்லாமல் இருந்து வந்தார். திடீரென்று அவர் வீட்டின் அருகே இருந்த 60 அடி கிணற்றில் குதித்தார்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த துர்கா சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஜெயந்தியை மீட்ப–தற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரங்கசாமி பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து துர்கா காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரங்கசாமி, அவரது மனைவி ஜெயந்தி ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரி–சோதனைக்காக காவேரிப்–பட்டணம் அரசு மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிப்–பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தி நேற்று இரவு நடந்த தகராறில் ஆத்தி–ரத்தில் அவரது கணவர் ரங்க–சாமியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, மறுநாள் காலையில் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கொன்று விட்டு மனநலம் பாதிக்க ட்ட பெண் தானும் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பர–பரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- பட்டாசுகள் வெடித்தும் பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங் கியும் கொண்டாடினர்.
- எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினர்.
ஓசூர், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச் சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இதனை வர–வேற்று, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூர்-ராயக்கோட்டை சாலை, தேர்ப்பேட்டை சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. மாநகர பகுதி செயலாளர்கள் ராஜி, அசோக், மஞ்சுநாத் மற்றும் முன்னாள் நகர செயலாளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ்.நாராயணன் ஆகியோர் தலைமையில், பட்டாசுகள் வெடித்தும் பொது மக்க ளுக்கு இனிப்புகள் வழங் கியும் கொண்டாடினர். . அப்போது கட்சியினர், உயர் நீதிமன்ற தீர்ப்பை வர வேற்றும், எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தியும் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இதில், வட்ட செயலாளர்கள் , மாநகராட்சி கவுன்சி லர்கள்,மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தொண் டர்கள் திரளாக கலந்து கொண்டனர்,.
- பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும்.
- புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
ஓசூர் மற்றும் தேன்கனிக் கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2023-24-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள வருகிற 31-ந் தேதி கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் படிக்க விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்க ளுடன் வருகிற 31-ந் தேதிக்குள் நேரில் வந்து உரிய கட்டணம் செலுத்தி, நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி காலத்தின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, சைக்கிள் பஸ் பயண அட்டை, ஷு ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவி களுக்கு புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சி யாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சி யாளர்களுக்கு 100 சதவிகிதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற தரப்படுகிறது.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
- ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர்.
- 22-ந் தேதி அன்று கீதாஞ்சலியை சிவா கைகளால் சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கீதாஞ்சலி (வயது 21).வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவரும் காதலித்து ஒரு வருடத்திற்கு முன்பு பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை சிவாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இந்நிலையில் கீதாஞ்சலி தனது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக, சிவாவும், அவரது குடும்பத்தினரும், கீதாஞ்சலியை அடிக்கடி சித்ரவதை செய்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. கடந்த 22-ந் தேதி அன்று கீதாஞ்சலியை சிவா கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்து ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். இதுகுறித்து மத்தூர் போலீஸ் நிலை யத்தில் கீதாஞ்சலி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் கீதாஞ்ச லியின் கணவர் சிவா, மாமனார் கிருஷ்ணன், மாமியார் கஸ்தூரி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள் தங்களுக் கிடையே இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
- 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது . இந்தியாவிற்குப் பெருமையைத் தேடித் தந்த சந்திராயன்-3 விண் கலத்தின் லேண்டர் சாதனம் மாலை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
இந்த நிகழ்வை அதியமான் கல்வி நிறுவனங்களில் நேரலையில் மாணவ- மாணவிகள் கண்டு களித்தும், கைத்தட்டியும், தேசியக் கொடியைக் அசைத்தும் கொண்டாடினர். மாணவர்கள் தங்களுக் கிடையே இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.
இந்தியாவின் இவ்வு யரிய சாதனையைப் பெருமைப் படுத்தும் வகையில், அதியமான் கல்வி நிறுவனங்களின் சார்பாக ஊத்தங்கரை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதியமான் பப்ளிக் பள்ளி மற்றும் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதியமான் மகளிர் கல்வி யியல் கல்லூரியில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மல்லிகா சீனிவாசன் தலைமையில், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால்முருகன், செயலர் ஷோபா திருமால் முருகன், நிர்வாக அலுவலர் சீனி கணபதிராமன், பப்ளிக் பள்ளி முதல்வர் லீனா ஜோஸ், மெட்ரிக் பள்ளி முதல்வர் கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதிராமன், அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரி முனைவர் மணிமேகலை ஆகியோர் போலீஸ் ஆய்வாளர் பார்த்திபன் முன்னிலையில் கொடி அசைத்து வெற்றிவிழா பேரணியைத் துவக்கி வைத்தனர்.
இந்தியாவின் சாத னையை, இஸ்ரோ விஞ்ஞானி களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பை அவர்க ளின் வெற்றியை மாணவ மாணவிகள் முழக்கங்களாக முழங்கி பேரணியாக சென்றனர்.
சந்திராயன்-3 வெற்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியிடையே பெரும் நம்பிக்கையையும், பேரெழுச்சியையும் உருவாக்கி உள்ளது. மாணவ-மாணவிகள் தன்னெ ழுச்சியாக இந்தியாவின் வலிமை யையும், பெருமையையும் பரைசாற்றிச் சென்றனர். இது ஆரம்பம் முடிவல்ல. இனி வரும் காலங்களில் உலகம் வியக்கும் வண்ணம் இந்திய இளைஞர்கள், விஞ்ஞானிகள் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவர் என்பதினை உணர முடிந்தது.
இவ்வெற்றி விழா பேரணி மக்களிடையே பெரும் விழிப்புணர்வையும், இந்தி யாவின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் வலுப்பெறச் செய்துள்ளது.
- காவேரிப்பட்டிணம் தனியார் ஓட்டலில் காலை 10 மணியளவில் நடக்கிறது.
- காவேரிப் பட்டிணத்தில் உள்ள காந்தி மண்டபம் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவருமான சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ண கிரி, பர்கூர் ஊத்தங்கரை, சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட, வட்டார, நகர மற்றும் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 27 தேதி காவேரிப்பட்டிணம் ஓட்டல் பாலாவில் காலை 10 மணியளவில் நடக்கிறது கூட்டத்தில் காவேரிப் பட்டிணத்தில் உள்ள காந்தி மண்டபம் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் உள்ளிட்ட ஆலோசனை நடத்த உள்ளது எனவே கூட்டத்தில் மாநில மாவட்ட வட்டார நகர மற்றும் கட்சியின் அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோ சனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது அறிக்கை யில் சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
- 31,000 அரசு பள்ளிகளில், 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
- உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பி னர் மதியழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களிடம் கற்றல் திறன் மேம்பட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் இன்று விரி வாக்கம் செய்யப்படு கிறது. இத்திட்டத்தின் மூலம் 31,000 அரசு பள்ளிகள், 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் சூலாமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பி னர் மதியழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மகளிர் திட்ட அலுவலர் ஜாகிர் உசேன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ் அகமது மற்றும் அரசு அலுவலர்கள் ஊர் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் செட்டி மாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பாராளுமன்ற உறுப்பி னர் டாக்டர். செல்லக்குமார் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், சுப்பிரமணி, வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சிவக்குமார், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிரேமலதா, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத் தலைவர் சேகர், சிறுபான்மை பிரிவு முபாரக், காங்கிரஸ் நிர்வாகி கருணாமூர்த்தி, தேவராஜ், செல்வராஜ், சென்னப்பன், சக்திவேல், தேவநாராயணன், ஊர் கவுண்டர் மாரியப்பன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






