என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடக்கம்
- 31,000 அரசு பள்ளிகளில், 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
- உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பி னர் மதியழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்களிடம் கற்றல் திறன் மேம்பட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் இன்று விரி வாக்கம் செய்யப்படு கிறது. இத்திட்டத்தின் மூலம் 31,000 அரசு பள்ளிகள், 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் சூலாமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் காலை உணவு திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பி னர் மதியழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மகளிர் திட்ட அலுவலர் ஜாகிர் உசேன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ் அகமது மற்றும் அரசு அலுவலர்கள் ஊர் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் செட்டி மாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் பாராளுமன்ற உறுப்பி னர் டாக்டர். செல்லக்குமார் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், சுப்பிரமணி, வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சிவக்குமார், தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பிரேமலதா, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத் தலைவர் சேகர், சிறுபான்மை பிரிவு முபாரக், காங்கிரஸ் நிர்வாகி கருணாமூர்த்தி, தேவராஜ், செல்வராஜ், சென்னப்பன், சக்திவேல், தேவநாராயணன், ஊர் கவுண்டர் மாரியப்பன் உட்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






